Skip to main content

Posts

Showing posts from October, 2013

பூ, பட்டாம் பூச்சி,மற்றும் நேஹா

ரவிஉதயன் பூவின் இதழ்களை பட்டாம் பூச்சியின் சிறகுகள் போல வரைந்திருந்தாள். பட்டாம் பூச்சியின் சிறகுகளை பூவின் இதழ்களைப் போல் வரைந்து முடித்து விட்டு சிறு கடவுளாகி சிரிக்கிறாள் நேஹா. இப்பொழுது நான் காண்கிறேன்! பட்டாம் பூச்சியின் சிறகுகள் விரிய பூ மலர்வதையும்! பூவின் இதழ்களோடு பட்டாம் பூச்சி பறப்பதையும்!

யுகமாய் நீ

ராமலக்ஷ்மி கூட்டை உடைத்துக் கொண்டு நீ வெளியில் வரக் கேட்டுக் கொண்டது வரலாற்றின் ஒரு காலக் கட்டம் தயக்கங்கள் உதறிச் சிறகுகள் விரித்து  பெண்ணே நீ  உயர உயரப் பறந்து பொழுது செம்பிழம்புச் சூரியன்  வெம்மை உனைத் தாக்கிடுமோவென முகில்களுக்குப் பின் ஒளிந்து கொண்டது ஒவ்வொரு துறையிலும் நீ  சிகரம் தொட்ட வேளைகளில் மலையெங்கினும் பூத்தன  மலர்கள்  மகிழ்ச்சியில் வீதியில் இறங்கி நீ நடக்கையில்  மகளெனப் பரந்த வானம்  குவிந்து ஆசிர்வதிக்கப்  பூரிப்புடன் துணை வந்திருந்தாள்  பூமாதேவி அறம் பூரணமாய்த் தழைக்க அதர்மம் முற்றிலுமாய் அழிய வரம் வாங்கியிராத மண்ணில், துளிர்க்கின்ற சுதந்திரங்கள் செழித்து வேர்விடும் முன்னரேப்  பறித்தெறியப்படுகின்றன வக்கிர மனங்களால் கைகளைக் கட்டிக் கொண்டு வேடிக்கைப் பார்க்கிறது  கொடுப்பது போல் கொடுத்து எடுத்துக் கொள்ளும்  கோரவிளையாட்டில் என்றுமே தோற்காத காலம் ஏனென ஏறிடும் உன் விழிகளை எதிர்கொள்ள இயலாமல் நிலவு தகிக்க எரிந்து விழுகின்றன நட்சத்திரங்கள் தாங்கிப் பிடிக்கக் கீழே வலையற்ற நூறடி உயரத்தில

திருட்டு

                          அழகியசிங்கர்                          அலுவலக வளாகத்தில்         வைத்திருந்த யமஹா         வண்டி திருட்டுப்போயிற்று.         திருட்டுக்கொடுத்த சுவடே         தெரியாமல் இருந்தது இடம்         விரைப்பாய் காவலர்         விரைத்தபடி தூங்கிக்கொண்டிருந்தனர்         எடுத்துச் சென்றவன் சிரித்தபடியே         போயிருப்பான்         வண்டி வைத்திருந்தவரை         காண்டினில் சந்தித்தேன்         முகத்தில் உற்சாகத்துடன்         உலா வந்திருந்தார்         'வேண்டும் மென் தகடுகள்'         என்றேன்         எடுத்து வருவதாகச் சொன்னவர்         முகத்தில்         அதிகப்படியான சந்தோஷம்         பின்         தெரிந்தது         அவர் வண்டி லபக்கென்று         போயிற்று                 ஏனோ -         அன்று         வளாகம் முழுவதும்         கூட்டமாய் வண்டிகள்         ஒதுக்குப்புறமாய் வண்டியை         வைத்திருந்தேன் நானும்         திருட்டுப் போனதை அறிந்து         என் வண்டி இருக்கிறதா என்று         பார்த்தேன் பார்த்தேன்         பார்த்துக்கொண்டே இருந்தேன்

