ழ என்ற சிற்றேடு ஆத்மாநாம் மூலம் 1978 ஆம் ஆண்டு உருவானது. அவருக்கு பக்கபலமாக ஞானக்கூத்தன், ஆர்.ராஜகோபாலன், ஆனந்த், காளி-தாஸ் போன்ற பல நண்பர்கள் செயல்பட்டார்கள். ழ ஒரு சிற்றேடு. மிகக் குறைவான பேர்களே வாசித்திருப்பார்கள். 1978 லிருந்து 10 ஆண்டுகள் செயல்பட்ட ழ பத்திரிகை, ஆத்மாநாமின் தற்கொலையால் கிட்டத்தட்ட நின்றுவிட்டது. தமிழ் கவிதைக்கு ஒரு மாற்றத்தை எளிய வழியில் ஏற்படுத்திக் கொடுத்தது. இக் கவிதைகளைப் படிக்கும்போது கவிதை எழுதுவதற்கான ஒருவித ஒழுக்கத்தை பலரும் கற்றுக்கொள்ள முடியும்.
அழகியசிங்கர்
ழ 6வது இதழ்
பிப்ரவரி / மே 1979
ஒரு கவிதை
இந்தக் காலத்தில்
பிரும்மத்தை
கள்ளச் சந்தையில்
வீடீயில்
மந்திரிகளின் பொய்களில்
எதிலும் (மே) குறைபிரசவத்தில்,
அவசரத்தில்
தன்மைகள் எல்லாம் தோற்ற தந்திரத்தில்
-தான்
காணமுடியும் போலிருக்கிறது.
-மீண்டும்-
இந்தக் காலங்களில்
தெய்வத்திற்கும் (கூட) ஊர்
சுற்றும் ஆசை ஏற்பட்டுவிட்டது
என நினைத்தேன்-
சினிமாவெறும் கோவிலில்
நேற்று இரவு அவள் வந்தாள்
சிரித்தாள்
சொல்லறுற்றாள்
''எப்போதுமே அவன்ஊர்களிலிருந்ததில்லை''
s. சம்பத்
Comments