Skip to main content

Posts

Showing posts from May, 2019

நாய்கள் என்ற நாவலில் நகுலன் எழுதிய முன்னுரை..

அழகியசிங்கர் நகுலனே தயாரித்தப் புத்தகம் நாய்கள் என்ற நாவல்.   அவருடைய பெயரிலியே வெளியிட்டுள்ளார்.  அதை புக் வென்சர் என்ற வாசகர் வட்ட அமைப்பில் விற்பனை உரிமை கொடுத்துள்ளார். 102 பக்கங்கள் கொண்ட நாவல் இது.  அதில் அவர் எழுதியது சில வார்த்தைகள் என்ற பகுதி.   இகர் முதல்விக்கு சமர்ப்பணம் செய்துள்ளார்.  அதில் அவர் எழுதியதைப் படித்தப்போது எனக்கு தாங்க முடியாத சிரிப்பு வந்து விட்டது. நீ யாரோ நான் யாரோ யார் யாரோ யார் இவரோ   -  ''  நகுலன் '' - இதோ அவர் எழுதிய சில வார்த்தைகள். சில வார்த்தைகள் இது நான் எழுதிய நாவல்களில் ஆறாவது நாவல். இந்த ஆறு நாவல்களில் நிழல்கள்'', (நினைவுப் பாதை" இவ்விரண்டும் புஸ்தக -- ஸ்தாபனங்கள் வெளி யிட்டவை. (ரோகிகள்'' (குருஷேத்ரம்" என்ற தொகுப்பில் வந்தது. இரண்டு நாவல்கள் இன்னும் கையெழுத்துப் பிரதிகளாகவே இருக்கின்றன. இதைப் பற்றி நான் எவ்வித மனக்கிலேசமும் அடையவில்லை. ஒரு எழுத்தாளன் என்ற வகையில் எனது அடிப்படைக் கொள்கைகளில் ஒன்று - ஒரு எழுத்தாளனுக்கு மூலதனம் அவன் எழுத்துத்தான்.

துளி - 53 குமுதம் தீராநதியில் பேட்டி 2007

அழகியசிங்கர் 2007-ஆம் ஆண்டு தீராநதியில் அசோகமித்திரன் பேட்டி வந்துள்ளது.  அதேபோல் ஞானக்கூத்தன்.  இந்த பன்னிரண்டு ஆண்டுகளில் அவர்கள் இருவரும் இல்லை.  இதை நினைக்கும்போது சங்கடமாக இருக்கிறது.  இந்தப் பேட்டியை எடுத்தவர் கடற்கரை.  இதை இப்போதுதான் எடுத்துப் படிக்கிறேன்.  பொதுவாக நான் எல்லாப் பத்திரிகைகளையும் எடுத்துப் பவுண்டு செய்துவிடுவேன்.   பின் மெதுவாக எடுத்துப் படிப்பேன்.  எனக்கு அவ்வப்போது எடுத்துப் படிக்கும் கெட்ட பழக்கமில்லை.  சிலசமயம் என் கண்ணில் படாமலயே பவுண்டு வால்யூம் போய்விடும்.  இப்படி ஒரு தவற்றைச் செய்கிறேன்.  உடனே உடனே எடுத்துப் படித்துவிடவேண்டும்.   நான் ஒன்றும் அப்படிக் குடி மூழ்கிப் போகிற காரியமெல்லாம் செய்யவில்லை.  படித்திருக்கலாம்.  அப்போது வங்கியில் பணி புரிந்துகொண்டிருந்தேன்.  பந்த நல்லூரில்.  சனிக்கிழமைப் போய் ஞாயிற்றுக்கிழமை திரும்புவேன்.  கவனமெல்லாம் பயணத்திலேயே இருக்கும்.  ஆனால் படித்திருக்கலாம்.   இதில் இரண்டு மூன்று தீராநதி இதழ்களை பைன்ட் செய்யவில்லை. எப்படித் தொலைந்தது என்று தெரியவில்லை?   இந்தப் பேட்டி எடுக்கும்போது அசோகம

துளி - 52 - விருட்சம் 109வது இதழ்...

