Skip to main content

Posts

Showing posts from July, 2017

பத்மா காபி பேக்....

அழகியசிங்கர் நான் ஒரு பையை எப்போதும் வைத்திருப்பேன்.  அந்தப் பையின் பெயர் பத்மா காபி பை.  துணிப்பைதான்.  ஆனால் உறுதியான பை.  இந்தப் பை மூலம் என் புத்தகங்களை எல்லா இடங்களிலும் சுமந்து வருவேன்.  புதிய புத்தகங்கள் ஆனாலும் பழைய புத்தகங்கள் ஆனாலும் சுமப்பதற்கு உறுதியான பை.  அகலமான பெரிய பை.  தினத்தந்தி பேபர்பர்களைக் கொண்டு வருவார்களே அதுமாதிரியான பை.  நான் மயிலாடுதுறை செல்லும்போது இந்த பத்மா காபி பையை வாங்கிக்கொண்டு வந்து விடுவேன்.  என்னிடம் இப்படி அதிகமாக  7 அல்லது 8 பைகள் சேர்நதிருக்கும்.  இந்தப் பை ஒவ்வொன்றும் ரூ.60 விலை.  எனக்கு யாராவது இந்தப் பையை மட்டும் தானமாகக் கேட்டால் கொடுக்க மனசு வராது.  ஆனால் என் வீட்டில் பணிபுரிபவருக்கு ஒரு பையைக் கொடுத்து விட்டேன்.  திரும்பவும் மயிலாடுதுறைக்குச் சென்று இன்னும் இரண்டு முன்று பைகள் வாங்கி வந்து விட்டேன்.  பத்மா காபி என்று விளம்பரம் படுத்தியிருக்கும் இந்தப் பையில் பத்மா காபி எப்படி இருக்குமென்று தெரியாது.  வாழ்க பத்மா காபி. பையை விளம்பரப் படுத்தி வழங்கிய வள்ளல் அது. இந்தப் பை பலவிதங்களில் சொளகரியமானது.  எந்தக் கணமான பொருள்க

டிவி பார்க்காமல் ஓடுவது எப்படி?.......

அழகியசிங் கர் நான் டிவி பார்ப்பதற்கு எதிரி இல்லை.  ஆனால் ஒருவர் டிவியைத் தொடர்ந்து பார்த்துக்கொண்டே இருப்பதை நான் வெறுக்கிறேன்.  டிவி நம் வாழ்க்கையில் ஒரு அங்கமாக மாறி விட்டது.  அது பெரிதும் நம்முடைய வாழ்க்கை முறையைக் கெடுக்கிறது.   நான் டிவியில் காட்டப்படுகிற சீரியல்களைப் பார்ப்பதில்லை.  செய்திகளைக் கூட கொஞ்சம் நிமிடங்கள்தான் பார்ப்பேன்.  டிவியில் காட்டப்படும் தமிழ்ச் சினிமாக்களை முழுவதும் பார்ப்பதைத் தவிர்ப்பேன்.  எதாவது ஒரு காட்சி பார்ப்பேன்.  விளையாட்டும் பார்ப்பேன்.   இன்றைய நவீன கடவுள் டிவிதான் என்று சிலர் நினைக்கிறார்கள்.   ஒருவர் டிவி பார்க்காமல் இருக்க முடியுமா?  என் வீட்டில் என்னுடன் வசித்து வருபவர் ஒருவர் சதா சர்வ காலமும் டிவியைப் பார்த்தபடி இருக்கிறார்.  காலையில் எழுந்தவுடன் டிவியை ஆன் செய்து திரும்பவும் அணைப்பது என்பது இரவு 11 மணி ஆகிவிடுகிறது.  இது எனக்கு அச்சத்தைத் தருகிறது.   நான் என்னைப் பற்றியும் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.  சரி டிவி பார்க்காமல் இருந்தால் பொழுதை எப்படிக் கழிப்பது?  இந்தக் கேள்வியை எனக்குள் கேட்டுக்கொள்கிறேன்.  புத்தகம் படி

விருட்சம் நடத்திய மூன்றாவது கூட்டம்.....

