Skip to main content

Posts

Showing posts from February, 2020

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - தொகுதி - 2 - 131

அழகியசிங்கர்  படிப்பு கால சுப்ரமணியம் படிப்பதென்பது சிரமமான காரியம்தான். படித்தால் அறிவு வருகிறது எதையும் யோசிக்க வைக்கிறது. மற்றவர்களுடன் எரிச்சலடைய வேண்டியிருக்கிறது பிழைக்கத்தெரியாதவனாகிறான் வெளியில் பெருமைப்படுத்தப்பட்டு உள்ளுக்குள் சிரிக்கப்படுகிறான். கண்களில் தீட்சண்யம் மங்கி கண்ணாடி போடுகிறான். வேலைகளைத் தட்டிக் கழித்து அவசரமாய் மேய்ந்து தூக்கமில்லாமல் அசைபோடுகிறான். மற்றவர்களுக்குப் பிரமிப்பூட்டும் கனத்த புத்தகங்கள் மந்திர எழுத்துகள் இவனுக்குச் சாதாரணமாகின்றன. முகம் கடுத்து தலை நரைக்கும் வழுக்கையும் விழும் , நெற்றியில் கோடிழுக்கும். போதைவஸ்து வேறு தேவையில்லை விளக்கு வெளிச்சங்களில் சிறைப்படுகிறான் மற்றவர்களின் அர்த்தமற்ற வாழ்க்கையை எண்ணிச் சிரிக்கிறான். படித்த விஷயங்களை ஞாபகப்படுத்தப் படாதபாடு படுவான் அவர்கள் சொல்வதைத் தனதாகப் பாவித்துக் கொள்வான் சுயமிழப்பான் வெறும் வார்த்தை லட்சியங்களுக்கு உயிரையும் விடுவான். படிப்பதைவிட ஆறறிவுக்கு வேறு முக்கிய வேலை உள்ளதா என்ன? நன்றி : மேலே சில பறவைகள் - கால சுப்ரமணியம்  லயம் வெளியீடு - பக்.

துளி - 109 - மணல்வீடு கொடுத்த கொடை

அழகியசிங்கர் இந்த இதழ் மணல் வீடு பார்க்கும்போது ஆச்சரியம் தாங்க முடியவில்லை.  'சிறுபத்திரிக்கைகளின் சிறு என்னும் சாராம்சம்' என்ற தலைப்பில் பிரவீன் பஃறுளியின் கட்டுரைதான் காரணம்.   ஈரோட்டில் 03.08.2019 அன்று நடைபெற்ற சிற்றிதழ்களுக்கான அஃக் பரந்தாமன் நினைவு இலக்கிய விருது வழங்கும் விழாவில் விருது பெற்ற 'நவீன விருட்சம்' சிறு சஞ்சிகை குறித்து வாசிக்கப்பட்ட கட்டுரை. அக்கட்டுரையில் காணப்பட்ட வைர வரிகளை இங்கே அளிக்கிறேன்.  ....இந்த நவீன எழுத்தியக்கதின் ஊடும் பாவுமாக வெட்டிச் செல்லும் பல்வேறு போக்குகளும் மொழித்தடங்களும், இன்றைய குழப்படிகளுக்கும் இடையேயான ஒரு நெடிய பாதையில் “விருட்சம் இதழ் தனது அசாதாரணமான நிதானத்துடனும்,  பற்றிக்கொள்ளலின் பிடிவாதத்துடனும் தன் தொடர்ந்த பயணத்துடன் முப்பது ஆண்டுகள் என்ற பெரும் பரப்பைக் கடந்தும் நீண்டு வருகிறது..... ...விருட்சம் தன்னூடாகக் குறிப்பாகக் கவிதைகளின் வழி சாட்சிப் படுத்தியுள்ளது ஒரு முக்கிய இடம்..... .....இன்று சிறுபத்திரிக்கைத் தளங்களை ஊடுருவிக்கும் கேளிக்கைகள், வெகுசனச் சீரழிவுகள், பொதுவெளி அதிக