அழகியசிங்கர் அமெரிக்காவில் கிட்டத்தட்ட தயாரித்த 109-வது இதழை இங்கே முடித்துவிட்டேன்.  இன்னும் கொஞ்ச நாளைக்கு எல்லோருக்கும் பத்திரிகை அனுப்ப வேண்டும்.  இதோ ஆரம்பித்து விட்டேன்.  கிட்டத்தட்ட 10 நாட்களுக்குள் அனுப்பி விடுவேன் என்று நினைக்கிறேன். விருட்சம் தனி இதழ் ரூ. 20 தான்.  ஆண்டுச் சந்தா ரூ.80 தான்.  ஒரு இதழின் விலை ஓட்டல் சரவணபவனில் காப்பி குடிக்கிற விலைதான்.   வழக்கம்போல் இந்த இதழில் பங்குக்கொண்ட படைப்பாளிகளின் லிஸ்ட் தர விரும்புகிறேன்.  ஒரு அரிசோனன் என்பவர் அமெரிக்கா வாழும் தமிழர். குடியுரிமைப் பெற்றவர்.  அவர் ஒரு கதை எழுதியிருக்கிறார்.  1. ஜெயராமம் - சிறுகதை - ஸிந்துஜா                     2. தகுதி யாருக்கு? - சிறுகதை - ஒரு அரிசோன்      3. துளிம நிழல் - சிறுகதை - பானுமதி ந         4. சொல்மோகச் சம்போகம் -  கவிதை - நந்தாகுமாரன்      5. பிரபு மயிலாடுதுறை கவிதைகள் 6. எது பிரதானம் - சிறுகதை - ம மீனாட்சி சுந்தரம்           7. டிசோசாவின் காதலி - சிறுகதை - பிரேமா பிரபா         8. பிரதீபன் கவிதை - கவிதை                       

துளி - 51 தெலுங்கில் என் சிறுகதை

துளி - 51 தெலுங்கில் என் சிறுகதை அழகியசிங்கர் சம்மதம் என்ற என் சிறுகதையை தெகில் பிரசுரமாகி உள்ளது.  மொழி புரியாவிட்டாலும் தெலுங்கில் என் கதை வருகிறதென்பது மகிழ்ச்சியான விஷயம்.  ஒரு சமயம பஞ்சாப் மொழியில் என் கவிதைகள் சில மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஹிந்தியில் கதையும் கவிதையும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. தெலுங்கு மொழியில் வருவதற்குக் காரணமான கௌரி கிருபானந்தனுக்கு நன்றி பல. 

துளி - 50 - எல்லோருக்கும் அன்புடன்..

அழகியசிங்கர் Add caption நான் அவசரமாகத் தேடிக்கொண்டிருக்கிறேன்.  இன்னும் மூன்று புத்தகங்களை.   கிடைத்துவிடும் என்று நம்புகிறேன்.  ஆனால் இது குறித்து எழுதாமல் இருக்க முடியாது.   இரண்டு நாட்களுக்கு முன்னால்தான் இந்தப் புத்தகத்தை சந்தியா பதிப்பகத்தின் உரிமையாளர் கொடுத்தார்.  அன்றிலிருந்து இதை எடுத்துப் படித்துக்கொண்டு வருகிறேன்.  நான் விட்டு விட்டுத்தான் படித்து வருகிறேன். முழுவதும் படிக்க வேண்டுமென்பதில்லை.   பொதுவாகக் கடிதங்கள் என்றாலே அலட்சியப்படுத்துவார்கள்.  பெரும்பாலோர் கடிதங்களைச் சேகரித்து வைப்பது கிடையாது.  அலட்சியம் என்றால் அவ்வளவு அலட்சியம் செய்வார்கள்.   வண்ணதாசன் கடிதங்கள் எல்லாம் சேகரித்து வைத்துள்ளார்கள்.  அதிலும் அவருடைய நண்பர்கள் எல்லாவற்றையும்.  முக்கியமான கடிதங்கள் ஒன்றிரண்டு போனாலும் கடிதங்களைச் சேகரித்து வைத்துள்ளார்கள். எனக்கு ஆச்சரியம் இந்தத் தொகுப்பு. கடிதங்களாகவே 200 பக்கங்களுக்கு மேல்.  ஆச்சரியமாக இருக்கிறது.  நவீன விருட்சத்திற்குக் கூட கடிதம் எழுதியிருக்கிறார்.  தேடிப் பார்க்கவேண்டும்.  இப்படி விட்டுப்போன கடிதங்களும் இருக்கும்