அழகியசிங்கர்  இந்தச் சென்னைப் புத்தகக் காட்சியில் மூன்றாவது கூட்டமாக பெருந்தேவியின் üபெண் மனசு ஆழம் என 99.99 சதவிகித ஆண்கள் கருதுகிறார்கள்ý என்ற கூட்டத்தை மாலை 6 மணிக்கு மேல் நடத்தினோம்.  திரளாக பெருந்தேவியின் நண்பர்கள் இந் நிகழ்சியில் கலந்து கொண்டார்கள்.   அம்ஷன்குமார் முதல் பிரதியைக் கொடுக்க கவிஞர் பரமேஸ்வரி பெற்றுக்கொண்டார்.  மற்ற இரண்டு தொகுப்புகள் போல் இல்லாமல் (அழுக்கு சாக்ஸ், வாயாடிக் கவிதைகள்) இது முற்றிலும் வித்தியாசமான கவிதைகள் கொண்ட தொகுப்பு.  ஆனால் இந்த மூன்று கவிதைத் தொகுதிகளிலும் ஒரு ஒற்றுமை உண்டு. இக் கூட்டத்தை ஆடியோவிலும் வீடியோவிலும் பதிவு செய்துள்ளேன்.   அம்ஷன் குமார் பேசிய சாரம்சத்தை இங்கே தர இயலுமா என்று பார்க்கிறேன்.   .....பெருந்தேவி கிட்டத்தட்ட 20 வருஷமாகக் கவிதை எழுதி வருகிறார்.  அவர் முதல் கவிதைத் தொகுதி 1992ல் வெளிவந்தது. தீயுறைத் தூக்கம். அப்போதிலிருந்து அவர் கவிதைகள் மீது எல்லோருக்கும் கவனம் விழுந்திருக்கிறது.  ஒரு கவனிக்கப்பட வேண்டிய கவிஞர் என்று.  அந்தத் தொகுப்பைப் பொறுத்தவரை என்னவென்றால் அது பலபேர்களுக்குப் புரியவில்லை. ஒரு கவிஞ

ஏன்.........ஏன்.............ஏன்.......

அழகியசிங்கர்                                                                                  இன்று புத்தகக் காட்சிக்குச் சென்றவுடன் முதல் வேளையாக 3.30 மணிக்கு ஞானக்கூத்தன் ஞாபகமாக அவருடைய ஒவ்வொரு கவிதையாக எடுத்து வாசித்தோம்.  வந்தவர்கள் ஒவ்வொருவராக கவிதை வாசிக்கச் சொன்னேன்.   யாரும் மறுக்கவில்லை.  வாசித்த அனைவருக்கும் என் நன்றி.  எல்லாவற்றையும் சோனி வாய்ஸ் ரிக்கார்டில் பதிவு செய்தேன்.  மாலன், இந்துமதி என்று பலரும் ஞானக்கூத்தன் கவிதைகளை வாசித்தார்கள்.   இன்னொன்றும் சொல்ல விரும்புகிறேன். நான் முகநூலில் தெரியப்படுத்தி இருந்தேன்.  என் கைவசம் உள்ள ஞானக்கூத்தன் கவிதைகள், கட்டுரைத் தொகுதி வாங்குபவர்களுக்கு 50 சதவீதம் தள்ளுபடியில் தருவதாக. ஸ்டாலில் மிகக் குறைவான எண்ணிக்கையில் ஞானக்கூத்தன் புத்தகங்களை வைத்திருந்தேன்.  ஆனால் ஏன் ஒருவர் கூட முகநூலைப் பார்த்து வரவில்லை. வாங்கவில்லை. சலுகையைப் பயன்படுத்தி ஞானக்கூத்தன் புத்தகங்களை வாங்கிக் கொள்ள யாரும் முன் வரவில்லை. எனக்கு இது ரொம்ப ஆச்சரியமாகப் போய்விட்டது.  ஏன் என்ற என் கேள்விக்கு பதில் தெரியவில்லை.. ஞானக்கூத்தன் க

இன்று ஞானக்கூத்தன் நினைவு நாள்.......

