Skip to main content

Posts

Showing posts from March, 2018

கதைகளைப் படித்தபடியே வந்தேன்...

கதைகளைப் படித்தபடியே வந்தேன்... அழகியசிங்கர் மயிலாடுதுறையிலிருந்து நான் திரும்பி வரும்போது இரண்டு பத்திரிகைகளை வாங்கிக்கொண்டு வந்தேன்.  ஒன்று காமதேனு என்ற பத்திரிகை.  முதல் இதழ்.  இரண்டாவது ஆனந்தவிகடன்.  இது தவிர விருட்சம் இதழுக்கு அனுப்பிய கதைகள்.  இவையெல்லாவற்றையும் பகல் வண்டியில் படித்துக்கொண்டு வருவது என்று தீர்மானித்தேன். ஆனந்தவிகடனுக்கும் காமதேனுவிற்கும் பெரிய வித்தியாசம் இல்லை.  எல்லாம் சினிமாவில் நடிப்பவர்கள் புகைப்படங்கள்தான்.  உள்ளே வேறு விதமாகக் காட்சி அளிக்கிறது காமதேனு.  படிக்கும்போது எனக்கு வீக் என்ற ஆங்கிலப் பத்திரிகை ஞாபகம் வந்தது.  உள்ளே பெட்டி செய்திகளைப் போல் ஒரு முகம், சர்வதேசம், தேசம் என்று பல செய்திகளைக் கொட்டிக் கொடுக்கிறது காமதேனு.  நான் இதை எழுதும் இந்தத் தருணத்தில் 4 இதழ்கள் வந்துவிட்டன. முதலில் நான் கதைகளைத் தேடித்தான் இந்தப் பத்திரிகைக்குள் நுழைந்தேன்.  என் கண்ணிற்கு எந்தக் கதையும் தென்படவில்லை.  ஆனால் புனை என்ற தலைப்பின் கீழ் நர்சிம் அவர்கள் நதி என்ற கதை எழுதியிருக்கிறார்.  நான் இப்போதுதான் பார்த்தேன்.  அப்போது கவனிக்கவில்லை.  கிட்டத்

த நா குமாரசாமியைப் பற்றி முனைவர் வ வே சுப்பிரமணியன் பேசிய ஒளிப்பதிவு- 4 - கடைசிப் பகுதி

அழகியசிங்கர் முனைவர் வ வே சு அவர்கள் விவேகானந்தா கல்லூரியில் பணி ஆற்றியவர்.  மரபு கவிஞர்.  பல கவிதைப் புத்தகங்கள் வெளிவந்திருக்கின்றன.  தமிழ் வளர்த்த சான்றோர் என்ற தலைப்பில் ஒவ்வொரு மாதமும் பேரூரை ஆற்றி வருகிறார் 16.03.2018 வெள்ளிக்கிழமை அன்று பேசிய ஒளிப்பதிவின் 4வது பகுதியை இங்கு வெளியிடுகிறேன் 

த நா குமாரசாமியைப் பற்றி வ வே சுப்பிரமணியன் பேசிய ஒளிப்பதிவு- 3

அழகியசிங்கர் 16.03.2018 வெள்ளிக்கிழமை அன்று பேசிய ஒளிப்பதிவின் 3வது பகுதியை இங்கு வெளியிடுகிறேன் - 

த நா குமாரசாமியைப் பற்றி வ வே சுப்பிரமணியன் பேசிய ஒளிப்பதிவு 1, 2....

அழகியசிங்கர் 16.03.2018 வெள்ளிக்கிழமை அன்று பேசிய ஒளிப்பதிவை இங்கு வெளியிடுகிறேன்