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - தொகுதி - 2 - 110

அழகியசிங்கர் புனை கதைகள் சேது மாதவன் காலில் செருப்பின்றி நான்கு  மைல் தொலைவு நடந்து சென்று படித்தது... மூன்று ஜோடி உடைகளையே மாற்றி மாற்றிப் போட்டது ஐந்து பைசா பென்சிலைத் தொலைத்து அப்பாவிடம் அடி வாங்கியது.... பள்ளியிறுதி வகுப்பு வரை தமிழ் மொழியில் கற்றது. ஒரு புத்தகத்தில் அடங்கிய புனை கதைகளாக விரிகின்றன இத்தனையும் என் மகனுக்கு நன்றி :  உலா பதிப்கம், 132 வங்கி ஊழியர் குடியிருப்பு, திருவனைக்காவல், திருச்சிராப்பள்ளி 620 005

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - தொகுதி - 2 - 109

கோடை நகர்ந்த கதை  கனிமொழி ஜி காற்றில் பறந்து என் மேசைக்கு வந்த இலைச்சருகு கோடை நகர்ந்த கதையைச் சொல்லி சரசரக்கிறது நன்றி : கோடை நகர்ந்த கதை - கனிமொழி ஜி - உயிர்மை பதிப்பகம், 11/29 சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை 18- பக்கம் : 72 - விலை : 65  - வெளியான ஆண்டு : மார்ச்சு 2016

தோப்பீல் முஹம்மது மீரான்

அழகியசிங்கர் ரொம்ப ஆண்டுகளுக்கு முன்னால் தோப்பில் முஹம்மது மீரான் அவர்களை விஜயா பதிப்பகத்தில் சந்தித்தேன்.  வேலாயுதம் அவர்கள்தான் முஹம்மது மீரானை எனக்கு அறிமுகப்படுத்தினார்.   மீரான் வியாபாரம் செய்பவர்.  அவருடைய புத்தகத்தை அவரே ஜலீலா பப்ளிஷிங் ஹவுஸ் என்ற பெயரில் பதிப்பகம் ஆரம்பித்து புத்தகத்தை விற்றுக்கொண்டிருந்தார். அவர் புத்தகங்களை வெற்றிகரமாக விற்றவர்.  இது புதிய தொழில்.  அவர் ஏற்கனவே மேற்கொண்ட வியாபாரம் இல்லை இது.  அன்று அவருடைய புத்தகங்களை வெற்றிகரமாக விற்றதைப் பற்றி சொன்னதை இன்னும் கூட என்னால் மறக்க முடியாது.  நான் ஒரு கடலோர கிராமத்தின் கதை என்ற நாவலைத்தான் படித்திருக்கிறேன்.  கூனன் தோபபு, துறைமுகம் நூலகள் என்னிடம் உள்ளன.  இனிமேல்தான் எடுத்துப் படிக்க வேண்டும். ஒரு எழுத்தாளரைப்பற்றிய ஞாபகம் அவர் மறைந்த பிறகுதான் நமக்கு ஏற்படுகிறது.  மீரானுக்கு அளிக்கும் அஞ்சலி அவர் புத்தகங்களை எடுத்து வாசிக்கும்போதுதான் நிறைவேறும் என்று தோன்றுகிறது.  இதோ வாசிக்கிறேன்..