இன்று ஞானக்கூத்தன் நினைவு நாள்....... அழகியசிங்கர் 27ஆம்  தேதி போன ஆண்டு (2016) ஞானக்கூத்தன் இறந்து விட்டார்.  ஒருவர் அதிக நாட்கள் மருத்துவமனையில் இருந்தால் அவர் பிழைத்து வருவாரா என்பது சந்தேகம்தான்.  ஞானக்கூத்தன் விஷயத்தில் அப்படி ஆகிவிட்டது.   ஆனால் திருவல்லிக்கேணி போனால் எனக்கு அவருடன் ஞாபகம் இல்லாமல் இருக்காது.  தெற்கு மாட தெருவாகட்டும், பாரதியார் இல்லம் ஆகட்டும், பாரத்தசாரதி கோயில் குளம் ஆகட்டும், வெங்கடாசலம் தெரு முனை ஆகட்டும், அங்கே உள்ள குட்டி குட்டி ஹோட்டல்கள் ஆகட்டும், திருவள்ளூர் சிலை அருகில் உள்ள கடற்கரை ஆகட்டும் எல்லா இடங்களிலும் ஞானக்கூத்தன் இருந்துகொண்டிருக்கிறார் என்னைப் பொருத்தவரை. ஓராண்டுக்குள் ஞானக்கூத்தன் நினைவு மலர் கொண்டு வர நினைத்துக்கொண்டிருந்தேன்.  ஆனால் என்னால் முடியாமல் போய்விட்டது.  பொதுவாக அவருக்கு நினைவுநாளை விட பிறந்தநாளைக் கொண்டாடுவதுதான் பிடிக்கும்.  பாரதியாரின் நினைவுநாளை விட பிறந்தநாளைத்தான் அவர் விரும்பி வரவேற்பார்.  அதேபோல் ஞானக்கூத்தன் பிறந்த நாளன்று (அக்டோபர் 7) நினைவு மலரை கொண்டு வர முயற்சி செய்கிறேன்.   ஆனால் என்னை அறியாமலே

"பெண் மனசு ஆழம் என 99.99 சதவிகித ஆண்கள் கருதுகிறார்கள்"

அழகியசிங்கர் விருட்சம் வெளியீடாக நாலாவது புத்தகமாக பெருந்தேவியின் கவிதைத் தொகுதியான "பெண் மனசு ஆழம் என 99.99 சதவிகித ஆண்கள் கருதுகிறார்கள்" என்ற புத்தகம் தயாராகும் என்று சற்றும் நான் நம்பவில்லை. ஆனால் புத்தகம் தயாராகி வந்து விட்டது. கிட்டத்தட்ட ஓராண்டுக்கு முன் பெருந்தேவியின் அழுக்கு சாக்ஸ் என்ற கவிதைத் தொகுதி வெளிவந்தது. இன்னும் கூட பலர் அந்தப் புத்தகத்தைக் கேட்ட வண்ணம் இருக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் கவிதை எழுதும்போது பெருந்தேவி ஆழமாக கவிதையைக் குறித்து சிந்தித்தவண்ணம் இருக்கிறார். அழுத்தமான பார்வையை கவிதை மூலம் கொண்டு வருகிறார். அதனால்தான் அவருடைய ஒவ்வொரு கவிதைத் தொகுதியும் வித்தியாசமாக இருக்கிறது. பெண் மனசு ஆழம் என 99.99 சதவிகித ஆண்கள் கருதுகிறார்கள் என்ற கவிதைத் தலைப்பே படிக்கும் ஒவ்வொருவருக்கும் நகைப்பை ஏற்படுத்த வல்லது. இத் தொகுதியின் வெளியீட்டு விழா வியாழன் அன்று அதாவது 27.07.2017 அன்று விருட்சம் ஸ்டால் 12ல் மாலை ஆறு மணிக்கு நடைபெற உள்ளது. முதல் பிரதியை வெளியீட்டு சிற்றுரை ஆற்றுபவர் அம்ஷன் குமார். நூலைப்

நான் யார்?......................

