Skip to main content

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - தொகுதி - 2 - 133

அழகியசிங்கர்



 ஜான்ஸி ராணி கவிதை



முற்பகல் பிற்பகல்
மதியம் முன் அந்தி
ஏதோ ஒரு யாமம்
எதிர்பார்த்த
அல்லது
எதிர்பாரா
ஏதோ ஓர் க்ஷணம்
நீ வரக்கூடும்
தர்மராஜன் உன் நாமம்
எருமையுன் வாகனம்
என்பதென்
கேள்விஞானம்
நீ வருவதில்
ஒன்றுமேயில்லை
சுவாஸ்யமெல்லாம்
இந்த காத்திருப்பில்தான்.



நன்றி : ஈஸ்ட்ரோஜன் கவிதைகள் - ஜான்ஸி ராணி - பக் : 70 -விலை : ரூ.80 - முதல் பதிப்பு : டிசம்பர் 2019 - வெளியீடு : வாசகசாலை பதிப்பகம், சென்னை 600073 தொடர்பு
எண்கள் : 9942633833, 9790443979

Comments