அதிர்ச்சியான தகவல்

அழகியசிங்கர் நேற்று காலை பத்து மணி சுமாருக்கு ஒரு செய்தி வந்தது.  அந்தச் செய்தி என்னை திடுக்கிட வைத்தது.  என் தூரத்து உறவினரின் மனைவி இறந்த செய்திதான் அது.  வயது அதிகமாகவில்லை.  ஆனால் அந்த பெண்மணி இறந்து பத்து நாட்கள் ஆகிவிட்டது.  பத்தாவது நாளுக்கு வரும்படி அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது.  என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.  சின்ன வயதில் ஒரு பெண் மரணம் அடைவதா? இந்தச் செய்தியை அனுப்பியவருக்கு உடனே போன் செய்தேன்.  அப்போது அவர் சொன்ன தகவல் என்னைத் திடுக்கிட வைத்தது. அந்தச் செய்தியை அனுப்பியவரின் சகோதரர் ராஜ கீழ்பாக்கத்தில் குடியிருக்கிறவர்.  அவர் விமானப்படையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.   அவர், அவர் மனைவி, அவர்களுடைய பேரன் மூவரும் ஒரு டூ வீலரில் வந்து கொண்டிருந்தார்கள்.  அவர்கள் இடத்திற்கு திரும்பும்போது எதிரில் வேகமாக வந்த ஒரு ஸ்போர்ட்ஸ் டூ வீலர் இவர்கள் மீது மோதியது.  இதில் அந்த இடத்திலேயே அவர் மனைவி இறந்து விட்டார்.  இவருக்கு தலையில் பலத்த காயம்.  அவர்களுடைய பேரனுக்கு காலில் எலும்பு முறிவு.  ஸ்போர்ட்ஸ் டூ வீலரில் வந்தவனுக்கு முதுகில் எலும்பு முறிவு.  இந்தச் ச

தெரியாமல் நடந்த தவறு

அழகியசிங்கர் 100 கவிஞர்களின் 100 கவிதைகள் கொண்ட தொகுப்பு மனதுக்குப் பிடித்தக கவிதைகள் தொகுதி 1.   இதே இரண்டாவது தொகுதியையும் ஆரம்பித்தாகிவிட்டது.   முதல் தொகுதியில் திசிசடை கவிதையைத் தேர்ந்தெடுக்கும்போது ஒரு சிறிய தவறு நடந்துவிட்டது.  திரிசடை என்ற எழுத்தாளர் நகுலனின் சகோதரி.  அவருடைய கவிதைகள் முழுவதையும் கோபால்சாமி என்பவர் வெண்ணிலா என்ற புனைபெயரில் தேர்ந்தெடுத்துள்ளார்.  அப்படி தேர்ந்தெடுக்கம்போது தவறுதலாக விருட்சம் இதழில் வெளிவ்ந்த பசுவய்யாவின்  நேற்றைய கனவு  என்ற கவிதையை திரிசடை கவிதைகளுடன் சேர்த்து விட்டார்.  இந்தத் தொகுதி தொகுக்கும்போது திரிசடை உயிரோடு இருநதிருந்தால் இந்தத் தவறு நடந்திருக்காது.  திரிசடையின் கணவர் சுவாமிநாதன் மனைவியின் நினைவாக இந்தத் தொகுப்பை கொண்டு வந்துள்ளார்.   மனதுக்கு பிடித்த கவிதைத் தொகுதி 1 என்ற கவிதைத் தொகுதி மிகக் குறைவான பிரதிகளே அச்சிடப்படுகின்றன.  அதனால் இந்தத் தவறு நீக்கப்பட்டுள்ளது.  இனிவரும் தொகுதியில் திரசடையின் உண்மையான கவிதை மட்டும் நீடிக்கும்.  இதோ நான் தேர்ந்தெடுத்த திரிசிடை கவிதை. சிலந்தி சிலந்தி ஒன்றைக் கண்ட

