Skip to main content

Posts

Showing posts from July, 2012

லாவண்யா

தனிமை அசௌகரியமானதென்கிறார்கள் பலரும். அவரவர் உண்மை அவரருடையது. எனதுண்மையென்னவெனில் வேடங்கலைந்த வெற்றுடம்பைக் காட்டும் காலக்கண்ணாடி மனப்பாறையை மணலாக்கும் மாயவித்தை செய்யும் மர்மநிஜம் தாகத்துக்குத் தண்ணீர் கேட்டு வாசலில் நின்றழைக்கும் பசுவும் நெட்லான்களைக் கிழித்து அறையில் பிரசவத்துக்கிடம் தேடும் அணிலும் விடாமல் தொடர்ந்து வீட்டைந்து நிராகரிப்பை நேசமாக்கும் நாய்க்குட்டியும் நிகழின் உயிரியக்க விந்தைகளாய் பரிமாணக்கண் திறக்கும் திரைவிலகல் காலநிரந்தரத்தில் திசை விசை மாறாது ஓயாது மோதாது சுழலும் கோள்களின் ஞாபகமும் நிசப்த இரவுகளில் காற்றின் ரகசிய இசைக்கென் காதுகளைத் தருவதும் நிலாவெளிச்சம் இருட்டுமனதை வெள்ளையடிக்கும் விநோதங்களும் வேறெப்போதும் நிகழ்வதில்லை சங்கடத்திலும் சவக்குழியிலும் ஒற்றையாகும் துயரியல் சிலசமயம் நெருடும்தான் இவைகளைவிடவும் முக்கியமாய் எல்லையிலா வெளி, கடல், எண்ணிலா மனிதர் உயிர்களிடையில் நீ யாரென வினவி விடைபெறும் ஒவ்வொருமுறையும். மல்லித்தோட்டம். காத்திருக்கிறது உனக்காக என் கூந்தலில் மல்லிகைத்தோட்டம் குறிப்பறிந்த தோழிபோல நழுவிச
என். எம் பதி என்கிற நண்பர்............... அழகியசிங்கர் போனவாரம் அசோகமித்திரன் கூட்டத்திற்கு செப்டம்பர் மாதம் நடத்தத் தீர்மானித்து அதற்கான விண்ணப்பத்தை அங்குள்ள அலுவலரிடம் கொண்டுபோய் கொடுத்துவிட்டேன்.  கூட்டத்திற்கு யார் பேசப் போகிறார்கள்? யாரைக் கூப்பிடுவது? என்ற கேள்விகள் என் மனதைப் படாதபாடு படுத்தியது.  என் நண்பர் மயிலாடுதுறையில் இருப்பவர் பிரபுவைக் கூப்பிட்டேன்.  அவர் எல்லா விதங்களிலும் உதவுவதாகக் குறிப்பிட்டார். திருவல்லிக்கேணியில் இருக்கும் ராஜகோபாலனிடம் சொன்னேன்.  நானும் ராஜகோபாலனும் ஒருவரை ஒருவர் பார்த்து 1 மாதம் ஓடிப்போயிருக்கும்.  சரியாகப் பேசி 2 மாதங்கள் ஆகியிருக்கும்.  இன்னொரு நண்பரிடம் எனக்கு 2 ஆண்டுகளாகத் தொடர்பு இல்லை.  ஒருகாலத்தில் நானும் அந்த நண்பரும் மிகவும் நெருக்கமானவர்கள். இப்போதெல்லாம் யாருடனும் பேச முடியவில்லை என்பதோடல்லாமல், யாரையும் சந்திக்கக் கூட நேரம் இருப்பதில்லை.   டாக்டர் செல்வராஜுடம் உடம்பைப் பற்றிப் பேசவே முடிவதில்லை.  பார்க்கக் கூட முடிவதில்லை.  அப்படிப் பயப்படும்படியாக உடம்பு இல்லை.  ஆனால் கட்டுப்பாடு வேண்டும்.  சாப்பாடுவதில் கட்டுப்பாடு
