Skip to main content

Posts

Showing posts from August, 2010

நான் பிரமிள் விசிறி சாமியார்.....14

நான் இந்தத் தொடரை எழுதவே மறந்துவிட்டேன். இப்போது திரும்பவும் ஆரம்பிப்பதற்குள் என்ன எழுதினேன் என்பதை நினைவுப் படுத்திக்கொள்ள வேண்டும். திரும்பவும் நான் எழுதியதை எடுத்துப் படிக்க வேண்டும். ஏனென்றால் சொன்னதையே திரும்பவும் சொல்லக்கூடாது. ஆத்மாநாம் இரங்கல் கூட்டத்தின்போது பிரமிள் கலந்துகொண்டு பேசியதை எழுதியிருந்தேன். அதில் சில தகவல்களைக் கூறியிருந்தேன். அந்தத் தகவல்களில் சிலவற்றை நான் மறந்து விட்டேன். வங்கியில் பணிபுரிவது ஒரு பக்கம் இருந்துகொண்டாலும், பல படைப்பாளிகளைச் சந்தித்துப் பேசுவது என் பொழுதுபோக்கு. பொழுதுபோக்கு என்று சொல்வதைவிட உபயோகமான விஷயம். இப்போதெல்லாம் அதுமாதிரி நடப்பதில்லை. முன்பு ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடம் வருவது எளிதான விஷயம். பார்க்கலாம். பேசலாம். திரும்பவும் போய்விடலாம். பிரமிள் எல்லா இடங்களுக்கும் நடந்தே சென்றுவிடுவார். அவர் நுங்கம்பாக்கம் ஹைரோட் வழியாக நடந்து போய்க் கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன். நானும் அவரும் அடிக்கடி சந்தித்துக் கொள்வோம். அப்படி சந்தித்துக்கொள்ள முடியாவிட்டால், இவரை ஏன் சந்திக்க முடியவில்லை என்ற எண்ணம் எனக்கு ஏற்படும

''காலம்''

யாரோ காலமானார் என்ற செய்தி என் எதிரில் நட்சத்திரமாகத் தொங்குகிறது காலமென முதலில் உணர்ந்தவன் கபாலச் சூடு பொரியும் ஆண்மை நிறைந்தவனாக இருந்திருப்பான் சில சமயத்தில் தோன்றுகிறது காலம் நிர்ணயிக்கப் பட்டிருப்பது போல ஆனால் பற்ற முடியாமல் நழுவிப் போகிறது. எங்கேயோ காத்திருக்கிறது காதலுடன் மெளனம் சாதிக்கிறது காலம் காலமாகக் கடல் ஒலிக்கிறது வெற்று வெளியில் மேசம் சஞ்சரிக்கிறது கனத்த காலப் பிரக்ஞையை எனக்குள் விதைத்து விட்டார்கள். எவ்வளவோ காலம் கடந்தும் அறிந்துகொள்ள என்னவென்று அது - முளைக்கவே இல்லை. ஆனால் விலகாத கிரஹணமாக என் எதிரில் தொங்கிக்கொண்டே தானிருக்கிறது யாரோ காலமான செய்தி நானும் ஒரு காலத்தில் காலமாகி விடுவேனோ என்பதில் மட்டும் முளைத்து விடுகிற பயம் சொட்டுச் சொட்டாய் உதிரக் காத்திருக்கிறது - காலம் வராமல்.... ( ஆகஸ்ட் 8ஆம் தேதி ஸ்டெல்லா புரூஸ் பிறந்த நாள். காளி-தாஸ் என்கிற பெயரில் அவர் பல கவிதைகள் எழுதி உள்ளார். அவருடைய எல்லாக் கவிதைகளையும் தொகுத்து விருட்சம் வெளியீடாக காளி-தாஸ் கவிதைகள் என்று கொண்டு வர உள்ளேன். எளிமையான வரிகள் கொண்ட ஆழமான கவிதைகள். இக் கவிதை பிரசுரமான ஆண்டு ஜனவரி 1979. இ