எனக்கு ஒரு பைத்தியகார அக்காவை தெரியும்

- -ஜெம்சித் ஸமான் 35 வயதை கடந்துவிட்ட அநாதை அக்கா இப்போது சகோதரிகளின் பராமரிப்பில் இருக்கிறார் வெய்யில் மழை எது வந்தாலும் யாரும் அந்த சகோதரியை கவனிப்பதில்லை இரவில் உறங்குவதை தவிர வீட்டின் உள்ளே வரவும் அனுமதியில்லை சிறு குழந்தைகளை போலதான் அந்த அக்காவின் உலகமும் வேறு ஆனால் குழந்தைகளுடன் இருப்பதை போல இவர்களுடன் யாரும் அன்பாக இருப்பதில்லை ரொட்டி துண்டங்களை அப்படியே உண்டுவிடும் அக்காவுக்கு ரொட்டித் துண்டங்களை சிறிது சிறிதாக பிய்த்து யாருமே உண்ணக் கொடுப்பதில்லை சுடச் சுட தேநீரை அருந்தி முடிக்கும் அக்காவுக்கு சூடு ஆறிய தேநீரை யாரும் அருந்தக் கொடுப்பதில்லை குளிப்பாட்ட ஆடை மாற்ற முகம் கழுவ உணவு அருந்த தலை சீவ அடம் பிடிக்கும் குழந்தைகளை எந்த அம்மாக்களும் அப்படியே விட்டு விடுவதில்லை எனக்கு தெரிந்த அக்காவை மட்டும் ஏன் அப்படியே விட்டு விடுகிறார்கள் சிறு குழந்தைகள் வீட்டு திண்ணைகளில் சிறு நீர் கழிக்கும் போதும் வீட்டு வாசலில் மலம் கழிக்கும் போதும் மகிழ்வோடு துப்பரவு செய்யும் அன்பான அம்மாக்கள் ஏன் எனக்கு தெரிந்த அக்காவை மட்டும் சுடு சொற்களால் வஞ்

புத்தக விமர்சனம் 1

அழகியசிங்கர்          சமீபத்தில் நான் படித்தப் புத்தகம் ஆர் வெங்கடேஷ் எழுதிய இடைவெளி என்ற நாவல்.  நாவலின் மொத்தப் பக்கங்கள் 152தான்.  இன்றைய மெகா நாவல் காலத்தில் ஆர் வெங்கடேஷ் 152 பக்கங்கள் அடங்கும்படி ஒரு நாவல் எழுதி முடித்துவிட்டார். இதைப் பாராட்ட வேண்டும்.  152 பக்கங்களுக்குள் 3 குடும்பத்தின் கதையைக் கொண்டு வந்துள்ளார்.  மாற்றி மாற்றி ஒவ்வொரு குடும்பத்தைப் பற்றி சொல்லுவதே இந் நாவலில் முக்கிய இழையாகப் படுகிறது.      வாழ்க்கையில் ஒவ்வொருவரும் எதிர்கொள்ளும் பிரச்சினைகளில், நல்ல சம்பளத்தில் வேலை செய்து கொண்டிருக்கும்போது எதிர்பாராதவிதமாய் வேலையை விட்டு நீக்கி விடுவதுகூட பெரிய பிரச்சினையாகிவிடும்.  அதை எப்படி எதிர்கொள்வது.     நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறைந்து போகும்போது, அதன் விளைவாக பலர் துன்பத்தில் ஆளாக நேரிடும்.  வேலையைத் தொலைத்துவிட்டு நிற்கு மூன்று நபர்கள் சம்பந்தப்பட்ட நாவல் இது.  ரஞ்சன், ஆர்த்தி, கல்யாண் மூவருக்கும் எதிர்பாராதவிதமாய் வேலை போய்விட அதை எப்படி எதிர்கொள்கிறார்கள்.     உண்மையில் அவர்களால் எதிர்கொள்ள முடீயவில்லை.  துவண்டு போய்விடுகிறார்கள்.  கல்யாண்

யுத்தங்கள் அனைத்தினதும் பிரதிபலனை நாங்கள் இன்றும் அனுபவிக்கிறோம் !

