Skip to main content

Posts

Showing posts from March, 2020

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - தொகுதி - 2 - 137

அழகியசிங்கர்  நதி கி.தாமரைச்செல்வன் மலையினிடுக்கில் சுனையாய் தோன்றி போகிற போக்கில் ஒடுங்கிச் சிறுத்து ஓசை காட்டி அகன்று பெருத்து அமைதியாய் நடந்து ஆர்ப்பரித்து அருவியாய் விழுந்து நதிக்கரைதோறும் நாடு வளர்த்து செம்புலம் பெயர்ந்தால் செந்நீராக கடல்மடி நுழைந்தால் வானிறமாக நன்றி : மனதினில் கவிதை பூவெழுத - கி.தாமரைச்செல்வன் - பொதினி பதிப்பகம், 9 சுப்பையா நகர் அனெக்ஸ், அய்யப்பன்தாங்கல், சென்னை 600 056 பக்கங்கள் : 100 - விலை ரூ.120 - தொடர்புக்கு : 9841086696

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - தொகுதி - 2 - 136

அழகியசிங்கர்   சிமெண்ட் பெஞ்சுகள் நஞ்சுண்டன்                                                      வசந்த காலத்தில் பூத்துக்குலுங்கும் மரங்களின் கீழிருக்கும் சிமெண்ட் பெஞ்சுகள் கடந்து செல்லும் ஒவ்வொருவரையும் அழைக்கின்றன 'வா. உட்கார். ஓய்வெடுத்துக்கொள். கோடை வெயிலிலோ விநயமாய் வேண்டுகின்றன 'மன்னித்துக்கொள். வேறிடம் தேடு.' சிமெண்ட் பெஞ்சில் அமரும் யாரும் அறியார் தனக்கு முன்னும் பின்னும் அமர்கிறவர் யாரென்று. சிமெண்ட் பெஞ்சுகள் மட்டும் அறியும் உட்காரும் மனிதர் யாவரையும். நன்றி : சிமெண்ட் பெஞ்சுகள் - நஞ்சுண்டன் - பக்கங்கள் : 52 - விலை : ரூ.25 - ஆண்டு : நவம்பர் 1996

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - தொகுதி - 2 - 135

அழகியசிங்கர்  புத்தரின் படுகொலை எம்.ஏ.நுஃமான் நேற்று என் கனவில் புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார்.  சிவில் உடை அணித்த  அரச காவலர் அவரைக் கொன்றனர்.  யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே  அவரது சடலம் குருதியில் கிடந்தது.  இரவில் இருளில்  அமைச்சர்கள் வந்தனர்  'எங்கள் பட்டியலில் இவர்பெயர் இல்லை  பின் ஏன் கொன்றீர்?'  என்று சினந்தனர்.  'இல்லை ஐயா,  தவறுகள் எதுவும் நிகழவே இல்லை  இவரைச் சுடாமல்  ஓர் ஈயினைக் கூடச்  சுடமுடியாது போயிற்று எம்மால்  ஆகையினால்.  என்றனர் அவர்கள். 'சரி சரி  உடனே மறையுங்கள் பிணத்தை'  என்று கூறி அமைச்சர்கள் மறைந்தனர்.  சிவில் உடையாளர்  பிணத்தை உள்ளே இழுத்துச் சென்றனர். தொண்ணூறாயிரம் புத்தகங்களினால்  புத்தரின் மேனியை மூடி மறைத்தனர்  *சிகாலோகவாத சூத்திரத்தினைக்  கொழுத்தி எரிந்தனர். புத்தரின் சடலம் அஸ்தியானது  *தம்ம பதமும்தான் சாம்பரானது. (சிகாலோகவாத சூத்திரம், தம்மபதம் ஆகியன பௌத்தமத அறநூல்கள்.) நன்றி : மழை நாட்கள் வரும் - எம்.ஏ.நுஃமான் - பக்கங்கள் : 80 -