இன்று அசோகமித்திரனின் நினைவு நாள்

இன்று அசோகமித்திரனின் நினைவு நாள் அழகியசிங்கர் 'எழுத்தாளர்கள் நூல்கள் நிகழ்ச்சிகள்' என்ற அசோகமித்திரன் புத்தகம் ஒன்றை எடுத்துப் படித்துக்கொண்டிருந்தேன்.   'உதிர்ந்த மணி' என்ற கட்டுரையில் எம் வி வெங்கட்ராமன் பற்றி இப்படி எழுதியிருக்கிறார் : அவருடைய நெருக்கடி மிகுந்த நாட்களில் நாங்கள் இருவரும் ஒரு திருவல்லிக்கேணி காபிக்கடையில் காபி அருந்தினோம்.  பல ஆண்டுகள் கழித்து மீண்டும் அதே காபிக்கடையில் காபி அருந்தினோம்.  இம்முறை அவரே üüஇப்போது சிரமம் இல்லை, கவலைப்படாதே,ýý என்றார்.  ஆனால் எனக்கு அவரை எப்போது நினைக்கும்போது இருட்டில் புத்தக அடுக்குகள் மத்தியில் குகைவாசியாக அவர் எழுதிக்கொண்டிருந்த காட்சிதான் திரும்பத் திரும்ப வருகிறது. ******** தி நகர் செல்லும்போது கண்ணதாசன் சிலை அருகில் சிக்னலுக்காக வண்டியை நிறுத்துவேன்.  அப்போது ஒரு நிமிடம் இடது பக்கம் பார்ப்பேன்.  பலமுறை அசோகமித்திரனைப் பார்க்க இப்படித்தான் செல்வேன்.  ******** புதுமைப்பித்தன் இருந்த நாளிலும் அவர் மறைந்த பின்னரும் அவரைப் பற்றி அலுப்பு சோர்வு இல்லாமல் வெளிமாநிலத்தவருக்கு

சும்மா போனேன் சும்மா வந்தேன்

அழகியசிங்கர் இரண்டு மூன்று நாட்களுக்கு  பங்களூர் போய்விட்டு வந்தோம்.  இலக்கிய நண்பர் வீட்டுத் திருமணத்திற்குத்தான்.   உண்மையில் இதைச் சாக்காக வைத்துக்கொண்டு பங்களூருக்கு  சென்றோம்.  பெரும்பாலும் சென்னை நகரத்திலேயே பொழுதை ஓட்டிக்கொண்டிருக்கிறோம்.  ஆனால் எதாவது காரணம் கிடைத்தால் வேறு வேறு ஊர்களுக்குச் சென்று அந்த ஊர்களைப் பார்க்க வேண்டுமென்ற எண்ணம் தோன்றுகிறது.  இனி எளிதாக எதாவது காரணத்தைக் கண்டு பிடித்தாவது ஒரு ஊருக்குச் சென்று விட வேண்டும்.  சமீபத்தில் நான் மயிலாடுதுறைக்குப் போய் வந்தேன்.  அந்த ஊரின் பேரமைதி என் மனதிலிருந்து நீங்க வில்லை.  ஆனால் பங்களூர் வேற விதமாக இருக்கிறது.  நாங்கள் பயணம் செய்த லால்பாக் வண்டி தாமதமாகக் கிளம்பி இரவு பத்து மணிக்கு ஸ்டேஷனுக்கு வந்தது. கே ஆர் புரம் என்ற இடம் என்று நினைக்கிறேன்.  என் மனைவியின் சகோதரியின் பையன் எங்களை காரில் ஊருக்கு ஒதுக்குப்புறமான கொறமாவ் என்ற இடத்திற்கு அழைத்துக்கொண்டு போனான்.  ஒரு தெருவில் காரை ஓட்டிக்கொண்டு போனபோது, பங்களூரில் உள்ள அத்தனை நாய்களும் அந்தத் தெருவில் கூடியிருப்பதுபோல் பட்டது.  இரவு அங்கு தநங்கிருந்துவ