தமிழில் - எம். ரிஷான் ஷெரீப், இலங்கை குறிப்பு - ஆப்கானிஸ்தானில் பிறந்து, அமெரிக்க நாவலாசிரியராக சர்வதேச அளவில் புகழ்பெற்ற எழுத்தாளர் காலித் ஹுஸைனி, தனது 15 ஆவது வயதில் ஒரு ஆப்கானிஸ்தான் அகதிச் சிறுவனாக அமெரிக்காவுக்குள் நுழைந்தார். அப்பொழுது அவருக்கு ஆங்கிலத்தில் ஒரு சில சொற்கள் மாத்திரமே தெரிந்திருந்தது. இன்று அவர் ஒரு வைத்தியர், அமெரிக்க சமூக நல அமைப்பின் தூதுவர் மற்றும் சர்வதேச அளவில் வரவேற்பைப் பெற்ற The Kite Runner, A Thousand Splendid Suns ஆகிய நாவல்களை எழுதிய எழுத்தாளராகவும் அறியப்பட்டிருக்கிறார். இவரது புதிய தொகுப்பான And the Mountains Echoed எனும் நாவல் கடந்த மே மாதம் 21 ஆம் திகதி வெளிவந்தது.  அவரது புதிய நாவலை அடிப்படையாகக் கொண்டு இடம்பெற்ற நேர்காணலின் தமிழாக்கம் இது. ______________________________ ______________________________ _____________________ உங்களது முந்தைய இரண்டு நாவல்களும் ஆப்கானிஸ்தானை அடிப்படையாகக் கொண்டவை. உங்கள் புதிய நாவலின் சம்பவங்களும் ஆப்கானிஸ்தானை அடிப்படையாகக் கொண்டிருந்த போதிலும், அதன் கதையானது, பரம்பரைகள

அம்மா......

சின்னப்பயல்  காரணப்பெயர் எழுதிவைத்த கவிதைக்குக்கீழ் போட்டுக்கொண்ட பெயர் தான் முதலில் எழுதியது பின்னர் மேலே மேலே எழுதியது தான் இப்போது நீங்கள் வாசிப்பது. ஒளிரும்பெயர் உன் பெயரைத்தேடியெடுத்து எப்படி ஒளிரவைக்கிறாய் என் செல்பேசியில் ?! அதுமட்டுமே உனைக்காட்டிலும் எனக்கு இரண்டுவயது கூடுதல் அதுமட்டுமே அம்மா காய்கறி சாப்பிடவில்லையென்றால் ஒரு கை மட்டுமே வளரும் இன்னொரு கை குட்டையாகவே இருந்துவிடும் பழத்தோடு கொட்டையை சேர்த்துச்சாப்பிட்டால் வயிற்றில் மரம் முளைத்துவிடும் இப்படியெல்லாம் எனக்கு விளையாட்டுக்காட்டி செல்லமாக பயமுறுத்திய என் அம்மா இப்போது உறங்கிக்கொண்டிருக்கிறாள் எத்தனை கூப்பிட்டும் எழவில்லை என் சின்னக்கைகள் கொண்டு அசைத்தும் பார்த்துவிட்டேன். எழவேயில்லை. இதற்கும் ஏதாவது ஒரு காரணம் சொல்லி என்னை மகிழ்விப்பாள் காத்திருக்கிறேன் காலம் கடந்து கொண்டிருக்கிறது அவளின் கைகள் ஏன் குளிர்ந்துபோய்விட்டன என்று மட்டும் தெரியவில்லை. உடல்மொழி ஏற்றுக்கொள்ளாமலும் வெறுக்காமலும் இருக்க நினைக்கிறாய் இருப்ப

இன்னும் ஒரு ...

  A .தியாகராஜன் எல்லாரும் போயாச்சு - அங்கே இருந்த கடைசி நாற்காலியையும்  தரதரவென இழுத்து மலை மாதிரி  இருந்த நாற்காலி போர் ஒண் ணு மேல  இடி சத்தம் மாதிரி சத்தத்தோட  அந்த ஆள் போட்டான் . கல்யாண மண்டபத்து ஹால் காலி  தரை இன்னும் சுத்தம் செய்யப்படாமல்  ஆனாலும் விழவுக்களம் கமழ்ந்து கொண்டு  வயசான இம்ப்ரஷனை கொடுத்துக் கொண்டு ... கட்டுசாதம் வாசல் டாக்சி ஒன்றில் அனாதையாய் - ஓட்டுனர் ஓரக்கண்ணால் அதை அளந்து கொண்டிருந்தான். ஒரு டீ கிடைக்குமா என எனது குரல்  மிகவும் க்ஷீணித்தே  ஆனாலும் கட்டாயம் கேட்டிருக்க  வேண்டும்-   பல வாழ்க்கைக் கனவுகள்  பெண் மாப்பிள்ளை தவிரவும்   வந்திருந்த பலர் தவிரவும்  அந்த வராத டீ யிலும் வியாபித்து  தனி பாதை ஒன்றில்  ஒரு பயம் கலந்த எதிர் பார்ப்பில்  பாதை உண்டா சேருமிடம் உண்டா  நிச்சயம் சஞ்சலம் என்று  அடிகள் கொண்டு ... மிச்சம் இருப்பது  இந்த ஹாலின் தனிமை  மட்டுமே  இப்போதைக்கு- இப்படித்தான் அந்த கடைசி  கல்யாணமா ரிசப்ஷனா  அதிலும்-  அதில் பெண்ணின் அப்பா  ஒரு மௌனத்தில் தான் யார் என்று மறந்து 