அழகியசிங்கர் மிகக் குறைவான இடத்தில் புத்தகம் எழுதியவரின் புத்தகத்தை அறிமுகப்படுத்துவதே என் நோக்கம்.  ஸ்ரீ ரமண அருள் வெள்ளம் என்ற புத்தகத்தை அறிமுகப்படுத்தி ஒரு சிறிய கூட்டம் ஏற்பாடு செய்தேன்.  பொதுவாக இக் கூட்டத்திற்கு வருபவர்கள் புத்தகக் கண்காட்சிக்கு வருபவர்கள்தான்.  அல்லது கூட்டத்திற்கென்று நமக்குத் தெரிந்தவர்களைக் கூப்பிட்டு கூட்டம் நடத்துவது. அந்த முறைபடி 24.072017 (அதாவது திங்கள் கிழமை) மாலை 6 மணிக்கு  ஸ்ரீ ரமண அருள் வெள்ளம் புத்தகத்திற்கு ஏற்பாடு செய்தோம்.அப் புத்தகத்தை உருவாக்கிய ஸ்ரீதர்-சாமா கலந்து கொண்டார். அதேபோல் ரமணர் சமாஜிலீந்து வைத்தியநாதன், ஸ்ரீராம் அவர்கள் கலந்து கொண்டார்கள்.  வைத்தியநாதன் சின்ன வயதில் ரமணரைப் பார்த்திருக்கிறார்.  ரமண சமாஜ்ஜை மேற்கு மாம்பலத்தில் திறமையாக நடத்திக்கொண்டு வருகிறார்.   வாழ்க்கையில் எதிர்பாராத சோகம் ஏற்பட்டுவிட அதைச் சரி செய்ய திருவண்ணாமலை ரமண ஆச்சிரமத்திற்கு பலமுறை சென்று வந்ததாக ஸ்ரீதர் சாமா குறிப்பிட்டார். அவர் ஒருவிதத்தில் என் ஒன்றுவிட்ட சகோதரர்.  அவரைத் திரும்பவும் எழுதுவதற்குத் தூண்டுதலாக இருக்க வேண்ட

நேற்று நடந்த கூட்டம்

அழகியசிங்கர்  நேற்று நடந்த கூட்டத்தைப் பற்றி இன்றும் இன்றைய கூட்டத்தைப் பற்றி நாளையும் சொல்வதாக உள்ளேன்.  எதிர்பாராதவிதமாக குவிகம் வெளியீடாக கிருபானந்தன் ஒரு புத்தகம் கொண்டு வந்துள்ளார்.  அந்தப் புத்தகம் பெயர் சில படைப்பாளிகள். 112 பக்கங்கள் கொண்ட இப் புத்தகம் விலை : ரூ.75. அப் புத்தகத்தின் ஆசிரியர் பெயர் எஸ். கே. என்.  அவர் யாருமில்லை கிருபாகரன்தான்.  ஏன் இப்படியொரு பெயரில் அவர் ஒரு புத்தகம் கொண்டு வந்தார் என்பது தெரியவில்லை.   இந்தப் புத்தகத்தை முழுவதும் தயாரித்தவர் கிருபாகரன்.  முதலில் ஒரு பெரிய பிரசுராலயத்திற்குப் பணத்தைக் கொடுத்து இவருடைய நண்பர்கள் சிலர் புத்தகம் அடிப்பது வழக்கம்.  அந்த அபத்தத்திலிருந்து மாறி தானே அவருடைய புத்தகத்தைக் கொண்டு வந்துள்ளார் கிருபாகரன்.   ஒரு சினிமா படத்தைத் தயாரிப்பவர்கள், நடிப்பதிலிருந்து டைரக்ட் செய்வது வரை தானே ஈடுபடுவதுபோல், கிருபாகரன் அவரே ஒரு புத்தகத்தைத் தயாரித்துள்ளார்.  அவருடைய துணிச்சலுக்கு வாழ்த்துகள். 112 பக்கங்கள் கொண்ட இப் புத்தகத்தில் 24 எழுத்தாளர்களின் சிறுகதைகளை எடுத்துக் கொண்டு ஒரு ரசிகரின் பார்வையில் எழுதிய

தொலைந்து போனால் கவலை இல்லை. ..