அமேசான் கிண்டலில் நவீன விருட்சம் 112வது இதழ்

அழகியசிங்கர் விருட்சம் 111வது இதழ் செப்டம்பர் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை. ஆனால் முடிந்த மாதம் டிசம்பர் 2019. இதைத் தொடர்ந்து புத்தகச் சந்தை ஜனவரி மாதம் நடந்தது. 112வது இதழ் கொண்டு வர முடியவில்லை. புத்தகக் காட்சி முடிந்தவுடன் பிப்ரவரி மாதம் முழுவதும் சாக்கு மூட்டைகளில் கட்டிப் போட்டிருந்த புத்தகங்களை அடுக்கி வைப்பதில் பெரும்பாலான நேரம் போய்விட்டது. கூடவே நண்பர் ஒருவரும் உதவி செய்தார். மார்ச்சு மாதம் வந்தவுடன் கிட்டத்தட்ட 112வது இதழை முடித்து விட்டேன். ஒருவழியாக அச்சில் கொண்டு வரத் தயாராக இருந்தபோது கொரானா விருட்சத்தைத் துரத்தி விட்டது. இதோ இதழை அச்சடிக்கத் தயார் நிலையில் வைத்திருக்கிறேன். ஆனால் நவீன விருட்சம் இதழை எப்படியாவது கொண்டு வர வேண்டுமென்று தோன்றியது. ஏற்கனவே நவீன விருட்சம் இதழ் 105 ஐ நான் அமேசான் கிண்டலில் வெளிப்படுத்தியிருக்கிறேன். கிண்டலில் அந்த இதழை பலர் வாசித்திருக்கிறார்கள். அதேபோல் 112வது இதழையும் கொண்டு வர நினைத்து கொண்டு வந்து விட்டேன். கிண்டலில் நவீன விருட்சத்தை விலை கொடுத்து வாங்காமல் பக்கங்களை வாசிக்கலாம். 80 பக்கங்கள் கொண்ட இந்த

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - தொகுதி - 2 - 134

அழகியசிங்கர்   அறிவேனா சி.சு.செல்லப்பா கனவுக்குள் கனவு; பிளந்து இமை திருகி- எழ விழித்ததுண்டு நினைவுக்குள் நினைவு; மூழ்கி சொரணை தப்பி - விழ உறங்கிய துண்டு வாழ்வுக்குள் வாழ்வு; தெளிந்து நேர் ரோட்டில் நடந்தேனா சாவுக்குள் சாவு; வற்றி ஓயும் பொழுதை அறிவேனா நன்றி : மாற்று இதயம் - சி.சு.செல்லப்பா - எழுத்து பிரசுரம் - முதல் பதிப்பு - மே, 1974 - பக்கங்கள் : 104 - க்ரவுன் அளவு - விலை : ரூ. 4,00

கொரானாவைப் பற்றி கவலைப் படாத இளைஞர்கள்

அழகியசிங்கர் எங்கள் தெரு வித்தியாசமானது. தெருவில் எல்லாமே நடக்கும். தெருவை உற்சாகமாக வைத்துக்கொள்பவர்கள் எங்கள் தெரு இளைஞர்கள். சிறுவர்கள். கொஞ்ச நேரம் கிரிக்கெட் ஆடுவார்கள். பின் கேரம் விலையாடுவார்கள். கொரானோவைப் பற்றி கவலைப்படாமல் விலையாடிக் கொண்டிருக்கும் இளைஞார்களின் புகைப்படத்தை இத்துடன் இணைத்துள்ளேன். (அவர்களுக்குத் தெரியாமல்)