வேப்பம்பூக்களுக்காகக் காத்திருக்குமொருத்தி

  எம்.ரிஷான் ஷெரீப்   மழையுமற்ற கோடையுமற்ற மயானப் பொழுது இலைகளை உதிர்த்துப் பரிகசிக்கிறது வேனிற்காலத்தைப் பின்னிக் கிடக்குமொரு மலட்டு வேப்ப மரத்திடம் நீவியழித்திடவியலா நினைவுச் சுருக்கங்கள் படர்ந்திருக்கும் நீயொரு மண்பொம்மை உனது கண் பூச்சி செவி நத்தை கொல்லை வேலியொட்டிப் புறக்கணிக்கப்பட்டிருக்கும் உன்னிடமும் வேம்பிடமும் இவையிரண்டும் என்ன உரையாடுகின்றன திசைகளின் காற்று விருட்சத்துக்குள் சுழல்கிறது தன் மூதாதையர் நட்ட மரத்தில் இதுவரை ஆசைக்கேனுமொரு பூப் பூக்கவில்லையென தொலைவிலிருந்து வந்த புதுப் பேத்தியிடம் கதை பகர்கிறாள் மூதாட்டி வேப்பமரத்தடி வீடெனத் தன் வீட்டிற்கேவோர் அடையாளம் தந்திருக்கும் மரத்தை வெட்டியகற்ற மறுக்கிறாள் கிழவியென மருமகளொருத்தி முணுமுணுக்குமோசையை சமையலறை ஜன்னல் காற்று உன்னிடம் சேர்க்கிறது மனித ஓசைகள் கேட்டிடக் கூடாதென காதுகளை மீண்டும் நத்தைகளால் அடைத்துக் கொள்கிறாய் - பிறகும் கண்களை மூடும் பூச்சிகள் தாண்டி வேப்பம்பூக்களுக்காகக் காத்திருக்கிறாய்

ரோபோக்களின் இசைநிகழ்ச்சி

லாவண்யா   அப்போது நம்மால் அடக்கமுடியவில்லை அப்போது நமக்கு வேறு நினைப்பேயில்லை அதற்கு  நாம் ஆசைப்பட்டிருக்க்கஃகூடாது இப்போது அப்படித் தோன்றுகிறது நம் கதை நெருப்பையணைக்க நெய்யூற்றியவன் கதை நம் கதை தேனில் விழுந்த ஈயின் கதை எப்போதோ நாம் பிறவிப்பெருங்கடலில் மூழ்கிப்போனோம் மாயச்சுழலில் மூச்சுத்திணறும் வேளையில் ஆன்மீகச் சொற்பொழிவைக் கேட்கப்போகலாமென்கிறாய் பொக்கைவாயன் முறுக்கு தின்ன ஆசைப்பட்டானாம் இனிமேல் நாம் ஆன்மாவையறிந்து என்ன செய்யப்போகிறோம்? வந்த்தை மகிழ்விக்க வாய்த்த்தை கடைத்தேற்ற நாலுகாசுக்கு நாயாயலைந்து சாத்தான்களுடன் சமரசம் செய்துகொண்டபோது நம் ஆன்மாவை நாம்தான் தொலைத்துவிட்டோமே? இந்திரசபையில் ஓல்ட்மாங்க் நமக்காக்கஃ காத்திருக்கிறார் அகாதெமியில் இன்றிரவு ரோபோக்களின் இசைநிகழ்ச்சி நான் என்ன சொல்கிறேனென்றால் சத்யநாதா..........