Skip to main content

Posts

Showing posts from June, 2021

இரண்டு புத்தகங்கள்...

 துளி - 206 அழகியசிங்கர் ஒவ்வொரு வாரமும் நடத்தும் கவிதை நேசிக்கும் கூட்டத்தில் நான் கவிதைப் புத்தகங்களை அறிமுகப்படுத்துகிறேன்.  நான் அறிமுகப்படுத்துகிற கவிதைப்  புத்தகத்திலிருந்து  ஒரு கவிதையும் வாசிக்கிறேன். கவிதை நேசிக்கும் கூட்டத்தை ஒரு மாதத்தில்  நான்கு  விதமாய்ப் பிரிக்கிறேன்.   முதல் வாரம் எல்லோரும் கவிதைகள் வாசிக்க வேண்டும். இரண்டாவது வாரம் மற்றவர்கள் கவிதைகளை வாசிக்க வேண்டும். மூன்றாவது வாரம்  மொழிப்பெயர்ப்புக்  கவிதைகளை வாசிக்க வேண்டும். நாலாவது வாரம் கவிதையைக் குறித்து உரையாடல்.  இதுமாதிரி எங்காவது யாராவது கவி அரங்கம்  நடத்துகிறார்களா ? அப்படி நடத்திக்கொண்டிருந்தால் விபரம் தரவும். இந்த  நான்கு  வாரங்களிலும் நான் கவிதைப் புத்தகம் அறிமுகப்படுத்துவேன். கடந்த இரண்டு வாரங்களில் நான் அறிமுகப்படுத்திய கவிதைநூல்கள் குறித்து இங்கே குறிப்பிட விரும்புகிறேன். முதல் கவிதைத் தொகுதி  'சுனையில்  நீரருந்தும்  சிறுத்தையின் நாக்கு' என்றப.கு.ராஜனின் மொழிபெயர்ப்புப் புத்தகம். அதிலிருந்து  ஒரு கவிதை. அமிரிதா   ப்ரிதம்  கவிதை சங்கடம் இன்றைக்குச் சூரியன் ஏதோ  சங

ஏ,டி.எம் கொள்ளையன் ஹரியானாவில் சிக்கினான்

  துளி - 205 அழகியசிங்கர் இந்தத் தலைப்புச் செய்தியை நாள் ஒரு தினசரியில் படித்தேன்.  திகைப்பு அடைந்து விட்டேன்.  எப்படி யாருக்கும் தெரியாமல் பணத்தை எடுக்க முடியும்.  இந்தத் திருட்டில்  ஏடிஎம்   கருவிகளைக்  கொள்ளையர்கள் உடைக்க வில்லை. பத்தாண்டுகளுக்கு முன் நான் ஒரு தேசிய வங்கியில் பணிபுரிந்து கொண்டிருந்தேன்.  அங்கு ஒரு பெண் அலுவலர் நேர்மையானவர், பணி புரிவதில் நல்ல அனுபவமுள்ளவர் மீது ஒரு பழி. அவர் எப்போதும்  ஏடிஎம்மில்  பணத்தை வைப்பவர்.  கிடிக்குப்பிடி அலுவலகப் பணிகளுக்கிடையே பணத்தையும்  ஏடிஎம்மில்  வைத்துவிட்டு வந்து விடுவார். அவருடைய  செய லில்  எந்தத் தவறும், எப்போதும்  ஏற்படாது . அவர் ஒரு முறை வைத்து விட்டு வரும்போது 1லட்சம் ரூபாய்  ஏடிஎம்மில்   காணோம் .  தலைமை  அலுவலகத்திலிருந்து   கண்காணிப்புத்  துறையினர்  ஓடி வந்து அவரைப் பலவாறு கேள்விகள் கேட்டுக் குடைந்துகொண்டே இருந்தார்கள்.  காமெரா   பொருதியிருந்ததால்   காமெரா  மூலம் பார்த்தார்கள்.  பின் பணம் பட்டுவாடா செய்த சிப்பந்தியைப் பார்த்தார்கள்.  ஒரு பலனும் இல்லை.   பணம் எப்படிப் போனது என்று தெரியவில்லை.  எல்லோரையும் சந்தேகப்

கவிதை குறித்து உரையாடல் நிகழ்ச்சி

  அழகியசிங்கர் சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 57வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி வருகிற சனிக்கிழமை மாலை 6.30மணிக்கு (26.06.2021) நடை பெற்றது. எல்லோரும் கலந்துகொண்டு சிறப்புச் செய்தார்கள். அதன் காணொளியின் பதிவு.

