Skip to main content

Posts

Showing posts from January, 2010

தெரு நாயின் சாயல் கொண்டவன் பற்றிய குறிப்புகள்

சாம்பல் நிற பறவைகள் இரண்டு கவிதைநோட்டின் அட்டையில் பறந்துகொண்டிருந்தன. குழந்தையொன்றை ஒப்படைப்பது போல் மிகுந்த கவனத்துடன் அவரிடம் அந்த நோட்டை இவன் ஒப்படைத்தபோது இருள் கவிய துவங்கியிருந்தது. திருவல்லிக்கேணியின் மிகப் பிரபலமான அந்த தெருவில் ஆள் நடமாட்டம் அதிகமில்லாத அந்தியில் எங்கோ ஒலிக்கும் பாடலின் வரிகள் காற்றில் மிதந்து வந்தன. பரிட்சைக்காக காத்திருக்கும் மாணவனின் படபடப்புடன் இவன் அமர்ந்திருந்தான் . சுற்றிலுமிருந்த புத்தகங்களை கண்கள் துழாவியபோதும் எதிலும் லயிக்கவில்லை மனம். மின்விசிறியின் சத்தம் பெருகி பெருகி இவனை விழுங்கிக்கொண்டிருந்தது. கவிதைத்தாள்களை வாங்கியவர் முதல் பக்கத்தை பார்த்துவிட்டு கேட்டார் “கிருஷ்ணமூர்த்தி ஏதோ கதை புஸ்தகம்னு சொன்னான்..” “இல்ல சார் கவிதைகள்.புதுக்கவிதைகள் “ இவன் பதிலிட்ட மறுகணம் அவரது தொலைபேசி அலறியது. இவனது இருத்தல் பற்றிய பிரக்ஞையின்றி அழைப்பில் மூழ்கிப்போனார் அவர். தெருவை வெறித்துக்கொண்டிருந்தவன் பூ விற்கும் பெண்ணொருத்தி கூடை நிறைய மஞ்சள் ரோஜாக்கள் சுமந்து செல்வதை கண்டு மெல்லியதாய் புன்னகைத்தான்.லேசான தூறலில் அழகாகிக்கொண்டிருந்தது அந்தி. மழைத்துளியில்

எதையாவது சொல்லட்டுமா....16

ச மீபத்தில் யோசிப்பவர் எழுதிய செருப்பு கதையைப் படித்ததும் எனக்கு ஆச்சரியமாகப் போய்விட்டது. கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு முன்னால் நானும் செருப்பு என்ற பெயரில் ஒரு கதை எழுதியிருக்கிறேன். அப்போது என் வயதும் யோசிப்பவர் வயது இப்போது என்ன இருக்கிறதோ அதுதான் இருந்திருக்கும். என் கதையை மலர்த்தும்பி என்ற சிறுபத்திரிகைதான் வெளியிட்டது. அக் கதையின் இறுதியில் செருப்பை நாய் கவ்விக்கொண்டு போய்விடும். வேலைத் தேடிப் போகும் ஒரு படித்த இளைஞனின் சோகக் கதை நான் எழுதியது. யோசிப்பவர் ரொம்பவும் வித்தியாசமாக இன்னொரு செருப்பு கதையை எழுதி உள்ளார். வரும் விருட்சம் இதழில் அக் கதை பிரசுரமாக உள்ளது. செருப்பைத் தூக்கி வீசி எறிவதைப் பற்றி கதை எழுதியிருக்கிறார்.கடைசியில் கூட யார் செருப்பைத் தூக்கி எறிந்தது என்பது தெரியவில்லை.செருப்பைத் தூக்கி எறியும் கலாச்சாரத்தை நையாண்டி செய்திருப்பதுதான் கதை. இன்றைய சூழலில் கதை எழுதும் உள்ளங்கள் ஒன்று சேர வேண்டும். நம்மைச் சுற்றிலும் இயந்திரத்தனமான வாழ்க்கை நடந்து கொண்டிருக்கிறது. கதையும் கவிதையும்தான் இதிலிருந்து தப்பிக்க வழி செய்யும். கொஞ்சம் யோசித்துப்பார்த்தால் நான் இதெல்லாம் உணர

