Skip to main content

Posts

Showing posts from May, 2023

கவிதை வாசிக்கலாம் வாங்க.. 5

வெள்ளிக்கிழமை - (26.05.2023) மாலை 6.30 மணிக்கு   சூமில் கூடி கவிதை வாசித்தோம். இதுவரை கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி என்ற தலைப்பில் 100 கூட்டங்களை நடத்தி முடித்து விட்டோம். இனிமேல் நமது குழுவின் தலைப்பு  'கவிதை வாசிக்கலாம் வாங்க.'  இந்த முறை கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கூட்டத்தில் கூறப்பட்ட  6 தலைப்புகளில் கவிதை எழுதி  சிறப்பாக  வாசித்தார்கள். 1. பூனை 2. மின்னல் 3. கண்ணாடி 4. மெட்ரோ ஸ்டேஷன் 5. தெரு 6. வாழ்க வாழ்க கவிதை வாசிக்கும் முன்  சேக்கிழார் அடிப்பொடி டி.என். இராமச்சந்திரனின் புத்தகமான  'வழி வழி பாரதி ' என்ற புத்தகத்தைப் பற்றி  மீ.விஸ்வநாதன் உரை  நிகழ்த்தினார்.  இக் கூட்டத்தின் காணொளியை நீங்கள் கண்டு ரசியுங்கள். அழகியசிங்கர் 9444113205

இமையம் எழுதிய வாழ்க வாழ்க….

 அழகியசிங்கர்   ஆண்டாளின் பெண் வளர்மதி.  அவளுடைய குழந்தைக்கு உடம்பு சரியில்லை. ஆண்டாள் பெண்ணை சாடுகிறாள். "காசு இல்லாட்டி எப்படி ஆஸ்பத்திரிக்குப் போவது"  என்கிறாள் வளர்மதி. "தனியார் ஆஸ்பத்திரிக்குப் போனாத்தான் மருந்து மாத்திரையென்று ஐந்நூறு ஆயிரத்தைப் பிடுங்குவான்."  வெங்கடேசப் பெருமாள் ஆண்டாளிடம் பேசி கட்சி கூட்டத்துக்கு வர்ற சொல்கிறான்.  ஐந்நூறு ரூபாய் பணமும், புடவையும் கிடைக்குமென்று சொல்கிறான்.  இப்படிப் பலரை அந்தக் கிராமத்தில் உள்ளவர்களை ஆள் சேர்க்கிறான்.   இப்படிக் கூட்டத்திற்கு ஆள் சேர்ப்பதே அவன் கட்சியின் முக்கிய வேலை.  இதன் மூலம் ஏழையாக இருந்த அவன், பணம் சம்பாதித்து, படிப்படியாக சுமா கார் வாங்கற அளவுக்குப் பெரிய பணக்காரனாக உயர்ந்து விட்டான். கட்சிக்கூட்டம் விருத்தாசலத்தில் நடக்கிறது.  அந்தக் கிராமத்திலிருந்து விருத்தாசலம் போவதற்குக் கால் மணி நேரம் ஆகும்.  இப்படிப் பேச்சுத் தமிழில் சிறப்பாக எழுதிக்கொண்டு போகிறார் இமையம். “ எப்போதுமே வெங்கடேசப் பெருமாள் இருக்கிற சின்னக் கண்டியாங்குப்பத்தில், குறைந்த வாக்குகளே த.உ.மு கழகத்துக்குக் கிடைக்கும். அ

எழுத்தாளர் வாதூலன் நேற்று (20.05.2023) இரவு இறந்து விட்டார்.

அழகியசிங்கர் 15.04.2022 அன்று விருட்சம் கதைஞர்கள் கூட்டத்தில் வதூலன் கதைகளை எடுத்துப் பேசினோம். அந்தப் பேச்சை திரும்பவும் ஒளி பரப்புகிறோம். அவருடைய ஆத்மா சாந்தி அடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.