இலை மொழி

முதிர்வில் இலை தன் அடையாளத்தை அகற்றிக் கொள்கிறது ஆங்காங்கு தெரியும் நரம்புக் கோடுகள் கண்களை மூடிக் கொண்டாற் போலொரு தோற்றம் வண்ணத்து பூச்சியும அண்டா விலக்கம் பூமியின் பரப்பை நோக்கி நாளும் குவிந்திடும் உயிர் இயக்கம்... போகிற போக்கில் இலைகளைக் கிள்ளிச் செல்லும் மனிதக் கரங்களூடே நழுவிச் செல்கின்றன மரணம் குறித்த இயற்கையின்இலை வார்த்தைகள்...

எதையாவது சொல்லட்டுமா / 24

தினமும் காலை 9 மணி சுமாருக்கு, மயிலாடுதுறையிலிருந்து பஸ்ஸில் கிளம்பி சீர்காழிக்குச் சென்று வருவேன். சீர்காழியிலிருந்து திரும்பவும் வீடு வந்து சேர மணி 9 மணிமேல் ஆகிவிடுகிறது. சில சமயம் பத்தைத் தொட்டு விடுகிறது. இதுமாதிரியான வேலை கடுமையை நான் இதுவரை பார்த்ததில்லை. சுருக்கெழுத்தாளராக நான் சென்னையில் இருந்த காலம் பொற்காலம். எந்தத் தப்பை யார் செய்துவிடுவார்களோ என்ற பதைபதைப்போடு இருக்க வேண்டி உள்ளது. பெரும்பாலும் என் அலுவலக நண்பர் அறிவானந்தமும் நானும் சேர்ந்துதான் வருவோம். அவரைப் பார்க்கும்போது பெரும்பாலும் சோர்வாக இருப்பார். நானும் அவரும் energy எல்லாம் தீர்ந்துபோய் வற்றிப் போய் வருவோம். வங்கியில் பணிபுரியும் பெரும்பாலோருக்கு தொடர்ந்து அதில் பணிபுரிய விருப்பமில்லை. இதில் தப்பிப்பவர்கள் க்ளார்க்காகப் பணிபுரிபவர்கள். அவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு இருக்க மாட்டார்கள். எந்த வேலையாக இருந்தாலும் அப்படியே வைத்துவிட்டுப் போய்விடுவார்கள். கொஞ்ச வேலை பளு அதிகமாக இருந்தால் முணுமுணுப்பார்கள். சண்டைக்கு வருவார்கள். ஆனால் 5 மணிக்குமேல் அவர்களை இருக்கச் சொல்லமுடியாது. முன் யோசனை எதுவுமின்றி 2004ல

ஊனமுற்ற இராணுவ வீரனும் புத்தரும்

மொழிபெயர்ப்புக் கவிதை முதியோர் காயமுற்றோர் மற்றும் நோயாளிகள் குழந்தைகள் - வயதுவந்தோர் பிணக்குவியல்களை நிறைய நிறையக் கண்ணுற்றேன் பாவங்களை ஊக்குவிக்கும் துறவிகளின் உருவங்களைக் கண்டேன் *பிரித் நூலும் கட்டப்பட்டது 'நாட்டைக் காக்கும்' எனக்கு காவல் கிட்டவென பிரார்த்தித்த தகவல்களும் கிடைத்தன தாயிடமிருந்து விழி சதை இரத்தமென தானம் செய்து உங்களிடம் வந்துள்ளேன் ஆனாலும் புத்தரே உங்களது பார்வை மகிமை மிக்கது கிராமவாசிகளுக்கு மறந்துபோயிருக்கும் மனைவி குழந்தைகளோடு நலம் வேண்டிப் பாடும் சுகப் பிரார்த்தனைப் பாடலிடையே எனது தலையை ஊடுருவும் உங்களது பழக்கமில்லாத புத்தர் விழிகள் கண்ணெதிரே தோன்றுகின்றனர் என்னால் கொல்லப்பட்ட மனிதர்கள் ஆங்காங்கே வீழ்ந்துகிடந்த அவர்கள் மெலிந்தவர்கள் துயருற்ற ஏழைகள் ஒரே நிறம் ஒரே உருவம் எல்லோருக்குமே எனது முகம் நூறு ஆயிரமென நான் கொன்றொழித்திருப்பது என்னையேதானா பாளிச் செய்யுள்களை இசைக்கின்ற சிறிய பிக்குகள் பின்னாலிருந்து நீங்கள் தரும் புன்முறுவல் தென்படாதிருக்க இரு விழிகளையும் மூடிக்கொள்கிறேன் கரங்கள் தென்பட்டு விடுமோ

