Skip to main content

இரண்டு புத்தகங்கள்...

 துளி - 206





அழகியசிங்கர்



ஒவ்வொரு வாரமும் நடத்தும் கவிதை நேசிக்கும் கூட்டத்தில் நான் கவிதைப் புத்தகங்களை அறிமுகப்படுத்துகிறேன். 

நான் அறிமுகப்படுத்துகிற கவிதைப் புத்தகத்திலிருந்து ஒரு கவிதையும் வாசிக்கிறேன்.
கவிதை நேசிக்கும் கூட்டத்தை ஒரு மாதத்தில் நான்கு விதமாய்ப் பிரிக்கிறேன்.  

முதல் வாரம் எல்லோரும் கவிதைகள் வாசிக்க வேண்டும். இரண்டாவது வாரம் மற்றவர்கள் கவிதைகளை வாசிக்க வேண்டும். மூன்றாவது வாரம் மொழிப்பெயர்ப்புக் கவிதைகளை வாசிக்க வேண்டும்.

நாலாவது வாரம் கவிதையைக் குறித்து உரையாடல்.  இதுமாதிரி எங்காவது யாராவது கவி அரங்கம் நடத்துகிறார்களா? அப்படி நடத்திக்கொண்டிருந்தால் விபரம் தரவும்.

இந்த நான்கு வாரங்களிலும் நான் கவிதைப் புத்தகம் அறிமுகப்படுத்துவேன்.

கடந்த இரண்டு வாரங்களில் நான் அறிமுகப்படுத்திய கவிதைநூல்கள் குறித்து இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

முதல் கவிதைத் தொகுதி 
'சுனையில் நீரருந்தும் சிறுத்தையின் நாக்கு' என்றப.கு.ராஜனின் மொழிபெயர்ப்புப் புத்தகம்.


அதிலிருந்து ஒரு கவிதை.

அமிரிதா ப்ரிதம் கவிதை
சங்கடம்

இன்றைக்குச் சூரியன் ஏதோ சங்கடத்திலிருந்தது
அது ஒளியின் ஜன்னலைத் திறந்தது
பின்னர் மேகங்களின் ஜன்னலை மூடியது
பின்னர் இருண்ட படிகளில் இறங்கிச் சென்றது

அடுத்த வாரத்தில் நான் அறிமுகப்படுத்திய புத்தகம்.

'2000-2020 சிறந்த படைப்பாக்கங்கள்' என்ற புத்தகம்.  கலைஞன் வெளியிடு. 

7 தொகுப்பாசிரியர்கள் தொகுத்த புத்தகம். 

அதில் என் கவிதை

புத்தகத்துடன் பேசுகிறேன்

என் அறையில் 
புத்தகங்களின் வரிசை
ஒரு புத்தகம் இன்னொரு
புத்தகத்தோடு பேசுவதில்லை

நான் மனிதர்களை நம்புவதில்லை
எதையாவது பேசி
என் மனதைக் குழப்பி விடுவார்கள்
அவர்கள் புகழ்ந்தால் 
எனக்கு ஆபத்து
என்று எண்ணிக்கொள்வேன்
புகழாவிட்டாலும்
ஏதோ திட்டமிடுகிறார்கள்
என்று தோன்றும்
அல்லது அவர்களைப் பற்றி
நினைத்துக்கொண்டு

சதா உழன்று கொண்டிருக்கிறார்களென்று
நினைத்துக் கொள்வேன்

என்னுடன் பேசாத
புத்தகம்தான் என் நண்பன்.







 


Comments