அழகியசிங்கர்
சுஜாதா
விஞ்ஞானச் சிறுகதைகள் என்றால் எனக்கு சுஜாதா என்ற எழுத்தாளரைத்தான் ஞாபகத்திற்கு வரும். அவர்தான் தமிழில் அறிவியல் கதைக்கு ஆரம்பம்.
உயிர்மை வெளியிட்டுள்ள விஞ்ஞானச் சிறுகதைகள் என்ற புத்தகத்தில் அவர் எழுதிய முன்னுரையைப் படிக்கும்போது பல விஷயங்களை அறிந்துகொள்ள முடிகிறது.
'எழுத ஆரம்பித்து நாற்பதாண்டுகளாகின்றன. அப்போதிலிருந்தே விஞ்ஞானச் சிறுகதைகள் என்று பத்திரிகையாசியர்களிடம் குறிப்பிடாமலேயே வாசகர்களிடம் கடத்தியிருக்கிறேன்' என்று எழுதியிருக்கிறார் முன்னுரையில்.
'விஞ்ஞானக் கதைகள் அப்படி ஒன்றும் செப்பிடுவித்தையல்ல, கற்பனை வெள்ளத்திற்கு மற்றொரு வடிகால் என்று தமிழர்களுக்குக் காட்ட முயன்றிருக்கிறேன்
'தொடர்ந்து பிடிவாதமாக இவ்வகைக் கதைகளை மற்ற பேர் எழுதுகிறார்களோ இல்லையோ நான் எழுதுவதாக உத்தேசித்திருக்கிறேன். இந்தக் கதைகள் வெளிவந்த சமயத்தில் வாசகர்களுக்கு உவகை அளித்தன. இவற்றை மறுபடி படிப்பவர்களுக்கும் புதிய தலைமுறையினருக்கும் அதே போன்ற உவகை ஏற்படும் என நம்புகிறேன்.'
இதெல்லாம் உயிர்மை வெளியிட்டுள்ள 'சுஜாதாவின் விஞ்ஞானச் சிறுகதைகள்' என்ற தொகுப்பில் முன்னுரையில் எழுதியது;.
அதேபோல் 'அறிவியல் புனைகதைகளின் கூறுகள்' என்று தமிழ் இனி 2000 என்ற மாநாட்டில் வாசிக்கப்பட்ட கட்டுரையும் இத் தொகுப்பில் உள்ளது.
கட்டாயம் ஒருவர் அதையும் படிக்க வேண்டும். இந்த நெடுங் கட்டுரையில் ஒரு சில பகுதிகளைக் குறிப்பிடலாமென்று நினைக்கிறேன்.
விக்கிரமாதித்தன் கதைகள் பல சைஃபி தகுதி பெறுகின்றன. இரு நண்பர்களிடையே தலையும் உடலும் மாறிப்போய் யார் உண்மையான கணவன் என்று மனைவி தடுமாறும் விக்கிரமாதித்தன் கதை உண்மையான சைன் ஸ்பிக்ஷன் (இதை கிரீஷ் கர்னாட் ஹயவதானா என்ற அற்புதமான நாடகமாக மாற்றினார்)உர்சூலா லா குவைன் எழுதிய ஐலண்ட் ஆஃப் இம்மார்டல்ஸ் என்னும் கதை விக்கிரமாதித்தன் கதை போலத்தான் இருக்கிறது. ஒரு வகை கொசு கடிப்பதால் ஒரு தீவில் உள்ளோர் சாகாவரம் பெறுகிறார்கள் என்பது கதையின் கரு - அதைச் சொல்லும் முறை நவீனச் சிறுகதை பாணியில் யதார்த்தத்துக்கு அருகில் இருக்கும். கதை என்னவோ அரே மந்திர தந்திரக் கதைதான். இவ்வகைக் கதைகள் நிறைய உள்ளன.
இவ்வகையில் முதல் சைன்ஸ்ஃபிக்ஷன் கதை தமிழில் 'பாரதியின் காக்காய்பாராளுமென்ட் என்று சொல்லத் தோன்றுகிறது.
(இன்னும் வரும்)
Comments