வீடு பேறு

நத்தை ஒன்றுபோகிறது மெல்லுடலில் பாரிய வீட்டை சுமந்தபடி. போகிறதா? ஆம். உன்னை போல் என்னை போல் நம்மை போல்.அது நகர்ந்து எஞ்சிய நீர்த்தடங்களில் வீடு குறித்த ரகசிய கேள்விகளின் ரசம் மின்னிக்கொண்டு இருக்கிறது...

தொண்டையின் துயரம்

இனிப்பான பலகாரத்திலிருந்து உப்பில்லா உணவு கொதிக்கிற தேனீரிலிருந்து குளிர்ச்சியான ஐஸ் க்ரீம் எதிர் வீட்டு பால் அப்பம் எதிரி சுட்ட பணியாரம் சந்த்ருவின் பிறந்த நாள் கேக் ஆஞ்சநேயரின் வடைமாலையில் பிரசாதமாய் எஞ்சிய வடை என எல்லா உணவு பதார்த்தங்களையும் தொண்டை அனுமதித்து விடுகிறது. திடீரென வயிற்றில் தள்ளு முள்ளு கலவரம் அடிதடி என நடக்கிற போது வயிற்றிற்காக இரக்கம் காட்டி கலவரக்காரர்களை வாய் வழியாக தண்ணீர் பீய்ச்சி வெளியேற்றியும் விடுகிறது. ஆனால் வினோதமாய் ஒரு உறங்கும் உண்மை மட்டும் தொண்டைக்குள் முள்ளாய் குத்திக் குத்திக் குதறுகிறது வெளியேற இயலாமல்.. பொய் தவத்தில் புண்ணாய் தொண்டை நாறிக் கொண்டிருக்கிறது பல நேரங்களில்

ஓர் மடல்

* நெலும் கவி , லீ கெளி , ஒலிந்த கெளி இங்கும் இல்லாமலில்லை அம்மா ஆனாலும் அவற்றை மாற்றி மாற்றி புதிது புதிதாய்ச் செய்கிறார்கள் விழாக்களும் இப்பொழுது அதிகமென்பதால் காட்சிகள் தொடர்ந்தபடி உள்ளன உறக்கமேயில்லாமல் இரவு முழுதும் ஆடுகிறேன் காலையில் ஒத்திகைக்கு ஓடுகிறேன் உடலழகு தொலைந்துவிடுமென்று இரவுணவையும் தருகிறார்களில்லை இளம்பெண்கள் பத்துப் பேர் நாம் அவர்களறியாமல் தேனீர் தயாரித்துக் கொள்கிறோம் பாடல் ஒளிப்பதிவுகளுக்குப் போனால் ஆயிரம் ரூபாயளவில் கிடைக்கும் மேலதிகமாக ஆனாலும் மூட்டுக்களிலும் முதுகெழும்பிலும் வலியெடுக்கும் புதிய நடனமொன்றின் மெல்லிய ஆடையில் கவரப்பட்ட செல்வந்தனொருவன் பரிசுகள் தந்திட அழைக்கிறான் நான் முடியாதென்றே மறுத்து வருகிறேன் விழா நாட்களில் எனக்கு எனது அம்மா சொன்னவை நினைவில் எழுகின்றன உண்மைதான் சில விழிகளில் பெரும் அந்நியத்தைக் காண்கிறேன் ஒன்பது நாட்களுக்குக் காட்சிகள் தொடர்ந்திருக்க நேற்றென்னை அந்த வருத்தம் பீடித்தது ஆனாலும் அதனைக் கவனத்தில் கொள்ளாமல் வீட்டைப் பற்றி எண்ணி எண்ணியே ஆடினேன் அம்மாவின் மருந்