சனிக்கிழமை நடந்த இன்னொரு கூட்டம்

சனிக்கிழமை நடந்த இன்னொரு கூட்டம்  அழகியசிங்கர் இந்த மாதம் நான் வழக்கம்போல சனிக்கிழமை கூட்டம் நடத்தாமல் வெள்ளிக்கிழமை பொதுவான கூட்டம் ஒன்றை நடத்தினேன்.  த நா குமாரசாமியும் நானும் என்ற பெயரில் வ வே சு அவர்கள் பேசினார்கள். அதற்குக் காரணம் ஒன்று உள்ளது. என்னவென்றால் சனிக்கிழமை என் கதைகளுக்கான  கூட்டம் ஒன்றை நடத்தியதால், வெள்ளிக்கிழமை எப்போதும் நடத்தும் கூட்டத்தை நடத்தினேன்.    சில பேர்களை மட்டும் கூப்பிட்டு என் சிறுகதைக்கான கூட்டத்தை சனிக்கிழமை நடத்தினேன்.  பெரும்பாலும் பேசியவர்கள் அனைவரும் என் நண்பர்கள்.  இக் கூட்டத்திற்கு என் மனைவியும் பேத்தியும் கலந்து கொண்டார்கள்.  என் பழைய நண்பர்கள் வந்திருந்தார்கள்.    பேத்தி தமிழ் வாழ்த்துப் பாட கூட்டம் சிறப்பாக ஆரம்பமானது. முதன் முதலாக என் கதையைப் பிரசுரம் செய்த என் சகோதரரிடம் என் புத்தகத்தை அளித்தேன்.  அக் கதை எழுதி பிரசுரமான ஆண்டு 1979ஆம் ஆண்டு.  அதிலிருந்து நான் தொடர்ந்து கதைகள் எழுதி வருகிறேன்.  2017ஆம் ஆண்டு வரை மொத்தம் 64 சிறுகதைகளும், 7 குறுநாவல்களும், சின்னஞ்சிறு கதைகளும், ஒரு நாடகமும் என் புத்தகத்தில் கொண்டு வந்துள்

நான் நடத்தும் கூட்டமும் அது நடத்தும் பதைபதைப்பும்

அழகியசிங்கர் இன்று வழக்கமாக நடத்தும் சனிக்கிழமைக்குப் பதிலாக விருட்சம் இலக்கியச் சந்திப்பு கூட்டம் நடத்தினேன்.  த நா குமாரசாமியும் நானும் என்ற தலைப்பில் வ வே சுப்பிரமணியன்  அவர்கள் பேசினார்.  ஆனால் கூட்டம் 6 மணிக்கு ஆரம்பித்து ஏழரை மணிக்கு முடிக்க வேண்டும்.  கிட்டத்தட்ட 7 மணிக்குத்தான் கூட்டம் ஆரம்பிக்கும்படி ஆயிற்று.   ரொம்ப நாட்களுக்குப் பிறகு நானோ டுவீஸ்ட் காரை ஓட்டிக் கொண்டு போனதால் இந்த விளைவு.  சமீபத்தில் காரை சர்வீஸ் கொடுத்திருந்தேன்.  சர்வீஸ் போய் வந்தபிறகும் நான் காரை எடுத்துக்கொண்டு போக முடியவில்லை.  சர்வீஸ் சரியாக இருக்கிறதா என்று பார்க்கவும் இல்லை.  இது என் தப்பு.  வண்டியை எடுத்துக்கொண்டு போனபிறகுதான் பெற்றோல் ஒரு சொட்டு கூட இல்லை என்று.  கூடவே நண்பர்களான வைதீஸ்வரனையும், ராஜாமணியையும் அழைத்துக்கொண்டு வந்தேன்.  வண்டியை ஓட்டிக்கொண்டு போகும்போது முதல் கியரிலிருந்து இரண்டாவது கியருக்கு மாற்றினேன்.  ரொம்ப கடுமையாக இருந்தது.  எளிதாக மாறக்கூடிய கியர் மாறத் தயாராயில்லை.  இந்தச் சிரமத்துடன் வண்டியை சாமர்த்தியமாக ஓட்டிக்கொண்டுபோனேன்.  போய்ச் சேருவதற்குள்

வரும் வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு

வரும் வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெறும் இலக்கியக் கூட்டத்திற்கு எல்லோரும் வரும்படி கேட்டுக்கொள்கிறேன்.         கூட்டத்திற்கான அழைப்பிதழை இத்துடன் இணைத்துள்ளேன்.                                                                                           அழகியசிங்கர்

நகுலன் மதியம் டீ குடிக்க வந்தார்....