அசோகமித்திரன் இரண்டு முறைதான் வீட்டிற்கு வந்திருக்கிறார்

அழகியசிங்கர் அவர் தி.நகரில் உள்ள முதல் பையன் வீட்டிலிருந்தபோதுதான் நான் அடிக்கடி சந்திப்பேன். ஒவ்வொரு முறை அவருக்கு உதவி செய்யும் நோக்கம் எனக்கு இருந்தது.  எங்காவது போக வேண்டுமென்றால் என்னைத் துணைக்குக் கூப்பிடுவார்.  நானும் உடனே போய்விடுவேன்.  நான் மேற்கு மாம்பலத்தில் இருந்தேன். அவரைப் பார்க்க எனக்கு எளிதாக இருந்தது. மேலும் நான் பணியிலிருந்து ஓய்வு பெற்றிருந்தேன்.  எந்த நேரத்திலும் நான் அவரைப் பார்க்கப் போவேன். மேற்கு மாம்பலத்தில் அவருடைய நண்பரின் பெண் கல்யாணத்திற்குக் கூப்பிட்டார்.  எனக்குச் சற்று சங்கடம்தான்.  என்னை யாரென்று தெரியாத ஒரு கல்யாணத்திற்குப் போகிறோமே என்று.  ஆனால் அசோகமித்திரனை அழைத்துக் கொண்டு போகிறோம் என்று மகிழ்ச்சியுடன் செல்வேன்.  அந்தக் கல்யாணத்திற்கு யாரும் என்னை அழைக்காவிட்டாலும் பரவாயில்லை.  ஆனால் அசோகமித்திரன் என்னை அழைக்கிறார் என்று நினைத்துக் கொள்வேன். ஆனால் திருமணம் போன்ற வைபவத்திற்கு அவரை அழைத்துக் கொண்டு போய்விட்டுத் திரும்பவும் அழைத்துக்கொண்டு வரும்போது அவர் தடுமாறிப் போய்விடுவார்.  ஏன் அவர் இப்படிக் கஷ்டப்படுத்திக் கொள்கிற

காந்தியுடன் நாங்கள் 2

அழகியசிங்கர் திருமதி ஆபா காந்தியின் நினைவுகளாக 14வது அத்தியாயத்திலிருந்து 24ஆம் அத்தியாயம் வரை இப் புத்தகத்தில் வெளிவந்துள்ளது. ஆபா காந்தியை 12வயது சிறுமியாக இருக்கும்போதே அவருடைய தந்தை சேவா கிராம ஆசிரமத்தில் சேர்த்து விடுகிறார். ஆபா காந்திக்குப் புரியவில்லை. அனாதைக் குழந்தைகளைத்தானே ஆசிரமத்தில் சேர்ப்பார்களே தான் அனாதை இல்லையே என்கிறார் அப்பாவிடம். வர்தாவிலிருந்து சேவா கிராமம் சுமார் 5 மைல் தூரம். முதலில் ஆபா காந்திக்கு விருப்பமில்லை. தன் தாயரை விட்டு வருகிறோமே என்று தோன்றியத. ஆபா காந்தியையும் அவர் அண்ணன் தீரேன் பாபியையும் அழைத்துக்கொண்டு சேவாகிராமம் வருகிறார் அவர்கள் தந்தையாகிய அம்ருத்லால். வீட்டு நினைவாகவே இருக்கிறார் ஆபா காந்தி. காந்திஜி வேடிக்கைப் பிரியர். "நான் வேடிக்கைக்காரனாக இல்லாவிட்டால் எப்போதோ தற்கொலை செய்து கொண்டிருப்பேன்" என்று அடிக்கடி சொல்வார். "என்ன தீர்மானித்தாய்? இங்கே இருப்பாய் அல்லவா?" என்று கேட்கிறார். "ரொம்ப அம்மா ஞாபகம் வருகிறது. மிஞ்சிமிஞ்சிப் போன