மெய்ப்பொருள்

ஆட்டோவின் ஓரத்திலிருந்து சிறுமியொருத்தி புன்னகைக்கிறாள் பெயர் தெரியா அப்பூக்களின் அழகை கண்களில் நிறைத்தபடி செல்கிறேன்... பின்னொரு நாள் உடலாய் மட்டும் உணர வைக்கும் பேருந்துப் பயணத்தில் கூட்ட நெரிசலை சமாளித்தபடி உள்ளங்கைகளில் ரோஜாவை பாதுகாத்து கொண்டிருந்தாள் அரும்புப் பெண் மகள் ஒருவள். தொலைகாட்சி மக்களை முழுங்கிய ஆளரவமற்ற தெருக்கள் வழியே துக்கத்தில் நெஞ்சு வெதும்ப நடந்து வந்த அந்நேரம் கண்டது அந்தியின் மென்னிருள் ஊடே வண்ணங்களின் குளுமையை அள்ளித் தெளித்த நித்யகல்யாணி பூக்களை. யோசித்தால் வாழ்கையைப் பற்றிச் செல்ல பிறிதொரு தேவை இல்லை.

எதையாவது சொல்லட்டுமா / 23

ஆகஸ்ட் 8ஆம்தேதி ராம் மோகனின் பிறந்த தினம். யார் இந்த ராம் மோகன். அவர்தான் ஸ்டெல்லா புரூஸ். அவர் இப்போது உயிரோடு இருந்திருந்தால், 70 வயது ஆகியிருக்கும். அவர் தானகவே தற்கொலை செய்துகொள்வதற்கு முன்புவரை சாதாரணமாகத்தான் இருந்தார். எந்தக் கொடிய நோய் எதுவுமில்லை. கண் பார்வை சற்று தடுமாற்றம். அவர் தற்கொலை செய்து கொண்டதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நான் மட்டுமல்ல இன்னும் பல நண்பர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. முதலில் நம்ப முடியவில்லை. அவர் பல விஷயங்களில் தீர்மானமாக இருந்தார். அவர் குடும்ப வியாபாரத்தைத் தொடர்ந்து பார்த்தார். அதில் பெரிய வெற்றி பெற முடியவில்லை என்று தெரிந்ததும், அவருக்கு உரிய தொகையை வீட்டிலிருந்து பெற்றுக்கொண்டு வங்கியில் சேமிப்பில் வைத்திருந்தார். வங்கித் தரும் வட்டித் தொகையை எடுத்து குடும்பம் நடத்தினார். தனியாக இருந்தார். வீட்டை விட்டு வெளியில் வந்து, சென்னையில் அறைவாசியாக பல ஆண்டுகளாக இருந்தார். புத்தகம் படிப்பது, நண்பர்களைச் சந்திப்பது, நினைத்தபோது ஊருக்குச் செல்வது என்று பொழுதைக் கழித்தார். ஆடம்பரமாக பணம் செலவு செய்யமாட்டார. ஆனந்தவிகடன் மூலம் தொடர்கதை எழுதும் வாய்ப்ப

