பிரபு மயிலாடுதுறை சில ஆண்டுகளுக்கு முன்னால், மயிலாடுதுறையிலிருந்து சென்னைக்கு பேருந்தில் பகல் நேரத்தில் பயணம் செய்து கொண்டிருந்தேன். அது செல்ஃபோன் பிரபலமாகிக் கொண்டிருந்த காலம். நான் பேருந்தின் கடைசி வரிசைக்கு முன்னால் இருந்த இடதுபக்க இருக்கையில் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்திருந்தேன். புதுச்சேரி பேருந்து நிலையத்தில் ஓர் இளைஞன் ஏறினான். கடைசி வரிசையின் நடுவில் இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டான். அவனது தோற்றம், கைப்பை, காலணிகள் மற்றும் அவன் கையிலிருந்த புத்தகங்கள் இவற்றைக்கொண்டு அவன் பொறியியல் மாணவனாக இருக்கக் கூடும் என கணித்தேன். பேருந்து கிழக்கு கடற்கரை சாலையில் சென்ற போது இரண்டு கல்லூரி மாணவிகள் புதுச்சேரி பொறியியல் கல்லூரி அருகே ஏறினர். கடைசி வரிசையில் மட்டுமே இடம் இருந்தது. அம்மாணவனுக்கு அருகே அமர்ந்து கொண்டனர். ஒரே வகுப்பில் படிப்பவர்களாக இருக்கக் கூடும்! புதுச்சேரியிலிருந்து சென்னை வரை உரையாடிய வண்ணம் இருந்தனர். ஒரு பெண் அவ்வப்போது தூங்கி எழுந்து உரையாடலில் இணைத்து கொண்டாள். அவள் உரையாடும் போது இன்னொரு பெண் தூங்கினாள். மோட்டலில் வண்டி நின்ற போது அம்மாணவன் தான