காந்தியுடன் நாங்கள்....1

அழகியசிங்கர் காந்தியைப் பற்றி எந்தப் புத்தகம் படித்தாலும் அதன் மூலம் நமக்கு எதாவது செய்தி கிடைக்காமலிருக்காது.  நாம் அந்தப் புத்தகத்தைப் படித்துவிட்டு சில விஷயங்களை ஏற்றுக் கொள்ளாமலிருக்க மாட்டோம்.  அல்லது படித்துவிட்டு அப்படியா என்று ஆச்சரியப்படாமலிருக்க மாட்டோம்.   நான் சமீபத்தில் பப்ளிகேஷன்ஸ் டிவிஷன் வெளியிட்ட காந்தியுடன் நாங்கள் என்ற  புத்தகத்தைப் படித்தேன்.  இதை எழுதியவர்கள் கனு காந்தி மற்றும் ஆபா காந்தி.  இந்தப் புத்தகத்தைத் தமிழாக்கம் செய்தவர் டாக்டர் எம். ஞானம். கனு காந்தி காந்தியின் பேரன்.  ஆபா காந்தி கனு காந்தியின் மனைவி.  கடைசிவரை இவர்கள் இருவரும் காந்தியுடன் வாழ்ந்தார்கள்.  கனு காந்தியின் நினைவுகள், ஆபா காந்தியின் நினைவுகள் என்று இரண்டு பிரிவுகளாகப் புத்தகத்தைப் பிரித்துள்ளார்கள். பல தருணங்களையும், நிகழ்ந்த நிகழ்ச்சிகளையும் இந்நூலில் நினைவுச் சித்திரங்களாக வரைந்துள்ளனர்.  இவர்கள் இருவர்களும் காந்திஜியை எவ்வளவு நெருக்கத்தில் கண்டார்களோ, அவ்வளவு நெருக்கமாக அநேகமாக யாரும் கண்டிருக்க மாட்டார்கள்.  அந்த விதத்தில் இந்தப் புத்தகம் ஒரு முக

துளி - 113 - அசிக்காடு வீரனும், சொகுசு விடுதிகளும்

அழகியசிங்கர் சமீபத்தில் நான் அசிக்காடு சென்றேன்.  மயிலாடுதுறையிலிருந்து அசிக்காடு என்ற கிராமம் ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது.  அசிக்காடில் உள்ள புராதன சிவன் கோயிலுக்கும், பெருமாள் கோயிலுக்கும் கும்பாபிஷேகம் நடத்தும் முகாந்தரமாக ஒரு யாகம் நடத்தினார்கள். எல்லோரும் பல இடங்களிலிருந்து வந்திருந்து அசிக்காடில் குமிழியிருந்தோம்.  நல்ல வெயில்.   முதல் நாளில் ருத்திர யாகம். அசிக்காடு வீரன் கோயிலில்.  காலை ஏழு மணியிலிருந்து மதியம் வரை நீண்டிருந்தது.  காலையில் டிபன் சாப்பிட்டு விட்டு உட்கார்ந்திருந்தோம்.  எனக்கு யாகத்தில் எழும் புகை கண்ணிற்கு ஆகாது.  அதனால் தள்ளிப்போய் உட்கார்ந்திருந்தேன்.  பல ஆண்டுகளுக்கு முன்னால் அசிக்காடு கிராமம் வருவதென்றால் உற்சாகமாக இருக்கும்.  முன்பு அங்கிருந்து பலர் வேற இடங்களுக்குக் குடிபெயர்ந்து போய்விட்டார்கள்.  அக்கிரகாரத் தெருவிஙூருந்த பல வீடுகளை விற்று விட்டுப் போய்விட்டார்கள். தெருவில் ஈ காக்காய் கிடையாது.  இரண்டு குளங்கள் உண்டு. ஒன்று மேல குளம்.  இன்னொன்று கீழ குளம்.  மேல குளத்தில் தண்ணீர் வற்றி விட்டது.   அந்த மேல குளத்திலிரு

நியாயமா?

