Skip to main content

Posts

Showing posts from August, 2021

ஒரு கதை ஒரு கருத்து –

  அழகியசிங்கர் சிவசங்கரியின் ‘வெள்ளிக்கிழமை ராத்திரி அவள் செத்துப் போனாள்’ 'வெள்ளிக்கிழமை ராத்திரி அவள் செத்துப் போனாள்’. இது ஒரு சிறுகதையின் தலைப்பு. இந்தக் கதையை யார் எழுதியிருப்பார் என்று உங்களுக்கு யூகிக்க முடியுமா? நிச்சயமாக முடியாது. எல்லோரும் தமக்குப் பிடித்தமான எழுத்தாளர்களின் கதைகளைத்தான் படிக்கிறார்கள். நான் இந்த முறை சிவசங்கரி என்ற எழுத்தாளரின் கதைகளைப் படித்துக்கொண்டு வருகிறேன். நான் மாதத்திற்கு இரண்டு கூட்டங்கள் நடத்துகிறேன். கதைஞர்கள் கூட்டம் என்ற பெயரில். ஒரு எழுத்தாளர் ஆண் எழுத்தாளர். இன்னொருவர் பெண் எழுத்தாளர் எத்தனைப் பேர்கள் நம்மிடையே சிறுகதைகளைப் படிக்கிறோம். பின் அதைப் பற்றி எங்காவது பேசுகிறோமா அல்லது எழுதுகிறோமா? கட்டாயம் இல்லை. சிவசங்கரியின் ஒரு கதையான ‘வெள்ளிக்கிழமை ராத்திரி அவள் செத்துப் போனாள்’ என்ற சிறுகதையைப் படித்து முடித்தேன். அக் கதை எழுப்பிய சோகம் அடங்கவில்லை. ஒரு பெண்ணிற்கு ஏற்பட்ட சோகம் அந்தக் கதை முழுவதும் பரவி இருந்தது. ஆரம்பத்தில் ஒரு கதையை ஒரு எழுத்தாளர் எப்படி ஆரம்பிக்கிறார்

கதைஞர்களைக் கொண்டாடுவோம்.

அழகியசிங்கர் சூம்  மூலமாக விருட்சம் நடத்தும் 18வது  கதை வாசிப்புக்  கூட்டம்.  வாசிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைஞர்கள் 1.  சிவசங்கரி  2. வண்ணதாசன் வழக்கம்போல் 8 இலக்கிய நண்பர்கள் கதைகளைக் கூறி கதையைப் பற்றி உரையாடினார்கள். சிறப்பாக நடந்தது கூட்டம்.  அதன் காணொளியைக் கண்டு  ரசியுங்கள் .

தூங்காமல் தூங்கி…

அழகியசிங்கர் தூக்கத்தைப் பற்றித்தான் எழுதப் போகிறேன். தினமும் சாப்பிட்ட உடன் எனக்குத் தூக்கம் வந்து விடுகிறது. பகல் நேரத்தில்.காலை 11 மணியிலிருந்து மூன்று மணி வரை. இதை என்னால் தவிர்க்க முடியவில்லை. தினமும் இந்தப் பகல் தூக்கம் நான் எதிர்பார்த்தபடியே நிகழ்ந்து விடுகிறது. நான் சிறுவனாக இருந்தபோது நாடோடி மன்னன் என்ற படத்தைத் திருச்சி பத்மாவதி திரையரங்கில் (இப்போது பேர் மாறி விட்டது) வீட்டிற்குத் தெரியாமல் போய்ப் பார்த்தேன். மதியம் ஒன்றரை மணிக்கே படம் ஆரம்பித்து விடும். பெரிய படம் என்பதால். அதில் ஒரு பாட்டு எம்.ஜி.ஆர் பாடுவதுபோல் வரும். தூங்காதே தம்பி தூங்காதே என்று. இப்போது யோசித்துப் பார்க்கிறேன். தூங்காதே தம்பி தூங்காதே என்று பாடுகிறார். ஆனால் எம்ஜிஆர் தப்பாகப் பாடிவிட்டாரென்று தோன்றுகிறது. எப்போது தூக்கம் வந்தாலும் தூங்க வேண்டும். தூக்கம் வருவதில்லை என்பதுதான் கவலையாக இருக்கிறது. எம்.ஜி.ஆர் மாற்றிப் பாடியிருக்க வேண்டுமென்று தோன்றுகிறது தூங்கு தம்பி தூங்கு என்று. கவிஞர் வைதீஸ்வரனுக்கு விளக்கு பரிசு கொடுத்த நிகழ்வில் நான் கலந்து கொண்டேன். முடியும் தறுவாயில் உட்கார்ந்த ந