தூறல் மழைக்காலம்

குளிர் காற்றினூடான வானம் இளநீலம் மெல்லிய நீர்த்துளிகள் இசை சேர்த்து வந்து மேனி முழுதும் தெளிக்கின்றன நீண்ட காலங்களாக சேகரித்து வைத்த அன்பை அமானுஷ்ய ஈரத்தோடு தளிர் விட்டிருக்கும் அகத்தி பெண் நெற்றிப் பொட்டு வடிவ பச்சை நீளிலை மரத்தில் ஊதாப்பூக் காய்கள் கொத்தியுண்ணும் ஏழெட்டுக் கிளிகள் செந்நிறச் சொண்டுகளுடன் மாதுளம்பூக்கள் தனிமையை அணைத்தபடி அடுத்த பாடலை நான் ஆரம்பிக்கலாம் அதன் பிண்ணனியில் மழையும் நதியின் ஈரலிப்பும் குளிரின் வாசனையும் இதே பசுமையும் என்றுமிருக்கும் நீயும் என்னுடன் இருந்திருக்கலாம் -

மகத்தான..

சின்ன மகள் மேடையில் பாடுகிறாள் அழகாகப் பாடும் வரிகளில் அம்மா இலயிப்பதில்லை ஸ்வரம் பிறழும் போதெல்லாம் தவறாமல் நெளிகிறாள் பாடிய மற்ற குழந்தைகள் அவள் நினைவிலேயே இல்லை முடிவை அறிவிக்கும் முன் பயந்திருக்கிறாள் அறிவித்த பின்பு அழத் துவங்குகிறாள் ஆனந்தமோ அயர்ச்சியோ அல்லது அழுபவள் மட்டும் அறிந்த வேறெதுவோ அம்மாவின் கைப்பிடித்து உள்ளே நுழைந்த குழந்தை அம்மாவைக் கைத்தாங்கி அழைத்துச் செல்கையில் வடகிழக்கில் பயணிக்கும் பச்சை அம்பை சில விரல்கள் வருடுகின்றன

மூன்று கவிதைகள்

விஜய தசமி சென்ற விஜயதசமி கடல் கடந்த சீதள பூமியில் இன்று இங்கே சொந்த வீட்டில் பூஜையறையில் யாருமில்லாத தந்நதனிமை முன்னால் வாக்தேவதை நீ சுற்றி ஏனைய தேவதைகள் தேவர்கள் வெளியில் வீதியில் வாகனங்களின் சந்தடியில் உள்ளே மனப்பாதையில் வாழ்வின் கசப்புக்களில் வழுதிச்செல்லும் மனதை பிடித்திழுத்து உன் பாதசரணத்தில் உன் வீணைநாதத்தில் கரைத்திடும் விடாமுயற்சி வெற்றிபெற பெயரினை நீக்கிய பிறகும் செத்தபின் சிவலோகம் வைகுண்டம் இல்லை நரகமோ போவது இருக்கட்டும் விட்டுவந்த வெறுங்கூண்டை கண்ணாடிப்பேழைக்குள் காட்சிப்பொருளாக்கி ஊரூராய் இழுத்துவந்து விழாவெடுப்பதும் கட்டையில் வெந்தபின்னர் கலையங்களிலாக்கி இங்குமங்கும் இறைப்பதும் பத்திரப்படுத்துவதும் அங்கிங்கில்லானபடி எங்குமே நிறைந்திடும் ஆத்மாவின் சாந்திக்கா இல்லை ஹரி ஸ்ரீ கணபதாயே நமஹ இன்னுமொரு விஜயதசமி வாக் தேவதையே உன் முன, வாக்குகள் வந்தழுத்தி திக்குமுக்காடித்திணறிப் பரிதவித்த நாட்கள பழங்கனவாய் இன்று வாக்குகள் வழுதிச்செல்லும் சூன்யமான வற்றிவரண்ட நெஞ்சமுடன் வீற்றிருக்கிறேன் எழுத்தாணி கையிலெடுத்து உனை முன்நிறுத்தி எண்ணும் எழுத்தும் கற்பித்த ஆதிநாளில் ஆசான் மடியிலிருந்து அ

