அழகியசிங்கர்
என்னைப் பொறுத்தவரைக் கவிதை எளிதில் புரியவேண்டும். பின் நெற்றியில் அடிப்பதுபோல் சில உண்மைகளைக் குறிப்பிட வேண்டும்.
மார்ச்சு 1979 ஆம் ஆண்டு கணையாழி இதழில் வெளிவந்த கவிதை இது. குமரி அமுதன் எழுதிய கவிதை.
இளைய பாரதம்
வானொலிப் பெட்டி
வழங்கியது செய்தி :
üமறைந்த மகாத்மா
காந்தி அடிகளின்
முப்பதாவது நினைவு தினத்தில்
ஐ.நா.சபை
அஞ்சலி செலுத்தியது.ý
செய்தி கேட்ட என்
தம்பி கேட்டான்:
üüஐ.நா. தெரியும்
யாரந்த காந்தி?ýý
Comments