அழகியசிங்கர் நானும் நண்பரும் மதியம் அசோக்நகர் சரவணபவன் ஓட்டலில் காப்பி குடிக்கச் சென்றோம்.  அப்போது ஒரு வயதானவரைப் பார்த்து அசந்து விட்டேன்.  எனக்கு உடனே ஒருவர்தான் ஞாபகத்திற்கு வந்தார்.  நகுலன்.  அவர் எப்படி இங்கே வந்தார்.  அவர்தான் எப்போதோ போய்விட்டாரே என்று தோன்றியது. என்னால் நம்ப முடியவில்லை.  நகுலன் மாதிரி அந்த வயதானவர் தோற்றம் அளித்தார். பக்கத்தில் என்னுடன் இருந்த நண்பரைப் பார்த்துக் கேட்டேன்.  'இவரைப் பார்த்தால் நகுலன் மாதிரி தெரியவில்லையா?' என்று. நண்பர் ஒன்றும் சொல்லவில்லை.  நகுலன், அசோகமித்திரன், ஞானக்கூத்தன், பிரமிள், ஐராவதம், வெங்கட் சாமிநாதன், ஸ்டெல்லாபுரூஸ் என்று பலர் இறந்து விட்டார்கள்.  ஆனால் அவர்கள் அனைவரும் என் நினைவில் இருந்து கொண்டிருக்கிறார்கள்.   அந்தப் பெரியவரைப் பார்த்தவுடன் நகுலன் மாதிரி இருந்தார்.   அவரைப் பார்த்து கேட்டேன் : "உங்கள் பெயர் டி கே துரைசாமியா?ýý "இல்லை. மோகன்." என்னால் நம்ப முடியவில்லை.  எப்படி இவர் நகுலன் மாதிரி தோற்றம் அளிக்கிறார் என்று. "ஒரு போட்டோ எடுத்துக்கொள்ளட்டுமா?"

மயிலாடுதுறைக்குச் சென்று வந்தேன்....பகுதி 2

அழகியசிங்கர் என் அறையில் என் கண் முன்னால் பல புத்தகங்கள் இருக்கின்றன.  எந்தப் புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டு படித்தாலும் படித்துக்கொண்டே போகலாம்.  ஆனால் எதாவது ஒன்றை எடுத்து கொஞ்சம் புரட்டிப் பார்த்தாலும் பின் அதை வைத்துவிட்டு வேறு எதாவது ஒரு புத்தகத்தை எடுத்துப் படிக்கத் தோன்றும்.  மெதுவாகப் படிக்கலாமென்று விட்டுவிடத் தோன்றும். ஆனால் ஒரு வண்டியில் வெகு தூரம் செல்லும்போது எதாவது புத்தகங்களை பத்திரிகைகளை எடுத்துக்கொண்டு போக வேண்டுமென்று தோன்றுகிறது.  மேலும் இரவு நேரங்களில் இதுமாதிரியான வண்டிகளில் பயணம் செய்யும்போது தூக்கம் சிறிது கூட வருவதில்லை.  நம் பக்கத்தில் உள்ள பயணிகள் இதுமாதிரியான யாத்திரிகளில் பழக்கமானவர்கள் நன்றாகக் குறட்டை விட்டுத் தூங்கிக்கொண்டிருப்பார்கள்.   அது போராகத் தோன்றுகிறது.  அதனால் இந்த முறை இரவு பயணத்தை தவிர்த்துவிட்டு பகல் பயணத்தை ஏற்படுத்திக்கொண்டேன். இந்தப் பயணத்தில் போகும்போதும் வரும்போதும் நான் பத்திரிகைகளையும் புத்தகங்களையும் படித்துக்கொண்டே போனேன்.  நான் எடுத்துக்கொண்ட புத்தகங்களைப் படித்துவிட வேண்டுமென்ற துடிப்பும் என்னிடம் இர

மயிலாடுதுறைக்குச் சென்று வந்தேன்....பகுதி 1

மயிலாடுதுறைக்குச் சென்று வந்தேன்....பகுதி 1 அழகியசிங்கர் இந்த முறை நானும் மனைவியும் மயிலாடுதுறைக்கு சோழன் எக்ஸ்பிரஸ் பிடித்துப் போனோம்.  ஏன் இப்படிச் சொல்கிறேன் என்றால் பகல் நேரத்தில் வண்டியில் போவதில் சில சௌகரியங்கள் உண்டு.  வெளியே ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்துக்கொண்டு போகலாம்.  பல காட்சிகள் மனதில் நிழலாடும்.  நமக்குத் தெரியாத வித்தியாசமான மனிதர்களைச் சந்திக்கலாம்.  பலர் பேச மாட்டார்கள். சிலர் புன்னகை புரிவார்கள்.  நான் ஒவ்வொரு முறையும் பகல் நேரத்தில் போகும்போது புத்தகங்கள், பத்திரிகைகள் எடுத்துக்கொண்டு போய் படிப்பேன். இந்த முறையும் அப்படித்தான்.   முன்பெல்லாம் அதிகமாகக் கையில் எடுத்துக்கொண்டு போய் படிக்காமல் சிலவற்றை எடுத்துக்கொண்டு வந்து விடுவேன்.  அப்படியெல்லாம் ஆகக் கூடாது என்று எப்படியும் படிக்கத் தீர்மானித்தேன். விருட்சம் 105வது இதழுக்கு அனுப்பிய கதைகளையும் பிரிண்ட் செய்து எடுத்துக்கொண்டு போனேன் படிக்க.   முதலில் அந்திமழை மார்ச்சு மாதம் இதழை எடுத்துக்கொண்டு போனேன் (உண்மையில் நான் கிளம்பிய அவசரத்தில் இன்னும் சில பத்திரிகைகளையும் எடுத்துக்கொண