என்னை ஆளும் விலங்குகள்

எல்லாமாயும் எனக்குள்ளே ஒளிந்திருக்கின்றன பல விலங்குகள் பூசி மெழுகும் சொற்களெதுவும் அவையிடத்திலில்லை சில மீன்களைப் போல அமைதியாயும் இன்னும் சில தேவாங்குகளைப் போல சோம்பலாயும் சில நேரங்களில் மட்டும் எறும்பு , தேனி , கரையான்களைப் போல சுறுசுறுப்பாகுபவையுமுண்டு காலத்தைப் பயனுள்ளதாக நகர்த்திப் போவதாகப் பெருமை பேசி திரும்பிப் பார்க்கையில் தடங்களேதுமற்ற பொழுதில் பறவையாயும் கோபமுறுகையில் சீறும் சர்ப்பத்தைக் கொண்டு சிலதும் நன்றி காட்டுகையில் நாயின் வாலாட்டுதலோடும் நன்றி மறப்பதில் பூனையின் மெதுநடைத் திருட்டு போலவும் குவிந்த பல குணவியல்புகளோடு உலாவருகையில் புன்னகைப்பது மட்டும் மனிதத்தை ஒத்திருக்கிறது

செருப்பு

அ ந்த ஒற்றை செருப்பு பின்னாலிருந்து அழகாக ஸ்கேட் செய்து முன்னால் வந்து நின்றது. முன் வரிசையில் தனியாக அமர்ந்திருந்த நான் கவனிக்கவேயில்லை. நியூரல் நெட்வொர்க்ஸ் நடத்திக் கொண்டிருந்த சந்தியா மேடம் முகத்தில் ஏற்பட்ட திடீர் பிரமிப்பை கவனித்த பிறகே , அவரின் பார்வை கோணத்தில் பார்த்தால் , அந்த செருப்பு! எங்கள் கிளாஸில் மொத்தம் பதிமூன்று ஆண்கள் , ஆறு பெண்கள். இந்த பதிமூன்றில் எப்படியும் தினசரி 7,8 இருக்கைகள்தான் அதிகபட்சம் நிரம்பும். மற்றவர்களெல்லாம் அவுட்ஸ்டாண்டிங் ஸ்டூடண்ட்ஸ் - கல்லூரிக்கே! எனக்கும் மற்ற பன்னிரெண்டு பேருக்கும் முதல் வருடம் நடந்த எக்ஸ்போவிலேயே கொஞ்சம் பிரச்சனை. நான் எக்ஸ்போவை நல்லபடியாக நடத்த வேண்டும் என்று நினைத்த தேர்ட் இயர் மாணவர்களுக்கு உதவினேன். தேர்ட் இயர் பசங்களை பிடிக்காததால் , எக்ஸ்போவை கெடுக்க வேண்டும் என்று நினைத்த செகண்ட் இயர் மாணவர்கள் , அவர்களை கைக்குள் போட்டுக் கொண்டார்கள். இதெல்லாம் போன வருடப் பிரச்சனை. இப்பொழுது நாங்கள் செகண்ட் இயர். சந்தியா மேடம் கொஞ்சம் கருப்பு. பாடமும் அவ்வளவாக நடத்தத் தெரியாது. அது என்னவோ தெரியவில்லை , என் எம்சிஏ படிப்பில

