Skip to main content

Posts

Showing posts from June, 2012

எதையாவது சொல்லட்டுமா....74

 கடந்த சில தினங்களாக அலுவலகம் போகாமல் வீட்டில் இருக்கிறேன்.  பையன் திருமணத்தை ஒட்டி.  வீட்டில் நானும், அப்பாவும்தான்.  காலையில் நடக்கப் போவேன்.  சரவணபவன் ஓட்டல் எதிரில் உள்ள ஒரு பெண்கள் பள்ளியைச் சுற்றி சுற்றி வருவேன்.  நான்கு தடவைகள்  சுற்றினால் அரைமணிநேரம் ஓடிவிடும்.  பின் சரவணபவன் ஓட்டலில் 2 இட்லி ஒரு மினி காப்பி அல்லது பொங்கல் அல்லது வடை மினி காப்பி நிச்சயம் சாப்பிட்டு வீட்டிற்கு வந்து மெதுவாகக் குளித்து மெதுவாக மதியம் சாப்பிடுவேன்.  ஒருமுறை காலை 11 மணிக்கு வெயிலில் வெளியே சுற்றினேன்.  கடுமையை உணர்ந்தேன்.  1984ஆம் ஆண்டு வாக்கில் நான் சம்பத்தைச் சந்தித்திருக்கிறேன். 2 முறைகள் சந்தித்திருப்பேன்.  ஒருமுறை ஞாநி நடத்திய கூட்டம் ஒன்றில்.  பாதல்சர்க்கார் பற்றிய கூட்டம் அது என்று நினைக்கிறேன்.  அப்போது சம்பத் என்பவர் சத்தமாக விவாதம் செய்ததாக நினைப்பு.  எதைப் பற்றி பேசினார்கள், என்ன பேசினார்கள் என்பதைப் பற்றி ஞாபகம் இல்லை.  அடுத்த முறை சம்பத்தை ஜே கிருஷ்ணமூர்த்தி கூட்டத்தின்போது, கூட்டம் முடிந்து நடந்து போய்க்கொண்டிருக்கும்போது, பேசிக்கொண்டு வந்தேன்.  ஆனந்தவிகடன் நடத்த உள்ள நாவல் போட்டி
கொடை கடல் பார்க்கவும் அலைகளில் கால் நனைக்கவும் ஆசைப்படாதவர் உண்டா அருவியின் முகத்துவாரம் இன்னும் அருமையாக இருக்கும் அல்லவா கங்கை,காவிரி,வைகை சமுத்ரநாயகனுக்கு எத்தனை நாயகிகள் தேங்கிய தண்ணீரை பார்க்கப் பிடிப்பதில்லை குளத்தில் நீந்தும் மீனுக்கு மார்க்கெட்டில் மவுசு அதிகம் ஏரியில் பறவைகள் கூட்டம், மக்களின் தாகத்தை தீர்க்கவும் பறவைகளுக்கு அடைக்கலம் கொடுக்கவும் நிறைஞ்ச மனசு வேணும் தோணி உண்டு ஓடையில் பயணிக்க நீங்கள் துடுப்பை வலிக்க வலிக்க உங்கள் ஜாதகத்தையே சொல்லும் ஓடை வானத்தின் கொடை தான் மக்களின் தாகத்தை தணித்துக் கொண்டிருக்கிறது. கூர் பாதசாரிகள் கவனத்துடனேயே சாலையை கடக்கிறார்கள் எந்த வாகனத்தில் சென்றாலும் கோயிலைக் கண்டால் கன்னத்தில் போட்டுக் கொள்ள மறப்பதில்லை வெகுஜனங்கள் சீரூடை அணிந்த மாணவர்களின் மிதிவண்டி வேகமெடுக்கிறது பள்ளியை நோக்கி மின்வெட்டு,பெட்ரோல் தட்டுப்பாடு சகலத்தையும் எப்படி பொறுத்துக் கொள்கிறார்கள் சாமானியர்கள் வீட்டின் பெரும்பகுதியை ஆடம்பரப் பொருட்கள் தான் அடைத்துக் கொண்டுள்ளது வெள்ளைக்காரன் விட்டுச் சென்ற ஆங்கிலம் தான்