ஸ்கூட்டருக்கு மாறிவிட்டேன்......

அழகியசிங்கர் ஆரம்பத்தில் நான் ஒரு ஸ்போர்ட்ஸ் சைக்கிள் வாங்கினேன்.  அதை வைத்துக்கொண்டு சென்னையில் எல்லா இடங்களுக்கும் சுற்றுவேன். அலட்சியமாக மாம்பலத்திலிருந்து மயிலாப்பூருக்குச் செல்வேன். மயிலாப்பூரில் உள்ள நண்பருக்கு என் மீது ஆச்சரியம். திருவல்லிக்கேணியில் உள்ள இலக்கிய நண்பர்களைப் பார்ப்பேன்.  உண்மையில் நான் சைக்கிளை ஓட்டிக்கொண்டு செல்வதில்தான் ஆர்வம்.   இதைச் சாக்காக வைத்துக்கொண்டு அவர்களைப் பார்ப்பேன்.  என்னால் முடிகிறது என்ற சந்தோஷம். ஒரு முறை என் மனைவியை பின்னால் உட்கார வைத்து ஓட்டிக்கொண்டு போனேன்.  ஒரு பள்ளத்தில் ஏறி இறங்கிய போது மனைவி கீழே விழுந்து விட்டாள்.  எனக்குச் சற்று அதிர்ச்சியாக இருந்தது.  சைக்கிள் மோகம் கொஞ்சம் கொஞ்சமாகப் போய் ஒரு லாம்பி ஸ்கூட்டர் வாங்கினேன்.  உண்மையில் எனக்கு லாம்பி ஸ்கூட்டர் வாங்கப் பிடிக்கவில்லை.  அப்போதெல்லாம் பஜாஜ் ஸ்கூட்டர்கள் அவ்வளவு சுலபத்தில் கிடைக்காது.  வெஸ்பா கூட.  அதனால் லாம்பி வாங்கினேன்.  பல ஆண்டுகள் லாம்பி வண்டியில் பறந்து கொண்டிருந்தேன்.  ஒரு முறை ஒரு சைக்கிள் எதிரில் வந்த லாம்பியை ஒரு தட்டுத் தட்டியது.  அவ்வளவ

சி சு செல்லப்பாவின் இரண்டாவது நாவல்.....

சி சு செல்லப்பாவின் இரண்டாவது நாவல்..... அழகியசிங்கர் இந்தக் கட்டுரையைப் படிப்பவர்கள் எல்லோருக்கும் தோன்றும்  எனக்குப் புத்தி எதாவது குழம்பிப் போயிருப்பதாக. கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது.   சி சு செல்லப்பா ஒரே ஒரு நாவல்தான் எழுதியிருக்கிறார்.  எப்படி இரண்டாவது நாவல் எழுதியிருப்பதாகச் சொல்ல முடியும்.  அவர் எழுதிய ஒரே நாவல் சுதந்திர தாகம் என்றுதான்  நீங்கள் முணுமுணுப்பது என் காதில் விழாமல் இல்லை. சுதந்திரதாகம் என்ற நாவலை எழுதிய சி சு செல்லப்பா அவர் முயற்சியில் புத்தகமாகவும் கொண்டு வந்து விட்டார்.  80 வயதில் அவர் செய்த சாதனையாகத்தான் இதை  நான் நினைக்கிறேன்.  தானே நாவல் எழுதி தானே புத்தகமாகப் பதிப்பித்த துணிச்சல் சி சு செல்லப்பாவைத் தவிர யாருக்கும் வராது.   அதாவது அவருடைய 80வது வயதில்.  தமிழில் எந்த எழுத்தாளராவது  இது மாதிரி துணிச்சலாக இருந்திருக்கிறார்களா என்பது எனக்குத் தெரியவில்லை.   ஏன் இந்தியா அளவில் எந்த எழுத்தாளராவது உண்டா?  உங்களுக்கு விபரம் தெரிந்தால் குறிப்பிட வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.   சி சு செ முயற்சியில் எத்தனையோ இடர்பாட

அன்று மார்ச்சு ஒன்றாம் தேதி..