எதையாவது சொல்லட்டுமா / 15

இந்த முறை புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு 5 புத்தகங்கள் விருட்சம் வெளியீடாக வந்துள்ளன. இந்தப் புத்தகங்கள் கொண்டு வந்த வேகத்தில் விருட்சம் உரிய நேரத்தில் கொண்டு வர முடியவில்லை. காரணம் இடம் மாற்றம். நான் என்னை சரி செய்து கொண்டுவிட்டேன். இதோ விருட்சம் முதல்வாரம் பிப்பரவரி மாதம் வந்து விடும் என்று நினைக்கிறேன். அடுத்த முறை நவீன விருட்சம் இதழை இன்னும் சீக்கிரம் கொண்டு வர வேண்டுமென்று நினைக்கிறேன். இன்னொன்று நினைக்கிறேன். இதுவரை blogல் வந்த கவிதைகளைத் தொகுத்துப் புத்தகமாகக் கொண்டு வரலாமா? அப்படி ஒரு புத்தகம் வந்தால் அது அற்புதமான புத்தகமாக அமையலாம். தமிழில் என்ன சாதிக்கலாம் என்பதை தமிழர்களாகிய நாம் எழுதிய கவிதைகள். நான் தேர்ந்தெடுத்தக் கவிதைகள் குறித்து தெளிவான பார்வை எனக்குண்டு. அது எளிமை. இனி புத்தகங்கள் பற்றி எதாவது சொல்கிறேன். கவிதைக்காக - ஞானக்கூத்தன் - விலை ரூ.150 - 256 பக்கங்கள் கொண்ட இப் புத்தகத்தில் கவிதைகளைக் குறித்து 34 கட்டுரைகள் உள்ளன. அந்தக் காலத்தில் கணையாழி இதழில் தொடர்ந்து மாதம் மாதம் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. கவிதைகள் குறித்து புதிதாக சிந்திக்க விரும்புவர்கள்

எதையாவது சொல்லட்டுமா / 14

தமிழில் விமர்சர்கள் மிகக் குறைவு. ஆரம்பத்தில் க.நா.சுதான் தமிழில் விமர்சனத்தைத் தொடங்கி வைத்தார். படைப்பாளியாக இருந்த க.நா.சு விமர்சனத்தையும் ஆரம்பித்து வைத்தார். அவருடன் அதை வளப்படுத்திய பெருமை சி சு செல்லப்பாவிற்கும் உண்டு. க.நா.சு ஒரு முறை என்றால், சிசு செல்லப்பா வேறு முறையில் விமர்சனத்தை அணுகினார். சி சு செல்லப்பா மேலை நாட்டு புத்தகங்களைப் படித்துவிட்டு தமிழில் அது மாதிரி முயற்சியை மேற்கொண்டார். க நா சு எந்தத் தியரியையும் படிக்கவில்லை. அவர் படிக்கிற புத்தகங்களைப் பற்றி அபிப்பிராயம் சொல்ல ஆரம்பித்தார். பத்து பேர்கள் என்று லிஸ்ட் போட ஆரம்பித்தார். அதை எதிர்த்தவர்களும் உண்டு. வேகமாகப் புத்தகங்களைப் படித்துவிட்டு வேகமாக அபிப்பிராயம் சொல்லும் பழக்கத்தை ஆரம்பித்தவரும் க.நா.சுதான். சி சு செல்லப்பா மணிக்கொடி எழுத்தாளர்களுடன் நின்றுவிட்டார். அலசல் முறை விமர்சனம் என்று மேலே போக முடியவில்லை. க.நா.சுவோ அப்படியில்லை. எந்தப் புத்தகமாக இருந்தாலும் சரி, ஏன் குமுதம், ஆனந்தவிகடன் போன்ற பத்திரிகைளையும் பற்றியும் எழுதி விடுவார். விமர்சனத்திற்கென்று தனி கவனம் செலுத்திய க.நா.சுவும், சி.சு

