அரசன் போல் ஒக்காந்திருக்கும் ஊர் தலைவர்களே - எம் பேச்சையும் கொஞ்சம் கேளுங்கலே .... கல்லுப்பட்டி கர வேட்டி கந்தசாமி எம் பேரு கார வீடு எனக்கில்ல காசுபணமும் அதிகமில்ல.... அரச மரம் சுத்தி வந்து வருஷம் பல போனபின்னே ஒத்தப்புள்ள பெத்தெடுத்தேன் அவன ஒசத்திகாட்ட ஆச பட்டேன் ,,, கஷ்டப்பட்டு படிக்கவச்சேன் - எம் புள்ள கலெக்டராக ... உழுது உழுது உரிகிபோனேன் - எம் புள்ள கமிஷனராக ... கஷ்டப்பட்டு படிச்சப்பய கலெக்டரும் ஆகிபுட்டன் ... காசுபணம் கூடுனதும் என்னைய வீதில விட்டுபுட்டான் .. எல்லோருக்கும் ஒன்னு சொல்லிக்கிறேன் மனுசபயல நம்புறதுக்கு மரத்த நம்பலாமுன்னு ....