தொலைந்து போனால் கவலை இல்லை. .. அழகியசிங்கர் 1981ஆம் ஆண்டு கவனம் இதழ் வெளிவந்தபோது அதைப் பெறுவதற்காக மேற்கு மாம்பலத்திலிருந்து திருவல்லிக்கேணிக்கு ஆர் ராஜகோபாலன் விட்டிற்குச் சென்று வாங்கினேன்.  கவனம் இதழ் குறித்து கணையாழியில் விளம்பரம் வந்தது. வாங்கியதோடு இல்லாமல் சந்தாவும் கட்டினேன்.   எந்தச் சிறுபத்திரிகைக்கும் உள்ள பிரச்சினை.  விநியோகப் பிரச்சினை. சரியான இலக்கிய ஆர்வலர்களுக்குப் போய்ச் சேர என்ன வழி என்பது தெரியாது.  உண்மையில் கவனம் இதழ்கள் ஏழு வரை கொண்டு வந்ததே பெரிய விஷயமாக எனக்குத் தோன்றுகிறது. கவனம் இதழ்களின் தொகுப்பாக ஆறு இதழ்களை நான் பைன்ட் செய்து வைத்திருந்தேன்.  காலப்போக்கில் ஏழாவது இதழ் இருந்ததே எனக்கு மறந்து போய்விட்டது.  ஆத்மாநாம் கவிதைக்காக கவனம் இதழைப் பார்க்க கல்யாணராமன் வந்திருந்தார்.  அப்போதுதான் தெரிந்தது ஏழாவது இதழ் இருப்பதாக.  பின் இந்த ஏழாவது இதழ் கிடைப்பதற்காக காத்திருந்தேன்.  நான் சேகரித்து வைத்திருந்த பத்திரிகைகளில் தேடிப் பார்த்தேன்.  கவனம் ஏழாவது இதழ் கிடைத்து விட்டது.  ஏதோ புதையலை கண்டு பிடித்த நிலையில் நான் இருந்தேன்.  இந்த ஏழு

வந்து விட்டது கவனம் இதழ்களின் தொகுப்பு

அழகியசிங்கர் நான் குறிப்பிட்டபடி 3 புத்தகங்ள் வெளிவந்து விட்டன.  இன்னும் ஒரு புத்தகம் அடுத்த வாரம் வர உள்ளது.  மூன்று புத்தகங்களில் ஒரு புத்தகம் என்னவென்று சொல்லப் போவதில்லை.  சொல்லாத புத்தகம் வேள்டுமி என்பவர் ஸ்டால் எண் 12ல் வந்து வாங்கிக் கொள்ளவும்.  ஒரு புத்தகத்தின் பெயர் கவனம் இதழ்களின் தொகுப்பு.  ஞானக்கூத்தன் ஆசிரியராக இருந்த கவனம் இதழ் 1981 மார்ச்சு மாதம் வெளிவந்தது.  கிட்டத்தட்ட ஏழு இதழ்களின் தொகுப்பை ஒரே புத்தகமாகக் கொண்டு வந்துள்ளேன். நகுலன் குருúக்ஷத்ரம் மாதிரி கவனம் இதழ்களின் ஏழையும் தெபகுத்து புத்தகமாகக் கொண்டு வந்துள்ளேன். 19.07.2017அன்று நான் எழுதிய தொகுப்பாளர் உரையை அப்படியே தருகிறேன் : ஞானக்கூத்தன் ஆசிரியர் பொறுப்பில் üகவனம்ý என்ற பத்திரிகை மார்ச் மாதம்  1981 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு மாதமும் வந்து கொண்டிருந்தது.   ஜøன் 1981வரை மாதம் ஒருமுறை என்று தொடரந்து 4 இதழ்களாக வந்து கொண்டிருந்த பத்திரிகை 5வது இதழ் ஜøலை மாதத்திற்குப் பதிலாக ஆகஸ்ட் 1981ல் வந்தது.  6வது இதழ் ஒரே தாவலாக ஜனவரி 1982ல் தாவிவிட்டது.   அதேபோல் மார்ச் மாதம் 7வது இதழூடன்  அதாவ

