Skip to main content

Posts

Showing posts from May, 2021

கவிதையும் ரசனையும் – 17 – 1

  தேவதச்சனின் முழுத் தொகுப்பு அழகியசிங்கர் நான் இப்போது எடுத்துக்கொண்டு எழுதப்போகும் கவிதைப் புத்தகத்தின் பெயர் ‘மர்ம நபர்’ என்ற தேவதச்சனின் முழுத் தொகுப்பு. இது தேவதச்சனின் முழுத் தொகுப்பு. 350 கவிதைகள் அடங்கிய தொகுப்பு. இத் தொகுப்பு ஏப்ரல் 2017ல் வெளிவந்தது. ஆனால் இன்னும் தேவதச்சன் கவிதைகள் எழுதிக்கொண்டிருப்பார். கவிதைகளைப் பற்றிச் சிந்தித்துக்கொண்டு கவிதைகள் எழுதுபவர் தேவதச்சன். பெரும்பாலும் கவிதைகள் படிக்கும்போது எத்தனைக் கவிதைகளை ஒரு புத்தகத்தில் என்னால் ரசிக்க முடிகிறது என்று யோசித்துப் பார்ப்பேன். பலருடைய கவிதைப்புத்தகங்களில் என்னால் பெரும்பாலான கவிதைகளை ரசிக்க முடியவில்லை. கவிதைகள் எழுதும் பலருக்கும் எதற்குக் கவிதை எழுத வேண்டுமென்று தெரிவதில்லை. கவிதை மாத்திரம் அவர்களுக்குத் தானாகவே வந்து விடுவதாக நினைக்கிறார்கள். அதாவது கவிதை அவருடைய பழக்கத்திற்கு ஆளாகாமல் கவிதை செயல்படுவதாக நினைக்கிறேன். ஆனால் தேவதச்சன் உணர்ந்து கவிதை எழுதுகிறார். இத்தனை வரிகள்தான் கவிதைக்கு என்று முன்னதாகவே நினைக்கிறார். அ

சுந்தர ராமசாமியின் பிறந்தநாள் இன்று

  அழகியசிங்கர் ஆண்டு ஞாபகமில்லை.  சுந்தர ராமசாமி  சென்னையில் அவர் மனைவியுடன் ஏதோ விழாவிற்கு வந்திருந்தார்.   அவரை நானும், சிபியும் போய்ப் பார்த்தோம்.  விருட்சம் இலக்கியக் கூட்டத்தில் பேச முடியுமா என்று கேட்டேன்.  ஒப்புக்கொண்டார். வீட்டிற்குக் கூப்பிட்டேன்.  வருகிறேன் என்றார்.  அவரும் அவர் மனைவியும் வீட்டிற்கு வந்தார்கள்.  வீட்டிலிருந்த  என் அப்பா, மாமியாரிடம் அறிமுகப் படுத்தினேன். இப்போதைய காலமாக இருந்தால்  செல்பி  எடுத்துக்கொண்டிருப்போம்.  அப்போதெல்லாம் அதெல்லாம்  தோணக்  கூட இல்லை. மாலைதான் விருட்சம் கூட்டம்.  வழக்கம்போல் கூட்டம் ஆரம்பிக்கும் முன்  பதற்றமடைவேன் .  அன்றும் அப்படித்தான். சுந்தரராமசாமி   காரில்  வந்தார்.  கூடவே  சிபிச்செல்வன் .  நான்  பைக்கில்  கிளம்பினேன்.   கொஞ்ச தூரத்தில் என்  பைக்  பள்ளத்தில் இறங்கி நான் கீழே விழுந்தேன்.  காரில்  இருந்தபடி சுந்தர ராமசாமி இதைக் கவனித்து விட்டார்.  சிபியை உடனே  போய்ப் பார்க்கச் சொன்னார்.  உடனே சுதாரித்துக்கொண்டேன்.   அன்று கூட்டம் சிறப்பாக நடந்தது.  அவர் பேசுவதை  ஆடியோவில்  பதிவு செய்திருந்தேன்.  இப்போது அளிக்கிறேன். 

விருட்சம் நிகழ்ந்தும் 53வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி

விருட்சம் நிகழ்ந்தும் 53வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி. 29.05.2021 அன்று நடந்தது. காணொளி காட்சி.