பீனிக்ஸ் குளிரும் சென்னை வெயிலும்

அழகியசிங்கர் நான் மார்ச்சு முதல் தேதி அமெரிக்காவில் உள்ள பீனிக்ஸ் என்ற இடத்திற்குச் சென்றேன்.  அப்போது அங்குக் குளிர் தாங்க முடியவில்லை.  உண்மையில் பீனிக்ஸ் உஷ்ணப் பிரதேசம்.  ஆனால் குளிரில் நடுங்கும்படி குளிரை வெளிப்படுத்தியது.  இரவு நேரத்தில் ஸ்வெட்டரைப் போட்டுக்கொண்டு தூங்குவேன். நான் இருந்த இரண்டு மாதங்களில் மின்விசிறியைப் போடவில்லை.   பல இடங்களுக்கும் சுற்றிப் பார்த்துவிட்டேன்.    சென்னை கிளம்பும் சமயத்தில் கொஞ்சம் கொஞ்சமாக வெயில் தலை காட்டியது.  எப்படி குளிரோ அதை விட மோசமானது வெயில் பீனிக்ஸில்.  வேர்த்துக் கொட்டாத வெயில். ஒரு இடத்திலிருந்து நாம் திரும்பும்போது அந்த இடத்தின் ஞாபகம் நம்மைத் துரத்தியபடி இருக்கிறது.  அதிலிருந்து மீள சில நாட்கள் ஆகும்.  எப்படி பீனிக்ûஸ விட்டு வரும்போது ஞாபகம் துரத்துகிறதோ அதேபோல் சென்னையை விட்டுப் போனபோதும் ஏற்பட்டது.  ஞாபகத்தைச் சமநிலைப் படுத்துவதுதான் முக்கியமான ஒன்றாக நான் கருதுகிறேன். நாம் எங்கே எப்படி இருக்கிறோமோ அதுதான் வாழ்க்கை.  சொர்க்கமும் நரகமும் அதுதான். 3ஆம் தேதி கிளம்பி இங்கு வந்துவிட்டேன்.  24 மணி நேரம் விமானத்தில்

வரும் போகும்

அழகியசிங்கர் வரும் போகும் வரும் போகும் என்ற பெயரில் சி மணியின் கவிதைத் தொகுதி க்ரியாவில் அந்த நாளில் பார்த்தது ஆனால் வந்துகொண்டிருக்கும் போய்க்கொண்டிருக்கும் எல்லாம் நடக்கும் 12.04.2019-பீனிக்ஸ் அமெரிக்கா

ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் - 9 - பகுதி 2

அழகியசிங்கர் 11. இப்போது என்ன புத்தகம் படிக்கிறீர்கள்? அமெரிக்கன் நூலகத்திலிருந்து வாங்கி வந்த இன்னொரு புத்தகம்.  புத்தகம் பெயர் முராகாமியின் இன்னொரு நாவல் üகில்லிங் காமென்டேடர்.ý  முடிக்க இன்னும் 100 பக்கங்கள் இருக்கிறது.  படித்து முடித்தவுடன் இங்கே வைத்துவிட்டுப் போய்விடுவேன்.  கின்டலில் 15 நாட்களுக்கு ஓரம் பாமுக்கின் ரெட் ஹய்ர்டு உமன் நூலகத்திலிருந்து எடுத்துள்ளேன். படித்துக்கொண்டிருக்கிறேன். 12. நீங்கள் முடிக்க வேண்டிய விருட்சம் பத்திரிகையை முடித்து விட்டீர்களா? முடித்துவிட்டேன்.  109வது இதழ்.  இங்கே 100 பக்கங்கள் வரை சரி செய்து வைத்திருக்கிறேன்.  சென்னையில் அச்சடித்து விடுவேன்.  இந்த மாதத்திற்குள் இதை எப்படியாவது கொண்டு வர வேண்டும். 13. உங்களைச் சுற்றிலும் பல அநிதிகள் நடந்து கொண்டிருக்கின்றன.  அதெல்லாம் உங்களைப் பதட்டமடையச் செய்யவில்லையா? நிச்சயமாக.  யாராக இருந்தாலும் பதட்டமடையச் செய்யத்தான் செய்யும்.  நான் ஒரு சாதாரண மனிதன். ஆனால் இதெல்லாம் ஏன் நடக்கிறது என்று ஆராய்வதில் எந்த அர்த்தமும் இல்லை.  கருத்து சொல்வதைப்போல் அபத்தமும் இதில் இருக

ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் - 9 - Part 1

அழகியசிங்கர் 1. அமெரிக்கா அனுபவம் எப்படி? பிரமாதம்.  நான் அமெரிக்கா வந்து 2 மாதங்கள் முடிந்து விட்டன. இதோ சென்னை கிளம்புகிறேன் 2. எப்படிப் பொழுது போயிற்று? எல்லா இடங்களிலும் ஒரே மாதிரிதான் பொழுது போகப்போகிறது.  அமெரிக்காவில் கூடுதலாகப் பொழுது இருந்தது.  சென்னையில் அது குறைவு. 3. என்னன்ன புத்தகங்கள் வாங்கினீர்கள்? ஆங்கிலப் புத்தகங்கள்தான் வாங்கினேன்.  ஆரம்பத்தில் கடையில் வாங்கினேன்.  ஆனால் மிகக் குறைவான விலையில் அமெரிக்கன் நூலகங்களில் வாங்கினேன். 4. எந்தப் புத்தகம் படீத்தீர்கள்? பெரும்பாலும் தமிழ் நூல்கள் படிக்கிற ஆசாமி நான்.  இங்கு ஆங்கில நூல்களைப் படிக்கும்படி நேரிட்டது. முராகாமியின் 2 நாவல்கள்.  மொராவியாவின் நாவல் ஒன்றையும் முழுதாகப் படித்தேன். இதைத் தவிர ஐ பி ஸிங்கரின் சிறுகதைகள்.  ஜே டி சாலிங்கர், பிலிப் ராத்,  ஜப்பானிய எழுத்தாளரான காஷ÷ இஷøகுரோ நாவல்கள்.  இவற்றில் சில புத்தகங்களை முழுதாகப் படிக்க முடியவில்லை.  இரண்டு கதைகளையும் ஒரு கவிதையும் மொழி பெயர்த்துள்ளேன். 5. முக்கியமாக என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? நேரம்.  இங்கே கிடைத்ததுபோல் நே

பத்து கேள்விகள் பத்து பதில்கள் - 20 - எழுத்தாளர் ஒரு அரிசோனன் பதில் அளிக்கிறார்

அழகியசிங்கர் பீனிக்ஸ் என்ற இடத்திற்கு வந்தவுடன் இங்கே வசிக்கும் தமிழ் எழுத்தாளர் பேட்டியை வெளியிட வேண்டும் என்று நினைத்தேன்.  1982ஆம் ஆண்டில் படிப்பதற்கு அமெரிக்கா வந்த மகாதேவன் இங்கேயே இருந்து விட்டார்.  ஒரு அரிசோனன் என்ற புனை பெயரில் கதைகள், கவிதைகள், சரித்திர நாவல்கள் எழுதி உள்ளார். சிறுகதைத் தொகுப்பும், சரித்திர நாவல்களும் புத்தகங்களாக வெளிவந்துள்ளன. இதோ அவருடைய பேட்டி.