அற்றம் காக்கும் கருவி

      மயிலாடுதுறையில் இருக்கும் நண்பர் பிரபு இலக்கியத்தில் ரொம்ப ஆர்வம் உள்ளவர்.  புத்தகங்களைப் படிப்பது அவற்றைப் பற்றி பேசுவது அவர் பொழுதுபோக்கு.  டூவீலரில் இந்தியா முழுவதும் பல இடங்களுக்குச் சுற்றிப் பார்க்கும் துணிச்சல் மிக்கவர்.  அப்படி சுற்றிப் பார்க்கும் அனுபவத்தை கட்டுரைகளாக எழுதி உள்ளார்.  சுற்றிப் பார்க்கும் இடங்களுக்கு அவர் செல்லும்போது, காமெரா, வாய்ஸ் ரெக்கார்டர் எடுத்துக்கொண்டு போக மாட்டார்.  பின் ஒரு இடத்துக்குப் போய்விட்டு வந்து பல நாட்கள் கழித்து ஞாபகத்திலிருந்து ஊரைப் பற்றிய அனுபவங்களை எழுதுவார்.  அசாத்தியமான ஞாபகசக்தி உள்ளவர். சமீபத்தில் கட்டுரைகள் எழுதி வந்தவர், கவிதைகளையும் எழுதுகிறார்.  அவர் முயற்சியை நான் எப்போதும் ஊக்கப்படுத்துவேன். பலருடைய எழுத்துக்களை வியந்து பாராட்டுவார் (இன்றெல்லாம் ஒரு எழுத்தாளரை யாராவது பாராட்டுகிறார் என்றால், அப்படிப்பட்ட நபர் எங்கே எங்கே என்று தேட வேண்டி உள்ளது.) கவிதைகளை எழுதிக்கொண்டு வருபவர், நாவல்கள், சிறு க தைகளை எழுதவும் தயாராகி விடுவார் என்று நினைக்கிறேன். அவர் 'நான் மலாலா' என்ற புத்தகத்தைப் படித்துவிட்டு எழ

ஸ்ரீ ரமண அருள் வெள்ளம் என்ற புத்தகம்

அழகியசிங்கர்                                                                                                                 இந்த முறை முதன் முதலாக சென்னை புத்தகத் திருவிழாவில் விருட்சமும் கலந்து கொள்கிறது.  ஸ்டால் எண் 12.  ஒரே ஆண்டில் இரண்டாவது முறையாகக் கலந்து கொள்கிறேன்.  ஒரு முறை கலந்து கொண்டு வந்தாலே போதும் போதுமென்று ஆகிவிடும்.  11 நாட்கள்தான் என்ன ஆகிவிடப் போகிறது என்று கலந்து கொள்கிறேன்.  புத்தகக் காட்சிக்காக 4 புத்தகங்கள் தயாரித்து விட்டேன்.  அதில் 1 புத்தகம் அச்சாகி வந்து விட்டது.  மற்ற 3 புத்தகங்கள் கட்டாயம் அச்சாகி வருமென்று நம்பிக்கை இருக்கிறது.   ஸ்ரீ ரமண அருள் வெள்ளம் என்ற புத்தகம் தயாரிக்கப்பட்டு விட்டது.  இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் ஸ்ரீதர்-சாமா.  அவர் என் ஒன்றுவிட்ட சகோதரர்.  கதை கவிதை கட்டுரை என்று எழுதிக்கொண்டு வந்தவருக்கு ஆர்வமில்லாமல் போய்விட்டது.  அவர் வாழ்க்கையில் நடந்த ஒரு சோகமான நிகழ்ச்சி அவரைப் பின் தள்ளி விட்டது.  அவர் வாசிப்பதெல்லாம் ஆன்மிகப் புத்தகங்களாகப் போய்விட்டது.  ஆன்மிக விஷயங்களில் ரொம்பவும் ஈடுபட்டால் அதுவும் குறிப்பாக எ