கதைஞர்களைக் கொண்டாடுவோம்.

அழகியசிங்கர் சூம் மூலமாக விருட்சம் நடத்தும் 18வது கதை வாசிப்புக் கூட்டம். வாசிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைஞர்கள் 1. சிவசங்கரி 2.வண்ணதாசன் வழக்கம்போல் 8 இலக்கிய நண்பர்கள் கதைகளைக் கூறி கதையைப் பற்றி உரையாடுகிறார்கள். இக் கூட்டம் 27.08.2021 அன்று வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்கு நடைபெறுகிறது. எல்லோரும் அவசியம் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். சூம் மூலமாக விருட்சம் நடத்தும் 18வது கதை வாசிப்புக் கூட்டம். Time: Aug 27, 2021 06:30 PM India Join Zoom Meeting https://us02web.zoom.us/j/84785750162?pwd=WWxpUFk1SzBZUFpUVXRMeGowdVZWUT09 Meeting ID: 847 8575 0162 Passcode: 005183

65வது விருட்சம் நேசிப்புக் கூட்டம்

  அழகியசிங்கர் சூம்  மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 65வது  கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி இன்று மாலை 6.30மணிக்கு (21.08.2021) சிறப்பாக நடந்தது. அதன் காணொளியைப்  பாரீர் .  இது  கவிதை  குறித்து  உரையாடல்  கூட்டம். 

வண்ணதாசன் பிறந்த நாள் இன்று...

துளி - 216 அழகியசிங்கர்   வண்ணதாசன்  கதை ஒன்று.  பல ஆண்டுகளுக்கு முன்னால் படித்தது.  குற்றால அருவியில் குளிக்க வருபவர்களுக்கு எண்ணெய் தேய்த்து விடுவார்கள்.  நான் அங்கு ஒருமுறை சென்றிருக்கிறேன்.  தலையில்  எண்ணெய்யைத்  தடவி படபடவென்று அடிப்பார்கள். அது அற்புதமான அனுபவம். அதுமாதிரி  எண்ணெய்யைத்  தலையில் அடித்து  ஆயுள்  மசாஜ்  செய்துகொள்ள வருபவர் கேட்பார்.  என்றாவது ஒரு நாள் இதுமாதிரி ஆயுள்  மசாஜ்  செய்துகொண்டு அருவியில் குளித்ததுண்டா என்று. உடனே அடுத்த நிமிடம் துண்டைக் கட்டிக் கொண்டு குளிக்கக் கிளம்பி விடுவான்.  கலைக்க முடியாத ஒப்பனைகள் புத்தகத்தில் இந்தக் கதை இருக்கிறது என்று நினைக்கிறேன். கதை பெயர் ஞாபகமில்லை. யாருக்காவது தெரிந்தால் சொல்லவும். மாதம் இரண்டு முறை நடத்தும் கதைஞர்கள் கூட்டத்தில் இந்த முறை  வண்ணதாசன்  கதைகளைப்  பற்றிப்  பேசலாமென்று நினைக்கிறேன். பிறந்த தினமான அவருக்கு வாழ்த்துகள்.

நவீன விருட்சம் இதழ் ஏன் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது?