சூம் மூலமாக விருட்சம் நடத்தும் பன்னிரண்டாவது கதை வாசிப்புக் கூட்டத்தின் காணொளிப் பதிவு,

அழகியசிங்கர்    சூம்   மூலமாக விருட்சம் நடத்தும் பன்னிரண்டாவது  கதை வாசிப்புக்  கூட்டத்தின் காணொளிப் பதிவு,   28.05.2021 அன்று சனிக்கிழமை நடந்தது. ஜெயகாந்தன், ஆதவன் என்ற இரு கதைஞர்களைக் குறித்து கூட்டம்.   8 இலக்கிய நண்பர்கள் உரை  நிகழ்த்தினார்கள் . 

விருட்சம் நிகழ்ந்தும் 53வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி. 29.05.2021 அன்று சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு.

  அழகியசிங்கர் சூம்  மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 53வது  கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி.   சனிக்கிழமை -  மாலை 6.30மணிக்கு 29.05.2021ல் நடைபெற உள்ளது.  நிகழ்ச்சியைச்  சிறப்பிக்க வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்.இந்த முறை கவிதையைப் பற்றி உரையாடல் நிகழ்ச்சிக்கு அன்புடன் அழைக்கிறேன். சில கேள்விகளை எழுப்பி  அதற்குத்  தகுந்த பதில்களை அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

சூம் மூலமாக விருட்சம் நடத்தும் 12வது கதை வாசிக்கும் கூட்டம் வெள்ளிக்கிழமை 28.05.2021 அன்று மாலை 6.30 மணிக்கு.

அழகியசிங்கர் ஜெயகாந்தன், ஆதவன் என்ற இரு கதைஞர்களின் கதைகளைத் தேர்ந்தெடுத்து 8 நண்பர்கள் கதைகளின் சிறப்புகளைச் சொன்னார்கள். எல்லோரும் அவசியம் கலந்து கொள்ளவும். சூம் மூலமாக விருட்சம் நடத்தும் 12வது கதை வாசிக்கும் கூட்டம் Zoom Meeting Time: May 28, 2021 06:30 PM India Join Zoom Meeting https://us02web.zoom.us/j/87038268598?pwd=dUtUd1NEWGlQNXN5SmVQenFvWGtQdz09 Meeting ID: 870 3826 8598 Passcode: 769289

நூற்றாண்டில் 3 புத்தகங்கள்

  அழகியசிங்கர் சமீபத்தில் என் நண்பர் கு.மா.பா. திருநாவுக்கரசு, புகழ்பெற்ற அவருடைய தந்தையாரின் 3 புத்தகங்களைக் கொண்டு வந்துள்ளார். இந்த 3 புத்தகங்களில் நான் அதிகமாக விரும்பியது கு.மா.பா வின் திரைப்படப் பாடல்கள். 1960 ஆண்டில் குழந்தைகள் கண்ட குடியரசு என்ற படத்தில் குமாபாவின் பாடலான சிட்டு சிட்டு சிட்டு - நீ செய்யாதே பகட்டு - உன் வெத்துவேட்டு நம்மகிட்ட வேதாளம் மூட்டைகட்டு என்ற பாடலை எப்படிப் பாடியிருப்பார்கள் என்பதை அறிய ஆசை. மேலும் இந்தப் புத்தகம் ஒரு சிறந்த ஆவணமாக இருக்குமென்று தோன்றுகிறது. அவருடைய அம்பிகாபதி என்ற படத்தில் எழுதிய புகழ் பெற்ற பாடலான 'மாசில்லா நிலவே நம் காதலை மகிழ்வோடு மாநிலம் கொண்டாடுதே...கண்ணே' என்ற பாடல் எப்போதும் எல்லோருடைய மனதிலும் இருக்கும். 1957ஆம் ஆண்டிலிருந்து 1961ஆம் ஆண்டு வரை அவர் இயற்றிய 256 பாடல்களை இந்தப் புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார்கள். வழக்கம் போல் சில பாடல்கள் பதிவு செய்யக் கிடைக்கவில்லை. அவருடைய மூன்று புத்தகங்களையும் வழக்கம்போல் நடைபெற்ற கவிதை வாசிக்கும் கூட்டத்தில் அறிமுகப்படுத்தினேன். எல்லோரும் புத்தகங்களை வாங்குங்கள் என்று கே