அழகியசிங்கர் வாரத்தில் நான்கு நாட்கள் மட்டும் பத்திரிகைகள் வாங்குவேன்.  திங்கட் கிழமை தினமணி,  புதன் கிழமை தினத்தந்தி.  சனிக்கிழமை தமிழ் இந்து. ஞாயிற்றுக்கிழமை தமிழ் இந்து, தினமணி, தினமலர்.  ஏன் அப்படி வாங்குகிறேன் என்று கேள்வி கேட்கத் தோன்றும்.  புத்தகங்கள் பற்றிய செய்திகள் இந்தக் கிழமைகளில் இந்தப் பத்திரிகைகளில் வெளிவரும். இதனால் நாம் பல புத்தகங்களைப் பற்றி அறிந்துகொள்ள முடிகிறது.  ஓரளவு புத்தகங்களைப் பற்றி தகவல்களை இப் பத்திரிகைகள் தருகின்றன.  இது மாதிரி யாரும் செய்வதில்லை.  உண்மையில் அனுப்பப் படுகிற எல்லாப் புத்தகங்களைப் பற்றி எழுதுவது கூட இப் பத்திரிகைகளால் முடியாது. ஒரு சமயம்  விருட்சம் வெளியீடாக வந்த காஞ்சி மகானைப் பற்றிய புத்தக விமர்சனம் தினமணியில் வந்தது. அது வெளிவந்தவுடன் தொடர்ந்து போன் வந்து 100 பிரதிகள் வரை விற்றது.  என்னால் நம்ப முடியவில்லை.  ஆனால் இலக்கியப் புத்தகங்களுக்கு இந்த மதிப்பு கிடையாது.  இரண்டு மூன்று போன்கள் வந்தால் ஜாஸ்தி.  பெரும்பாலும் விஜாரித்துவிட்டு விட்டுவிடுவார்கள்.   இருந்தாலும் விருட்சம் வெளியீடாக வரும்  புத்தகங்களை அனுப்பிக் கொண்டிர

கொரோனா

                                 அழகியசிங்கர்                 தெருவில்  நடந்து செல்ல வீட்டுக் கேட்டைத் “ திறந்து  தெருவில் இறங்கினான் சுற்றிலும் கொரோனா கொரோனா என்ற ஓலம் காதில் விழ  யாரும் கண்ணில் படவில்லை தெருவில் நடந்தவன்  திரும்பவும் வீட்டிற்குள் சென்று கட்டிலின் அடியில் போய்  பதுங்கிக்கொண்டான்

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - தொகுதி - 2 - 133

அழகியசிங்கர்  ஜான்ஸி ராணி கவிதை முற்பகல் பிற்பகல் மதியம் முன் அந்தி ஏதோ ஒரு யாமம் எதிர்பார்த்த அல்லது எதிர்பாரா ஏதோ ஓர் க்ஷணம் நீ வரக்கூடும் தர்மராஜன் உன் நாமம் எருமையுன் வாகனம் என்பதென் கேள்விஞானம் நீ வருவதில் ஒன்றுமேயில்லை சுவாஸ்யமெல்லாம் இந்த காத்திருப்பில்தான். நன்றி : ஈஸ்ட்ரோஜன் கவிதைகள் - ஜான்ஸி ராணி - பக் : 70 -விலை : ரூ.80 - முதல் பதிப்பு : டிசம்பர் 2019 - வெளியீடு : வாசகசாலை பதிப்பகம், சென்னை 600073 தொடர்பு எண்கள் : 9942633833, 9790443979