அழகியசிங்கர் நான் அஸ்தினாபுரம் வங்கிக் கிளையில் பணிபுரிந்து கொண்டிருந்தேன்.  2008ஆம் ஆண்டு.  அன்று சனிக்கிழமை.   மார்ச்சு ஒன்றாம் தேதி.  காலை நேரம்.  என் நண்பர்களிடமிருந்து போன் வந்தது.  'ஸ்டெல்லா புரூஸ் தற்கொலை செய்து கொண்டு விட்டார்.' செய்தியைக் கேட்டவுடன் அதிர்ந்து விட்டேன்.  என் நெருங்கிய நண்பரும் எழுத்தாளருமான ஸ்டெல்லா புரூஸ் தற்கொலை செய்துகொண்டு விடுவார் என்பதை சற்றும் நம்பமுடியவில்லை. என் நண்பர்கள் 'உடனே கிளம்பி வரும்படி' சொன்னார்கள்.  நான் வங்கி மேலாளரிடம் சென்று, üஎனக்குத் தெரிந்தவர் திடீரென்று இறந்து விட்டார், நான் கிளம்ப வேண்டும்.ý என்றேன்.  மேலாளர் கொஞ்சமும் இரக்கமில்லாமல், 'உங்களை இப்போது அனுப்ப முடியாது. வேலையெல்லாம் முடித்துவிட்டுப் போங்கள்,' என்றார்.  நான் சொன்ன விஷயத்தின் மீது அவருக்குத் துளிக்கூட இரக்கமே இல்லை.  என்ன செய்வது என்று புரியவில்லை. பின் என்ன வேண்டுமானாலும் நடக்கட்டும்.  நான் அங்கிருந்து கிளம்பிவிடுவது என்ற முடிவுக்கு வந்தேன்.  பரபரப்பாக இருந்தேன்.  ஒரு மனிதன் எந்த இடிமாதிரி செய்தி கேட்டாலும் பதட்டப்படாமல் இருக்கப் பழக

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - 84

அழகியசிங்கர்   அமர்ந்திருக்கும் நெடுங்காலம் ஸ்ரீஷங்கர் நீ என்பது எனக்கு துலங்கும் வெம்மைமிகு தாபச் சொற்கள் என்னில் புத்துயிர்களை ஈணுவது நான் என்பது உனக்கு உனது நீர்மையில் அடியுறக்கம் கொள்ள அனுமதித்திருக்கும் மீன் சிலவேளை சிறு சலனம்கூட அற்ற பூட்டிய கதவுகளுக்குக்கீழ் அமர்ந்திருக்கும் என் நெடுங்காலமும்தான் நீ நானென்பது உன் விருப்பத்துக்கென குற்றங்கள் புரிய நீ நியமித்திருக்கும் ஒப்பந்தக்காரன் எனக்கு நீ உறங்கும் என் குறியின்மேல் அலைந்து கொண்டிருக்கும் பூரான் அதன் துளைக்குள் பரபரத்து நுழைவது மேலும் நீ என்பது எனக்கு தனித்து கரையில் அமர்ந்திருக்கும் பசித்த உயிரை இரை காட்டி அழைக்கும் தெப்பம் நானோ நீ தரும் மாமிசம் உண்டு உயிர்த்திருக்குமுன் வளர்ப்பு விலங்கு நீயோ என்னைத் தெரிவிக்கமுடியாதபோது தரித்தயென் ஆடைகளிலிருந்து கழற்றிவிட்டுக்கொள்ளும் முழுப்பொத்தான்களும்தான் நானுனக்கென்பது உனை மீட்டெடுக்கும் கனவுகளின்மேல் நீ உருவாக்கிக்கொண்டிருக்கும் சித்திரத்தய்யல் நீயெனக்கென்பது உன்னோடு கிடந்து நாம் இல்லாது போக விரும்பும் புலன்களின் காமத்தை ஆராதிப்