புத்தாண்டுக் கனவு

நிறைந்த கனவுகளின் பாரம் தாங்காது மனப் பொதி ஒரேயடியாக வெடித்து அதிர்ஷ்டத்தின் குறியுடனான ஒரு கனவு கவிதையொன்றுக்கு மழையெனப் பெய்யும் நாசிக்கடியில் குறு மீசைக்குப் பதிலாக மீசை வளர்த்துக் கொண்ட ஹிட்லர் *நீலப் படைகளுக்கு இடையிலும் *சிவப்புப் படைகளுக்கு இடையிலும் ஒரே நேரத்தில் நடமாடுவார் ஒரே இடத்தில் சுழலும் ரூபாய் நாணயத்தில் தலைப் பக்கத்திலும் பூ பக்கத்திலும் மீசை முறுக்கும் ஹிட்லர் குப்புறக் கவிழ்ந்து கனவுக்கு மெலிதாகச் சிரிப்பார் *நீல வர்ணத்தை வானமும் வெறுக்கும் **பச்சை வர்ணத்தை மரம்,கொடிகள் வெறுக்கும் *சிவப்பு வர்ணத்தை குருதி வெறுக்கும் கனவுக்கு ஹிட்லரே சிரிப்பார் புது வருடத்துக்கு புதிதாகக் காணும் கனவு எத்தனை மென்மையானது? பழைய கனவுக்கு உரித்தானவன் நான் எவ்வளவு முரடானவன் ? மூலம் - மஞ்சுள வெடிவர்த்தன (சிங்களமொழி மூலம்) 20091230

மொழிபெயர்ப்புக் கவிதை

ஜனாதிபதித் தேர்தல் ( வீரனைத் தேடும் போ ட்டி ) தின்றுகொண்டு தின்றுகொண்டு அவர்கள் ஒன்றாக வரும்பொழுது ஒருவாறு தப்பித்த எனக்கு கால்களை மேலே போட்டவாறு இனி பார்த்துக் கொண்டிருக்கலாம் ஒருவன் மற்றவனைத் தின்றுகொள்ளும் போது குட்டை வால் எஞ்சும் வரைக்கும் மூலம் - மஹேஷ் முணசிங்ஹ (சிங்கள மொழியில்)

சாரை சாரையாய்...

ஒற்றையடிப் பாதையில் சாரை சாரையாக நேரும் எதிருமாகப் பரபரப்புடன் சென்று கொண்டேயிருக்கிறார்கள் சிலர் உணவுப் பொட்டலத்தோடு எதிர்வரும் ஒவ்வொருவரையும் கடக்கும்போதும் ஒரு விநாடி ஏதோ பேசிக்கொள்கிறார்கள் எங்கிருந்து வருகிறார்கள் எங்கே போகிறார்கள் எதுவும் புலப்படவில்லை அறியும்பொருட்டு பின் தொடர்ந்தேன் ஒரு இடத்தில் பலர் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர் யாரோ கொண்டுவந்த உணவை யாரோ சாப்பிடுகிறார்களா இல்லை இவ்வளவு பேரும் ஒரே குடும்பத்தார்களா புரியவில்லை வியந்தேன் சாப்பிட்டு முடித்த ஒருவன் தண்ணீர் கூட குடிக்காமல் எங்கோ ஓடுகிறான். இந்த ஆண்டிற்கான எட்டு கேசுவல் லீவில் மீதமிருந்த இரண்டை டிசம்பரில் எடுத்துத் தூங்கிக் கழித்துக் கொண்டிருந்த முதல் நாளில்தான் இவர்களைக் கண்டேன். எடுத்துவந்த விஷப்பொடியைத் தூக்கி எறிந்துவிட்டு சிறிது சர்க்கரையை அவர்களின் மேல் தூவிவிட்டு அலுவலகம் புறபட்டுவிட்டேன்.