துளி - 215 அழகியசிங்க ர் கடந்த 5 மாதங்களாகத் தொடர்ந்து முயற்சி செய்து, விருட்சம்  117வது இதழ் கொண்டு வந்து விட்டேன். ஏன் என்னால் எளிதாகக் கொண்டு வர முடியவில்லை என்ற கேள்வியை நான் கேட்டுக்கொண்டே இருக்கிறேன் ஒவ்வொரு முறையும் இதழ் கொண்டு வந்த பிறகு. கேட்டுக்கொண்டே இதழையும் கொண்டு வந்து விடுகிறேன்.  இன்று வயது  முதிந்தவர்  நாள். நேற்று அச்சடித்து வீட்டிற்கு வந்தவுடன், நான் வீட்டில் இல்லை.  பெண்  வீட்டிலிருந்தேன் .  பக்கத்து வீட்டில் உள்ள நண்பர் வாங்கி வைத்து க்  கொண்டிருந்தார். அடுத்தநாள்  மாலை நேரத்தில்தான் நான்  பன்டிலைப்  பிரித்து நவீன விருட்சம் இதழைப் பார்த்தேன். ஆச்சரியம் கொண்டேன்.  இதைக் கொண்டு வருவதற்கா இப்படி பாடாய் என்னையே படுத்திக்கொண்டிருந்தேன் என்ற கேள்வி என்னுள் கேட்டு அடங்கியது. ஒரு பத்திரிகையை நடத்துவது என்பது ஒரு  பர்சனாலிட்டியைப்  பொறுத்த விஷயமாக இருக்கிறது என்று நினைக்கிறேன். இந்த இதழில் கட்டுரைகளை அதிகம் தரவேண்டுமென்று விரும்பினேன்.  அப்படியே செய்து முடிக்க முடிந்தது.  இந்த இதழில் வெளிவந்தவற்றை இங்குக் குறிப்பிட விரும்புகிறேன். 1.கேள்விகள் - பதில்கள் 

63வது கவிதை நேசிக்கும் கூட்டத்தில் அறிமுகப்படுத்திய கவிதை நூல்

அழகியசிங்கர் சமீபத்தில் நடந்த 63வது கவிதை நேசிக்கும் கூட்டத்தில் ஒரு கவிதைப் புத்தகத்தை அறிமுகப்படுத்தினேன். 'நினைவுக்கு வராத காரணங்கள்' என்ற 'நவீன்' புத்தகம்தான் அது. உயிர்மை பதிப்பகத்தால் அச்சடிக்கப்பட்ட இப் புத்தகம் மிக அருமையாக அச்சடிக்கப்பட்டிருக்கிறது. கையடக்கமாக உள்ளது இந்தப் புத்தகம். 54 பக்கங்கள். இந்தப் புத்தகத்தின் விலை : ரூ.40 தான். மலேசிய நவீன தமிழ் இலக்கியத்தை பிரதிநிதித்துவம் செய்யும் இளம் தலைமுறை படைப்பாளிகளில் முக்கியமானவர் நவீன். 'மறைக்க முடியாத பொய்கள்' என்ற தலைப்பில் ஒரு சிறிய கட்டுரையில் தன்னை அறிமுகப்படுத்திக்கொள்கிறார். இதைத்தான் 63வது கவிதை நேசிக்கும் கூட்டத்தில் அறிமுகப்படுத்தினேன். இதிலிருந்து ஒரு கவிதையை அளிக்கிறேன். டிக்கெட் வரவேண்டாம் என என்னை நீ பணித்த சில நிமிடங்களுக்கு முன் தான் டிக்கெட் உயிர்பெற்றது தனதுடலில்அச்சிடப்பட்டிருந்த திகதியையும் நேரத்தையும் ஒரு முறை உரக்கச் சொன்னது தனது பயணம் பற்றிய அவசியம் குறித்தும் புலன்களின் வேட்கை பற்றியும் அது ஓயாமல் பிதற்றத் தொடங்கியது நமது இடைவெளியை” தனது மெலிந்த மேனியால