Skip to main content

சத்யஜித்ராயின் திரைக்கதை.. "

 துளி - 192


"


அழகியசிங்கர்







சத்யஜித்ராயின் நூற்றாண்டு இன்று.   சில ஆண்டுகளுக்கு முன்னால் அபுர் சன்ஸôர் என்ற அவருடைய திரைக்கதையை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழி பெயர்த்தேன்.

'ஒரு மேதையின் ஆளுமை' என்ற தலைப்பில் சத்யஜித்ராயைப் பற்றி பொன் விஜயன் அவர்கள் ஒரு புத்தகம் கொண்டு வருவாரென்று நான் முதலில் நம்பவில்லை.  ஆனால் 1994ல் 136 பக்கங்கள் கொண்ட ராயல் அளவில்  புத்தகம் ஒன்றைக் கொண்டு வந்துவிட்டார்.  அப் புத்தகத்தில் 'அபுர் சன்ஸôர்' என்ற சத்யஜித்ராயின் திரைக்கதையை மொழிபெயர்க்க எனக்கு வாய்ப்புக் கொடுத்திருந்தார்.  அதைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டேன்.   கிட்டத்தட்ட ஒரு புத்தகம் கொண்டு வரும் அளவிற்கு அந்த மொழிபெயர்ப்பு அமைந்ததுடன் அல்லாமல், 'ஒரு மேதையின் ஆளுமை' என்ற புத்தகத்தில் அதிகப் பக்கங்களை என் மொழிபெயர்ப்பு எடுத்துக்கொண்டது.  

136 பக்கங்கள் கொண்ட மேதையின் ஆளுமை என்ற புத்தகத்தின் விலை ரூ.20தான்.  1994 ஆம் ஆண்டில்.  பொன்விஜயனின் விடாமுயற்சிதான் புத்தகம் வெளிவரக் காரணம்.   எத்தனைப் பிரதிகள் அச்சடித்தார்,  புத்தகம் மூலம் செலவெல்லாம் போக அவருக்குத் தேவையான அளவு பணம் கிடைத்ததா என்ற விபரம் எல்லாம் எனக்குத் தெரியவில்லை. 

பொன்விஜயனை நினைக்கும்போது üபுதிய நம்பிக்கைý என்ற பெயரில் அவர் கொண்டு வந்த சிறு பத்திரிகையும், சோகமான அவர் உருவமும்தான் ஞாபகத்திற்கு வரும்.  வீட்டிலேயே லெட்டர் பிரஸ் வைத்துக்கொண்டு அச்சுக் கோர்த்து சைக்கிளில் அச்சடிக்க வேறு இடத்திற்கு எடுத்துக்கொண்டு போகும் காட்சி இன்னும் என் மனதில் நிழலாடுகிறது.  அது ஒரு துன்ப நிகழ்ச்சியின் தொடர்ச்சி.

தற்செயலாக ஒரு மேதையின் ஆளுமை புத்தகத்தை என் இடத்தில் கண்டுபிடிக்க நேர்ந்தது. அதில்  மொழிபெயர்த்திருக்கும் அபுர் சன்ஸôரைப் பார்த்தவுடன்  அதை ஒரு புத்தகமாகக் கொண்டு வரவேண்டுமென்று ஆசை வந்துவிட்டது.  அந்தக் காலத்தில் மொழிபெயர்ப்புக்கு எனக்கு வாய்ப்பளித்த மறைந்த பொன் விஜயனுக்கு என் நன்றி எப்போதும் உண்டு.

இந்தப் புத்தகம் விலை ரூ.50 தான்.  சத்யஜித்ராயின் நினைவு நாளில் இதைக் குறிப்பிட விரும்புகிறேன்.

Comments