Skip to main content

சாட்சி


ஆற்றோரம்
நீர் வற்றிய
சிறு பகுதி
தூண்டில் மிதவையை
பார்த்திருக்கும் ஒரு சிறுவன்
எனக்கோ பசி

ஏறுவதில் குதூகலம்
இறங்குவதில் கிலேசம்
விட்டுப் போக மனமில்லை
அடிவாரத்தையும்
மலைமுகட்டையும்

மலைச்சிகரம்
கார்மேகம் மேனியை
தொட்டுவிட்டுச் சென்றது
கண்ணீரை
மழையாகப் பொழியுமோ

கானல் நீரைப்
பருகினேன்
களைப்பு நீங்க
குளிக்க நினைத்து
காலை உடைத்துக் கொண்டேன்

பூக்கள் உதிர ஆரம்பித்துவிட்டது
வசந்த காலத்தின் தொடக்கம்
தென்றலினூடே வருகிறது.

Comments