மயிலாடுதுறை நண்பருக்கு நன்றி

அழகியசிங்கர் மயிலாடுதுறையில் இருக்கும்போது ஒரு இலக்கிய நண்பர் வீட்டிற்குச் சென்றேன்.  அவர்  ஆயிரம் புத்தகங்களை அடுக்கி வைத்திருப்பதாகச் சொன்னார்.  ஆயிரம் புத்தகங்கள் என்றால் அளவு என்ன என்று பார்ப்பதற்காகப் போனேன்.   அங்குப் போய் பார்த்தவுடன் ஆயிரம் புத்தகங்கள் இருப்பதாகவே தெரியவில்லை.  அந்த அளவிற்கு அடுக்கி வைத்திருந்தார். மூன்று அடுக்குகளாக வைத்திருந்தார்.   வீட்டிற்கு வந்தவுடன் முதல் வேலையாக அப்படி அடுக்க வேண்டுமென்று தோன்றியது.  என் நூலகத்தில் அதுமாதிரி ஆரம்பித்தேன்.  புத்தகங்களை நிரப்புவதற்கு முன்னை விட அதிக இடம் கிடைத்தது.  முன்பு நான் புத்தகங்களைப் படுக்க வைத்திருந்தேன்.  அதன் மேல் மேல் என்று அடுக்கிக்கொண்டு போவேன்.  ரொம்ப இடத்தை அது எடுத்துக்கொண்டு விடும். நண்பர் வீட்டிலிருப்பதுபோல் நீளமாகப் புத்தகங்களை நிற்க வைத்திருந்தேன்.  புத்தக முதுகு பார்ப்பவர்களைக் கவர்ந்து விடும். மேலும் அதிக இடம் கிடைக்கும்.  நான் வசிக்கும் வீட்டிலேயும் கட்டிலில் அப்படி அடுக்கத் தொடங்கினேன். மேலும் முதுகைப் பார்க்கும் போது என்ன புத்தகம் என்று தெரிந்து விடும்.

இன்னும் சில தகவல்கள்

அழகியசிங்கர் பொதுவாக ரயிலில் பயணம் செய்யும்போது பகல் வண்டியாகப் பார்த்துப் பயணம் செய்வேன்.  புத்தகங்களை எடுத்துக்கொண்டு போவேன்.  ஆனால் புத்தகங்கள் மட்டும் படித்துக் கொண்டிருக்க மாட்டேன்.   சுற்றிலும் உள்ள மனிதர்களைக் கவனிப்பேன்.  ரயிஙலில் பயணம் செய்பவர்கள் விதம் விதமானவர்கள்.  இளைஞர்கள், வயதானவர்கள், நடுத்தர வயதுடையவர்கள் என்று பலர் இருப்பார்கள். ஆண்கள், பெண்கள். தமிழ் நாட்டில் பயணம் செய்யும்போது பெரும்பாலோர் தமிழ் மொழி பேசுபவர்கள்.  வேற மொழியும் சிலர் பேசுவார்கள்.  கல்லூரி படிக்கும் மாணவர்கள், மாணவிகள்.  காதலர்கள்.  எல்லா ஜாதியினரும் கூடும் இடம் ரயில் பெட்டியில்தான்.   ரயிலில் பயணம் செய்வதைப் பற்றி சிறுகதைகள் எழுதியிருக்கிறேன்.  டபுள் டக்கரில் நான் பெங்களூருக்குப் பயணம் செய்தபோது, ஒரு இளம் பெண் பாத்ரூம் போக கனமான கதவைத் திறக்கும்போது அவளுடைய கீழாடை நெகிழ்ந்து அவிழ்ந்து விட்டது.  அவசரம் அவசரமாக அதைச் சரி செய்து கொண்டாள்.  அவளிடம் ஒரு அச்சம் தன்னை யாராவது பார்த்து விட்டார்களோ என்று.  “உண்மையாக நடந்த நிகழ்ச்சியை டபுள் டக்கர் என்று கதையாக எழுதியிருக்கிறேன். இ

பீச் முதல் தாம்பரம் வரை...

