Skip to main content

கவிதையை நேசிக்கும் கூட்டத்தில்...

துளி - 193



அழகியசிங்கர்



கவிதை நேசிக்கும் கூட்டங்களில் நான் கவிதைப் புத்தகங்களை அறிமுகப்படுத்தும் வழக்கத்தை வைத்திருக்கிறேன்.

49வது கவிதை நேசிக்கும் கூட்டத்தில் 2 கவிதைப் புத்தகத்தை அறிமுகப் படுத்திúன்ன. சுரேஷ் ராஜகோபால் எழுதிய இரண்டு கவிதைப் புத்தகங்கள். 1. ஆர்ப்பரிக்கும் கடல் 2.
வாடாமல்லி

நேற்று நடந்த 50வது கவிதைக் கூட்டத்தில் நான் அறிமுகப் படுத்திய கவிதைப் புத்தகம் கரையும் மணித்துளியில் ஒளிரும் நொடிகள். எழுதியவர் மனோஹரி.

சுரேஷ் ராஜகோபாஙூன் வாடாமல்லி என்ற புத்தகத்திலிருந்து.

புத்தகங்கள் நடுவிலே

புத்தகங்கள் நடுவிலே
நான் பயத்திலே இருந்தேன்
என்னருகே புத்தகங்கள்
நடுக்கத்தில் இருந்தன
புதுசு புதுசாக நூல்கள்
வந்தவண்ணம் இருந்ததால்
பயம் மட்டும் கூடிக்கொண்டே
போயின புத்தகங்கள்போலே

'கரையும் மணித்துளியில் ஒளிரும் நொடிகள்' என்ற மனோஹரி கவிதைப் புத்தகத்திலிருந்து,

மீனைக் கொத்திய
பறவையின்
சிறகைப் பற்றிக்”
கொண்டது
துளி கடல்....!



Comments

Popular posts from this blog