பந்தநல்லூரில் கிடைத்த பதவி உயர்வு அழகியசிங்கர் 5. என்னை என் அலுவலகத்திலிருந்து விடுதலை செய்து விட்டார்கள்.  நான் போய்த்தான் ஆக வேண்டும்.  இந்த நினைப்பே என்னை மிரட்டியது.  வீட்டில் என் வயதான தந்தை, மனைவியின் தாய், என் பெண் என்று எல்லோரையும் விட்டு விட்டுப் போகவேண்டும்.  இது வலிய எடுத்துக்கொண்ட வலி. துக்கம்.  இந்தப் பதவி உயர்வால் பெரிய மாற்றம் ஏற்படப்போவதில்லை.  சம்பளம் கொஞ்சம் கூடுதலாகக் கிடைக்கும்.  அதற்குக் கொடுக்கும் உடல் உழைப்பு, மன அழுத்தம் மிக அதிகம்.  டாக்டர் செல்வா நீங்கள் போகாமல் இருந்து விடாதீர்கள் என்று எச்சரித்தார்.  போகாமல் இருந்தால் இன்னும் பின் விளைவுகள் ஏற்படும். சுரேஷிற்கும் பதவி உயர்வு கொடுத்திருந்தார்கள்.  அவனை மும்பைக்கு மாற்றி இருந்தார்கள்.  அவனுக்குப் போகவே விருப்பமில்லை.   "ஏன் நீங்கள் ஒப்புக் கொண்டீர்கள்?" என்று கேட்டான்.  "ஏதோ ஒரு தருணத்தில்  அசட்டுத் தைரியம் வந்து விடுகிறது," என்றேன்.  அவன் சிரித்தான். ஒரு 50 வயதில் குடும்பத்தை விட்டுப் பிரிவது என்றால், வனவாசம் செல்வதுபோல்தான்.  அழகியசிங்கர் என்னை ஆறுதல்படுத்தவோ பேசவோ தயார
A±®l× YÚ¡\ ùNlPmTW22 Bm úR§. AúNôLªj§Wu 81 YVÕ Ø¥kÕ 82YÕ YV§p A¥ GÓjÕ ûYd¡\ôo. Rª¯p ϱl©PlTP úYi¥V TûPlTô°L°p AúNôLªj§WàdÏm CPm EiÓ. CûRd ùLôiPôÓm ®RUôL, TôW§Vôo CpXj§p JÚ G°V ®Zô SPjR Esú[u. C§p GÝjRô[oLs TXÚm LXkÕùLôs[ úYiÓùUuß ®Úmסú\u. AYÚûPV ùSÚe¡ TZ¡V NL TûPlTô°LÞm, AúNôLªj§W²u YôNLoLÞm LXkÕùLôiÓ ®ZôûYf £\l©dL úYiÓùUuß úLhÓdùLôs¡ú\u. UôûX 5 U¦dÏ CkR ®Zô SPdL Es[Õ. ®Zô®p TeúLtL Es[YoLs ReLs ùTVoLû[j ùR¬Vl TÓjR úYiÓùUuß Au×Pu úLhÓdùLôs¡ú\u.   AZ¡V£eLo

ஏழாம் அறிவு

        சாவதற்கு பயமில்லாவிட்டாலும் வருத்தமாக இருக்கிறது. புலன்கள் ஐந்தைக் கொடுத்து ஒரு புல்லரிக்கும் உலகத்தை நிரந்தரம் போல் காட்சியாக்கிப் பின் கண்களை மூடி விடக் காத்திருக்கும் கடவுளிடம் கோபம் தடுத்தாலும் வருகிறது.. ஒரு வேளை ஆறுக்கும் மேல் ஏழாவதாக அறிவொன்றைக் கொடுக்கமாட்டானா? இறந்தவுடன் எனக்கே சொந்தமான எழிலுலகம் இன்னொன்றைக் கண்டடைந்து செத்தாலும் சாகாமல் அங்கே சலிக்கும் வரை வாழ்ந்திருக்க!!!