ஞானக்கூத்தனின் படைப்புலகம் - 5

அழகியசிங்கர் பொதுவாக ஞானக்கூத்தன் கவிதைகளில் சமூக அக்கறை, தத்துவார்த்த சிந்தனை என்றெல்லாம் உண்டு.  எல்லாக் கவிதைகளிலும் அவர் எள்ளல் உணர்வோடு கிண்டலடித்து எழுதி உள்ளார்.  விடுமுறை தரும் பூதம் என்ற கவிதையை எடுத்துக்கொண்டால், அதன் எள்ளல் தன்மை நம்மை ஆச்சரியப்படுத்தும்.  ஞாயிறு தோறும் தலைமறை வாகும் வேலை என்னும் ஒரு பூதம் என்கிறார். எள்ளல் தன்மையுடன் ஆரம்பிக்கும் இக் கவிதை சற்று கடுமையாகப் போய் முடிகிறது.  அவருக்கு பணிபுரிவது ஒரு கசப்பான அனுபவமாக இருந்திருக்கிறது.  ஞானக்கூத்தன் எப்படியெல்லாம் கற்பனை செய்து கவிதை எழுதுவார் என்பதை யாராலும் ஊகிக்க முடியாது.  உதாரணமாக சில கோரிக்கைகள் என்ற கவிதையைப் படித்தால்  முதலில் இப்படி ஆரம்பிக்கிறார் கட்டப் போகும் மாளிகை எனக்குத்தான் என்கிறாய் என்று.  பின் முடிக்கும்போது இப்படி சொல்கிறார். இப்போதைக் கொன்று சொல்கிறேன்.  பொத்துப் பொத்தென்று நம்பிக்கை மூட்டைகளை இப்படித் தட்டாதே மாவு பறக்கிறது பார்வைப் பிரதேசத்தில் என்கிறார். அவருடைய வாழ்க்கை மிகச் சாதாரண வாழ்க்கை. இருப்பதற்கு சொந்த இடம் கூட இல்லாமல் வாழ்ந்த வாழ்க்கை.  ஆனால் கட்டப் போகும் ம

ஞானக்கூத்தனின் படைப்புலகம் - 4

அழகியசிங்கர் சூரியனுக்குப் பின் பக்கம் என்ற பெயரில் ஞானக்கூத்தனின் கவிதைத் தொகுப்பு ழ வெளியீடாக 1980 ஆம் ஆண்டு வெளிவந்தது. இத் தொகுப்பில் சூரியனுக்குப் பின் பக்கம் என்ற கவிதை மட்டும் இல்லை.  புத்தகத்திற்கு அதுமாதிரி தலைப்பிட்டுவிட்டு அக் கவிதை அதில் இடம் பெறவில்லை எனப்தை வேடிக்கையாகச் சொல்வார் ஞானக்கூத்தன். பின் நான் அதைத் தீபம் பத்திரிகையிலிருந்து கண்டுபிடித்து ஞானக்கூத்தன் கவிதைகள் என்ற தொகுப்பில் சேர்த்தேன்.  தீபம் நா பார்த்தசாரதியின் புதல்வர் வீட்டிற்குச் சென்று பழைய தீபம் இதழ்களை அங்கயே புரட்டிப் பார்த்து பின் ஒரு நோட்டில் எழுதி வந்து சேர்த்தேன்.  இதுமாதிரி பல விட்டுப் போன கவிதைகளை அத் தொகுதியில் சேர்த்திருக்கிறேன்.  அப்படி சேர்த்தாலும். இன்னும் விட்டுப்போன ஞானக்கூத்தன் கவிதைகள் நிச்சயம் இருக்கும். எனக்குத் தெரிந்து கசடதபற இதழில் வெளிவந்த ஒரு கவிதையையும், மையம் இதழில் வெளிவந்த ஒரு கவிதையையும் அவர் சேர்க்க விரும்பவில்லை.   ஞானக்கூத்தன் ரொம்ப குறைவான வரிகளைக் கொண்ட கவிதைகள் அதிகமாக எழுதி உள்ளார்.  அதாவது  மூன்று வரி, இரண்டு வரி, நான்கு வரிகள் என்று. அப்படி எழுதுகிற