விருட்சம் அன்புடன் அழைக்கும் கதைஞர்கள் நிகழ்ச்சி 19.05.2023./அழகியசிங்கர்

  19.05.2023  -  வெள்ளிக்கிழமை - மாலை 6.30 மணிக்கு விருட்சம் நடத்திய கதைகளைக்  கொண்டாடும் நிகழ்ச்சி சூம் மூலம் சிறப்பாக நடந்தது.  அதன் காணொளியைக்  கண்டு மகிழுங்கள்.   நிகழ்ச்சி எண் - 55 மூன்று கதைஞர்களின் கதைகளை எடுத்துப் பேசினார்கள். 1. ஜே.பி.சாணக்யா கதை 1. எஸ்ஆர்சி -  கடவுளின் நூலகம் 2. மனுபாரதி கதைகள் 1. நாகேந்திர பாரதி - மண் பிள்ளையார் 2. பானுமதி - சூரியனைத் தேடும் இலைகள் 3. ராஜாமணி - நீல மேஜை 3. ரவிபிரகாஷ் கதைகள் 1.  இந்திர நீலன் சுரேஷ்  - அன்பற்ற அப்பாவிற்கு  2. வைதேஹி - கொலை செய்யாள் பத்தினி விருட்சம் நடத்தும் கதைஞர்களைக் கொண்டாடும் நிகழ்ச்சி நிகழ்வு :         விருட்சம் .. கதைஞர்களைக் கொண்டாடும் நிகழ்ச்சி  நாள் - நேரம்  May 19, 2023  06:30 PM India       அன்புடன் அழைக்கிறேன் அழகியசிங்கர் 9444113205

கவிதை வாசிக்கலாம் வாங்க.. 3/அழகியசிங்கர்

வெள்ளிக்கிழமை - (12.05.2023) மாலை 6.30 மணிக்கு  சூமில் கூடி கவிதை வாசிப்பு கூட்டம் சிறப்பாக நடந்தது. இதுவரை கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி என்ற தலைப்பில் 100 கூட்டங்களை நடத்தி முடித்து விட்டோம். இனிமேல் நமது குழுவின் தலைப்பு  'கவிதை வாசிக்கலாம் வாங்க.'  கூட்டத்தில் கலந்து கொண்டு கவிதை வாசித்தார்கள். கவிதை வாசிக்கும் முன் கவிதையைக் குறித்து கேட்கப்பட்ட  கேள்விகளுக்கு சிறப்பான முறையில் பதில்கள்  அளித்தார்கள்.  இதன் காணொளியைப் பார்த்து ரசியுங்கள். அன்புடன் அழைக்கிறேன். அழகியசிங்கர் 9444113205 Please visit  : daily.navinavirutcham.in

விருட்சம் அன்புடன் அழைக்கும் கதைஞர்கள் நிகழ்ச்சி - 05.05.2023

 அழகியசிங்கர்  05.05.2023  - வெள்ளிக்கிழமை - மாலை 6.30 மணிக்கு விருட்சம் நடத்திய கதைகளைக்  கொண்டாடும் நிகழ்ச்சி சூம் மூலம்.   நிகழ்ச்சி எண் - 54 இலக்கியச் சிந்தனை 1993 ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதைகளை எடுத்துப் பேசினார்கள். 1.  கலாவதி பாஸ்கர் - திலகவதியின் 'இன்று முதல் தென்றல்   2. பேராசிரியர் ராமச்சந்திரன்   -  திலீப்குமார் எழுதிய கடிதம் 3. சுரேஷ் ராஜகோபால்  சோம. வள்ளியப்பன் எழுதிய பாதிப்புகள் 4. இராய செல்லப்பா  - கிருஷ்ணா எழுதிய காலி மனை 5. ரேவதி பாலு  - க.வை.பழனிசாமி எழுதிய பாட்டியின் வீடு 6. பிரசன்னா  - பாவண்னன் எழுதிய உப்பு நிகழ்வு :         விருட்சம் .. கதைஞர்களைக் கொண்டாடிய நிகழ்ச்சி  நாள் - நேரம்  May 5, 2023  06:30 PM India       அன்புடன் அழைக்கிறேன் அழகியசிங்கர் 9444113205