Skip to main content

Posts

Showing posts from May, 2012

ழ கவிதைகள்

ழ என்ற சிற்றேடு ஆத்மாநாம் மூலம் 1978 ஆம் ஆண்டு உருவானது.  அவருக்கு பக்கபலமாக ஞானக்கூத்தன், ஆர்.ராஜகோபாலன், ஆனந்த், காளி-தாஸ் போன்ற பல நண்பர்கள் செயல்பட்டார்கள். ழ ஒரு சிற்றேடு.  மிகக் குறைவான பேர்களே வாசித்திருப்பார்கள்.  1978 லிருந்து 10 ஆண்டுகள் செயல்பட்ட ழ பத்திரிகை, ஆத்மாநாமின் தற்கொலையால் கிட்டத்தட்ட நின்றுவிட்டது. தமிழ் கவிதைக்கு ஒரு மாற்றத்தை எளிய வழியில் ஏற்படுத்திக் கொடுத்தது. இக் கவிதைகளைப் படிக்கும்போது கவிதை எழுதுவதற்கான ஒருவித ஒழுக்கத்தை பலரும் கற்றுக்கொள்ள முடியும். அழகியசிங்கர் ழ 6வது இதழ் பிப்ரவரி / மே 1979 ஒரு கவிதை  இந்தக் காலத்தில்  பிரும்மத்தை  கள்ளச் சந்தையில்  வீடீயில்  மந்திரிகளின் பொய்களில்  எதிலும் (மே) குறைபிரசவத்தில்,   அவசரத்தில்  தன்மைகள் எல்லாம் தோற்ற தந்திரத்தில்       -தான்  காணமுடியும் போலிருக்கிறது.    -மீண்டும்-  இந்தக் காலங்களில்  தெய்வத்திற்கும் (கூட) ஊர்  சுற்றும் ஆசை ஏற்பட்டுவிட்டது  என நினைத்தேன்-  சினிமாவெறும் கோவிலில்  நேற்று இரவு அவள் வந்தாள்  சிரித்தாள்  சொல்லறுற்றாள்  ''எப்போதுமே அவன்ஊர்களிலிருந்ததில்லை''      
தூக்கம் நிறைந்த கனவுகள்.. (சிறுகதை) ------------------------------ ------------------------------ ------------------------------ -- “ சா ர் வணக்கம் சார்..” “ம்ம்.. ம்ம்..” “எப்படி இருக்கீங்க சார் சௌக்கியம் தானுங்களே?” “எந்தா வேணும் பர” “சும்மா உங்களைப் பார்க்கலாம்னு வந்தேன் சார்…” “அப்படியா.., நீ பரஞ்சோ மோளே..” காதில் தொலைபேசியை அடைத்துக் கொண்டு, அவன் தன் மகளுடன் பேசத் துவங்கினான். அந்த வயது முதிர்ந்த தமிழர் எதிரே அப்பாவியாய் நின்றிருந்தார். இவன் அவரை ஒரு பொருட்டாகவே எண்ணவில்லை என்பதால் அவரே மீண்டும் அருகில் சென்று அழைத்தார் - “சார்....” “சொல்லுப்பா டண்டா-பாணி எந்தா வேணும், நான் பிசியா இருக்கேன்ல” “அப்படியே என் சம்பளம் பத்தி..யும்..” “சம்பளம்தான் போட்டாச்சே பேங்குக்குப் போய்க்காணும், அவ்வட சென்னு நோக்கு” “வந்துச்சு சார் இரண்டு நாள் குறைவா வந்திருக்கு சார் அதான் என்னன்னுக் கேட்கலாம்னு..” “அப்படியா, அங்க ஒங்க முதலாளி இருக்கார்ல போயி அவரைக் கேளு” “என்ன சார்..?” “சென்னு அவரை நோக்குன்னு..” “சரி சார்..” அவர் சரியென்று தலையாட்டிவிட்டு அந்த அறைவிட்டு வெளியே

சாட்சி

ஆற்றோரம் நீர் வற்றிய சிறு பகுதி தூண்டில் மிதவையை பார்த்திருக்கும் ஒரு சிறுவன் எனக்கோ பசி ஏறுவதில் குதூகலம் இறங்குவதில் கிலேசம் விட்டுப் போக மனமில்லை அடிவாரத்தையும் மலைமுகட்டையும் மலைச்சிகரம் கார்மேகம் மேனியை தொட்டுவிட்டுச் சென்றது கண்ணீரை மழையாகப் பொழியுமோ கானல் நீரைப் பருகினேன் களைப்பு நீங்க குளிக்க நினைத்து காலை உடைத்துக் கொண்டேன் பூக்கள் உதிர ஆரம்பித்துவிட்டது வசந்த காலத்தின் தொடக்கம் தென்றலினூடே வருகிறது.