சில நேரங்களில் சில மனிதர்கள்

- கணீர் குரலுக்கு சொந்தக்காரர் கன்னையா ஓதுவார். தேவாரம் பாடும் போதெல்லாம் கேட்பவருக்கு கண்ணீரே வருமென்பார் அப்பா அவர் இறந்த நாளொன்றில் யார் கண்ணிலும் நீர் இல்லை. அவர் தேவாரம் பாடாததுதான் காரணம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன் அந்த நாளில். அசராமல் கரகம் ஆடக் கூடியவள் மேலத் தெரு மஞ்சுளா கரகம் அசையாமல் கண்ணில் ஊசியெடுத்தபடியே காலில் படம் வரைபவள். சமீபத்தில் ஜாக்கெட்டில் குத்தப் பட்ட நூறு ரூபாய்களுடன் பார்க்கும் போது எடை அதிகமென இறக்கி வைத்திருந்தாள் கிளி மூக்கை நீட்டியிருக்கும் கரகத்தையும் இன்னும் சில ஆடைகளையும் உலகில் சூரியன் உள்ளவரை உனை மறவேன் என எதுகை மோனையுடன் எழுதிக் கொடுத்தவனை வாரச்சந்தையில் பார்த்த பொழுது அவனுக்கு என்னை அடையாளம் தெரியவில்லை. சூரியன் இல்லாத அவன் உலகை நினைத்து கொஞ்சம் வருத்தமாக இருந்தது. காரைவீட்டு பெரியசாமி அண்ணாச்சியென்றால் எல்லார்க்கும் பயம் மீசைக்காக சிறுவர்களும் காசுக்காக பெரியவர்களும் அடங்குவார்கள். தளர்ந்த அவரைப் போனவாரம் பார்த்த பொழுது “கான்கிரீட் ஊருக்குள்ள காரைவீட்டுக்கு மதிப்பில்லப்பா”என்றார். கடனை அடைப்பதற்காய் சொல்லி துபாய் போன சங்கிலி திருமணம் முடிந்து

புள்ளி என்ற கவிதைத் தொகுப்பு

இரவில் பேய்கள் குருட்டுக் கண்களைத் திறந்து பார்த்தால் இருட்டு தான் பிரகாசமாய்த் தெரிகிறது செவிட்டுச் செவிகளைக் கூராக்கி முயற்சித்தால் நிசப்தம் தான் கூச்சலாய்க் கேட்கிறது நுகராத நாசியை நுழைத்துப் பார்த்தால் சாக்கடை மணம் சுகந்தமாய் இருக்கிறது உருமாறிப் போனவன் உடல் மாறி மனம் மாறின பின்

இரவுக்குள் ஒரு இழப்பு

இங்கே குளிர் காலம். வெளிநாட்டுக் குளிரை முதல் முதலாக அனுபவிக்கிறேன். இரவு தூக்கம் பிடிக்கவில்லை. புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தேன். கண்ணுக்கும் மூளைக்கும் இடையிலுள்ள பிரதேசத்தில் என்னென்னவோ காட்சிகள் தோன்றி மறைகின்றன. அது கனவாகவும் இல்லாமல் உள்நினைவின் சிதறலாகவும் இல்லாமல் குழம்பி இருக்கிறது. திடீரென்று ஏழுகடல் தாண்டி. .இடையிலுள்ள எவ்வளவோ தேசங்களைத் தாண்டி போஸ்டல் காலனி முதல் தெருவில் ஆறாம் நம்பர் வீட்டின் முதல் அடுக்ககத்தில் இருக்கிறேன். என் இனிய நண்பர் சந்திரமௌலி கூட உட்கார்ந்து பேசிக் கொண்டிருக் கிறார். எங்கே இவ்வளவு தூரம் ? " என்று கேட்கிறார். " சும்மாத் தான் .." என்கிறேன். " எனக்கு ஆபீஸுக்கு நேரமாகி விட்டது.. இப்போது இலக்கியம் பேசமுடியாது.. அதுவும் என் வாழ்க்கை மற்றவர்கள் போலில்லை. . நான் ஆபீஸிக்கு ரயிலில் சீ ர்காழிக்கு போக வேண்டும் " என்கிறார்..." நானும் வருகிறே ன் பேசிக் கொண்டே போகலாம்.." என்கிறேன். " சரி ஆனால் எனக்கு நேரமாகி விட்டது.. நான் போய்க் கொண்டே இருக்க