அழகியசிங்கர் இந்த முறை நானும் மனைவியும் தஞ்சாவூர் சென்றோம்.  வழக்கம் போல் மயிலாடுதுறையில் தங்கினோம்.  நான் ஒவ்வொரு முறையும் ஊருக்குச் செல்லும்போது, பகல் நேரத்துத் தொடர் வண்டியில் (டிரெயின்) செல்வேன்.  சோழன் வண்டியில் சென்றேன்.  கையில் புத்தகங்கள்.  தொடர்ந்து படித்துக்கொண்டு வந்தேன். சிலசமயம் தூங்கிக்கொண்டு வந்தேன்.  ஆனால் திருப்தியாக இருந்தது. அடுத்த நாள் தஞ்சாவூர் செல்லும்போதும் பிரயாணிகள் வண்டியில் சென்றேன்.  காலையில் 7 மணிக்குச் சென்றேன்.  திரும்பவும் புத்தகங்கள்.  லேசாக தூக்கம்.  பெரிய கோயிலைச் சுற்றிப் பார்த்துவிட்டு, தஞ்சாவூரில் ஆரியாஸ் என்ற ஓட்டலில் சாப்பிட்டோம். சிறப்பாக இருந்தது சாப்பாடு.  திரும்பவும் தஞ்சாவூர் ரயில் நிலையத்திற்கு வந்தோம்.  மாரியம்மன் கோயிலுக்குச் சென்று விட்டுத்தான் வந்தோம். ஒரு மணி நேரத்திற்கு மேல்  ரயில் நிலையத்தில் காத்திருந்தோம். திரும்பவும் புத்தகங்கள்.  இந்தச் சமயத்தில் ஒரு சிறுகதைத் தொகுப்பு முழுவதும் படித்துக் கொண்டிருந்தேன். சென்னை திரும்பும்போதும் படித்துக்கொண்டு வந்தேன்.  தூக்கம் வரும்போது தூங்கிக்கொண்டிருந்தேன்.  இந்த முறை புத

துளி - 105 - எலி (கள்) கடித்த இதழ்...

அழகியசிங்கர் போன ஆண்டு அமெரிக்கா போய்விட்டுத் திரும்பியபோது ஒன்றைக் கவனித்தேன். லைப்ரரியில் வைத்திருந்த புத்தகங்கள் பத்திரிகைகளைக் கொஞ்சம் எலி (கள்) பதம் பார்த்திருந்தது. அதுவும் சமையல் அறையில் மட்டும் அதிக அட்டகாசம். சமையல் எதுவும் பண்ணி வைக்காமல் புத்தகங்களையும் பழைய பத்திரிகைகளையும் வைத்திருக்கிறேன் என்ற ஏமாற்றம் அதற்கு இருக்குமென்று நம்புகிறேன். குறிப்பாக ஓரத்தையெல்லாம் எலி கடிக்கிறது. நடுவில் இல்லை. அப்படி ஒரு பத்திரிகையை நன்றாகப் பதம் பார்த்துவிட்டது. அந்தப் பத்திரிகை வேற ஒன்றுமில்லை. உயிர் எழுத்து என்ற பத்திரிகைதான். மார்ச்சு 2018ல் வெளிவந்த பத்திரிகை. நல்லகாலம் அந்தப் பத்திரிகையை எலி பதப் படுத்தியிருந்தாலும் எடுத்துப் பிரித்துப் படிக்கும்படிதான் இருக்கிறது அந்தப் பத்திரிகை. அதைக் கடித்தப் பகுதியைப் பார்த்தால் எலி தானாகவே ஒரு டிசைன் பண்ணியிருப்பதுபோல் தோன்றுகிறது. உயிர் எழுத்தின் அந்தப் பத்திரிகையை எடுத்துப் புரட்டிப் பார்த்தேன் அது 11 ஆண்டுகளாகத் தொடர்ந்து வந்த இதழ், விடை பெறுகிறதா உயிர் எழுத்து என்ற தலைப்பில் ஒரு தலைய