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - தொகுதி - 2 - 132

அழகியசிங்கர்    பகிர்வு ஆர். ராஜகோபாலன்  பக்கத்துக் கோயிலில் தமிழ்த்தலைவன்* பற்றிய பொழிவு ஒரு நூறு பேருக்கும் மேல் வருகை சுவரோரத்தில் நெகிழி நாற்காலிகள் அடுக்கி வைக்கப்பட்டு ஒவ்வொனறாய்  வெள்ளை சிகப்பு நீல வண்ணங்களில் எடுத்துப் போட்டுக்கொள்கிறார் வருபவர் ஒவ்வொருவரும் ஒன்று மட்டும் கடைசியில் தேறவேயில்லை ஒரு கால் முறிந்து தள்ளாடுகிறது இப்பக்கமும் அப்பக்கமும் கடைசி வரிசைக்காரர் எச்சரிக்கிறார் இதைச்சொல்லி இப்போது வருவோரையெல்லாம் மீண்டும் மீண்டும் யாரேனும் உடல் பருமனானவர் உட்கார்ந்திருப்பாரோ கீழே விழுந்திருப்பாரோ மேற்கொண்டு என்ன ஆயிற்றோ நல்ல வேளை இப்போது அதற்கு தேவையில்லை உடல் சுருக்கி கண்களை மூடிமூடித்திறந்து உடைந்த நாற்காலிக்குள் படுத்திருக்கிறது ஒரு பழுப்புநிறக் குட்டிப்பூனை *தமிழ்த்தலைவன்: பேயாழ்வார் நன்றி : கால்நடைக் கவிதைகள் - ஆர்.ராஜகோபாலன்,  வித்யுத் பப்ளிகேஷன்ஸ், மனை எண்.10 மேட்டுத்தெரு, நெமிலிச்சேரி, குரோம்பேட்டை, சென்னை, பேசி : 900 310 76 54  பக். 64 - விலை : ரூ.100  

கனவு மெய்ப்பட வேண்டும்...

அழகியசிங்கர் எலிஸபத் கில்பர்ட் என்ற பெண் எழுத்தாளர் எழுதிய புத்தகம் ஈட், பிரே, லவ்.  இது ஒரு சுயசரிதம்.  இந்தப் புத்தகத்தில் அப்படி என்ன விசேஷம் என்ற கேள்வி உங்கள் மனதில் எழும்.  உலகம் முழுவதும் இந்தப் புத்தகம் 6 மிலியன் பிரதிகள் விற்றிருக்கின்றன. 1 மிலியன் என்றாலே பத்துலட்சம் இருக்குமென்றாலும் 6 மிலியன் என்றால் 60 லட்சம் பிரதிகள்.  நினைத்தே பார்க்க முடியவில்லை. இப்படி என் புத்தகம் ஒன்று விற்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள்.  நான் அதை அச்சடிப்பதற்கும் அனுப்புவதற்கும் திண்டாடிப் போய்விடுவேன்.  நல்லகாலம் எனக்கு ஆண்டவன் அதுமாதிரி அருள் புரியவில்லை. லட்சமே வேண்டாம்.  ஆயிரக்கணக்கில் ஒரு புத்தகம் விற்றால் கூட போதும். வேண்டவே வேண்டாம் நூற்றுக் கணக்கில் விற்றால் போதும்.. சுய சரிதம் என்பதால் இப்புத்தகம் சுவாரஸ்யமாகப் படிக்க முடிகிறது.  348 பக்கங்கள் உள்ள இந்தப் புத்தகத்தில் 30 பக்கங்கள்தான் படித்திருக்கிறேன். அதற்குள்ளேயே நிறையா மின்னல்கள் இப் புத்தகத்தில்.    ..பூமியில் கால் ஊன்றி நிற்கவேண்டும்.  நாலு கால்களில் நிற்பதுபோல் அழுத்தமாக நிற்க வேண்டும்.  அப்போதுதான் இந்த உலக

ஒரு தகவல்

அழகியசிங்கர் இந்த மாதம் (மார்ச்சு 2020) தீரா நதியில் "இரண்டு பிரதிகள் மட்டும்' என்ற நான் எழுதிய கட்டுரை பிரசுரமாகி உள்ளது. அவசியம் படிக்கவும். உங்கள் கருத்துக்களை navina.virutcham@gmail.com தெரிவிக்கவும்.