கவிதையும் ரசனையும் – 18 - 2

  (தொடர்ச்சி) கவிதையும் ரசனையும் – 18 அழகியசிங்கர் ‘அளவு’ என்ற இன்னொரு கவிதையைப் பாருங்கள். அளவு நீண்ட நாளாய் எதிர்பார்த்த மழை பெய்தது – ஆனால் எங்கள் வீட்டு சாய்ந்த தென்னைமரங்களின் முதுகு நனையவில்லை. இந்தக் கவிதையில் கவிகுரலோன் மழை பெய்ததற்காக சந்தோஷப்படத் தோன்றவில்லை. ஏன் எனில் அவன் வீட்டு சாய்ந்த தென்னைமரங்களில் முதுகு நனையவில்லை. இந்தக் கவிதையில் பலர் தன்னைப் பற்றியே நினைத்துக்கொள்வார்கள் என்று சொல்லாமல் சொல்கிறாரா? இப்படிப் பல கேள்விகள் ஒரு கவிதையைப் படிக்கும்போது தோன்றுகிறது. கவிகுரலோன் ஒன்று நினைக்கிறார். வாசகன் இன்னொன்று நினைக்கிறான். சின்ன சின்ன வரிகளில் அதிகமாக நாரணோ ஜெயராமன் கவிதைகள் எழுதியிருக்கிறார். இதோ இன்னொரு கவிதை சஞ்சாரம் நாங்கள் எங்கள் பிரச்சினைகளைப் பேசி தீர்வு காணா நிலையில்””

கவிதையும் ரசனையும் – 18

அழகியசிங்கர் நான் இப்போது நாரனோ ஜெயராமன் கவிதைகள் எடுத்து வைத்துக்கொண்டிருக்கிறேன். ஜெயராமனின் ‘வேலி மீறிய கிளை’ என்ற கவிதைப் புத்தகம் க்ரியா வெளியீடாக 31.10.1976ல் வெளிவந்தது. அத் தொகுப்புக்கு பிர்மிள் தர்மூஅரூப்சிவராம் எழுதிய முன்னுரை கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. இந்த முன்னுரையை இரண்டு மூன்று முறை படித்துவிட்டேன். அடியேனின் சிற்றறிவுக்குச் சற்றும் எட்டவில்லை. தமிழில் எழுதியிருக்கும் அவருடைய கட்டுரையை இன்னொரு முறை யாராவது முயற்சி செய்து தமிழ் படுத்தினால் நன்றாக இருக்கும். அவர் எழுதிய இரண்டு இடங்களை இங்குக் குறிப்பிட விரும்புகிறேன். ‘இன்று நுண்ணுணர்வுகளை மழுங்க அடிக்கும் சமகால வாழ்வின் தமிழ் வேஷமாகவே இளங்கோவின் தீபத்தினடியில் இருளாகி ருசிகரமான போலிகள் பதுங்குகின்றன. காந்தியின் தியாகக் கொள்கை வெகுஜன வாதமாகியதும் ருசிகரமான காதல் கதைகளுக்கு ஒரு ஜனரஞ்சகமான பின்னணியாகிறது.’ மேலே குறிப்பிட்டது பிரமிளின் வாசகங்கள். இன்னொரு இடத்தில் ‘வாழ்வின் நிதர்சனத்தை உணர்ந்தவன் புத்துணர்வு பெறுகிறான். புத்துணர்வு பொங்கும் வெளியீட்டின் வழியே