ஸம்ஸ்க்ருதம் - ஓர் எளிய அறிமுகம் 1, 2

ஸம்ஸ்க்ருதம் - ஓர் எளிய அறிமுகம் 1, 2 அழகியசிங்கர் ஸம்ஸ்க்ருதம் - ஓர் எளிய அறிமுகம்' என்ற தலைப்பில் நேற்று (15.02.2020) என்ற தலைப்பில் பேசிய மும்மொழி வித்தகர் ஸ்ரீநிவாஸமூர்த்தியின் ஒளிப்பதிவை (இரண்டு) இப்போது பார்க்கவும்.

புத்தகக் காட்சி - ஒளிப்பதிவு கூட்டம் - 12 - 20.01.2020 அன்று நடந்த நிகழ்ச்சி

அழகியசிங்கர் புத்தகக் காட்சியில் கவிஞர் நிமோஷினி அவர்கள் என்னுடைய கட்டுரைத் தொகுதியான துளிகள் - 1 என்பதைப் பற்றி கருத்து வழங்கினார். இதோ அதன் ஒளிபரப்பை வெளிப்படுத்துகிறேன்.

புத்தகக் காட்சி - ஒளிப்பதிவு கூட்டம் - 11 - 20.01.2020 அன்று நடந்த நிகழ்ச்சி

அழகியசிங்கர் “புத்தகக் காட்சி முடிந்து விட்டது. என் புத்தகமான காலியாக இருக்கின்றன நாற்காலிகள் என்பதைக் குறித்து செந்தூரம் ஜெகதீஷ் அவர்கள் பேசியதை ஒளி பரப்புகிறேன். ஆனால் அங்கே பேசியதை ஒளிபரப்பு செய்வதில் தாமதம். கணினியின் ஹார்ட் டிஸ்க் போய்விட்டது. முகநூலில் எதையும் பதிவு செய்ய முடியவில்லை. இதோ இப்போது பதிவு செய்கிறேன்.

இப்படியெல்லாம் ஏன் எழுதுவதில்லை கவிதை - 1

அழகியசிங்கர் என்னைப் பொறுத்தவரைக் கவிதை எளிதில் புரியவேண்டும்.  பின் நெற்றியில் அடிப்பதுபோல் சில உண்மைகளைக் குறிப்பிட வேண்டும். மார்ச்சு 1979 ஆம் ஆண்டு கணையாழி இதழில் வெளிவந்த கவிதை இது. குமரி அமுதன் எழுதிய கவிதை.   இளைய பாரதம் வானொலிப் பெட்டி வழங்கியது செய்தி : üமறைந்த மகாத்மா காந்தி அடிகளின் முப்பதாவது நினைவு தினத்தில் ஐ.நா.சபை அஞ்சலி செலுத்தியது.ý செய்தி கேட்ட என் தம்பி கேட்டான்: üüஐ.நா. தெரியும் யாரந்த காந்தி?ýý

புத்தகக் காட்சி - ஒளிப்பதிவு கூட்டம் - 9 - 18.01.2020 அன்று

புத்தகக் காட்சி - ஒளிப்பதிவு கூட்டம் - 9 - 18.01.2020 அன்று அழகியசிங்கர் புத்தகக் காட்சியில் எடுத்த ஒளிப்பதிவுகள் முழுவதையும் நான் இன்னும் ஒளிபரப்பவில்லை. அதன் பின் நண்பர்கள் புத்தகக் காட்சி அனுபவங்களைக் குறித்து எடுத்த ஒளிப்பதிவுகளை நான் இன்னும் பயன் படுத்தவில்லை. கவிஞர் ஜானு இந்து அவர்கள் அழகியசிங்கரின் நாவலான ஞாயிற்றுக்கிழமை தோறும் தோன்றும் மனிதன் என்ற புத்தகம் குறித்து உரையாடிய ஒளிப்பதிவு