துருக்கிப் படை வீரர்களுக்கான மயானம்

1. நானொரு கப்பற்படை மாலுமி எனது விழிகளைச் சாப்பிட்டன மீன்கள் பார்ப்பதும் அழுவதும் என்னைப் பற்றியதாகவே உள்ளன எனது வாழ்க்கையில் நான் உயர்ந்திருந்தேன் என்னை நீங்கள் நம்பாவிடில் எனது ஆடைகளைப் பாருங்கள் உயிரற்ற ஏனையவர்களுக்கும் எனக்கும் எந்த வித்தியாசமுமில்லையென்பதால் நான் படைவீரனொருவனும் தானெனச் சிலர் கூறினர். முன்னொரு காலத்தில் நாம் வீடுகளில் வசித்தோம் தற்போது நாம் சுவர்களைத் தாண்டி வந்து கதவுகளுக்கு வெளியே உள்ளோம் அத்தோடு இன்னுமொருவர் கூறினார் அவர்களை நம்பாதீர் அவர்கள் பொய்யர்கள் நாம் உயிர் வாழவில்லை 2. எனதறைக்குள் எளிதாக நுழைவதற்காக அவர்கள் இறந்த உறவுகளின் வடிவத்தில் வருகிறார்கள் அவர் ஒரு தடவை கதைக்கையில் அவர் மாமா ஒருவரா அல்லது சகோதரனொருவனா என நான் பார்க்கிறேன் அவரொரு காவற்துறை அதிகாரியென நான் காண்கிறேன் ஐந்து வயதேயானவோர் மகள் இருந்தாள் எனக்கு. இறந்து விட்ட அவளும் நானும் இப்பொழுது ஒன்றாக இருக்கிறோம் வார்சா நகரின் பின்னால் தனது கரங்களை விட்டு வந்திருக்கும் அவளால் அசைய இயலாதாகையால் வெறுப்படைந்திருக்கிறாள் ஒரு குரல

A. Thiagarajan

மராத்திய மொழியில் ஹைக்கூ (2) திருமதி சிரிஷ் பை அவர்களை அவரது சிவாஜி பார்க் இல்லத்தில் ஹைஜின் பூஜா மலுஷ்டே அவர்களுடன் ஒரு மாலைப் பொழுதில் சந்தித்தேன்.  பூஜாமலுஷ்டே விற்கு நன்றி - இந்த சந்திப்பிற்கும் , உரையாடலில் பல இடங்களில் பை அவர்களுக்காக  இக்விவலேன்ட் ஆங்கில வார்த்தைகளை உடனுக்கு உடன் எனக்குச் சொல்லியும் உதவியதற்கு.  ஹைக்கூ என்பது கவிதை அல்ல ; அது ஒரு கவித்துவமான ஆச்சர்யப் படல் என்று ஆரம்பித்தார் சிரிஷ் பை.  மூன்றுவரிப் பாடல்கள் எல்லாம் ஹைக்கூ ஆகி விட முடியாது.  ஹைக்கூ ஒரு சிந்தனைத் துளியோ அல்லது ஒரு உணர்வு மட்டுமோ அல்ல. ஆரம்பத்தில் இயற்கை பற்றி மட்டுமே எழுதி வந்தார். அவர் எழுத ஆரம்பித்த காலத்தில் ஹைக்கூ மராத்திய மொழியில் அறிமுகப்படாது இருந்தது. ஹைக்கூ வை காய்கூஸ் ( மராத்திய மொழியில் எதற்காக என்று பொருள் வரும் ஏளனத்தில் ) என்றும்,  இ ஸ் ஸா  என்ற மாபெரும் ஜப்பானிய ஹைஜீன் அவர்களை குஸ்ஸா ( கோபம் என்ற பொருளில்) என்றும் கேலி செய்து சந்தோஷப் பட்ட பெரிய மராத்திய கவிகளும் எழுத்தாளர்களும் சிரிஷ் பை அவர்களையும் என்ன எழுதுகிறாய் என்று ஏளனமாகக் கேட்டதுண்டு என்று

இலைகளற்று பூக்களற்று....

கிணற்றடியில் சலவைக்கல்லில் குமித்துக் கிடக்கும் ஈரத் துணியில் மடிப்புக் கலையாமல் காத்திருக்கிறது எனது தனிமை உலர்த்தும் கணந்தோறும் நெடுகப் படர்கிறது வான் நோக்கி மௌனக் கொடி இலைகளற்று, பூக்களற்று நட்சத்திரங்களைத் தொட்டுவிடும் வேட்கையோடு      இளங்கோ

இருப்பு

  ஓவியக் கண்காட்சிக் கூடத்தின்  ஒரு சுவரில் பிள்ளையார் விதம் விதமான கோணங்களில் அருள் பாலித்தார். தன்னலமற்று உலகை இரட்சிப்பதாகப் பசுவைக் கொண்டாடும் படங்களால் நிரம்பியிருந்தன இன்னொரு சுவர். போட்டிகள் நிறைந்த உலகின் ஆக்ரோஷங்களை வெளிப்படுத்தின சேவல் சண்டைக் காட்சிகள். கொல்கத்தா வீதிக் காட்சிகளால் சோகம் அப்பி நின்றிருந்தது சன்னல்கள் அற்ற இடதுசுவர் உயிரைக் குழைத்திழைத்த  ஓவியங்களைப் பிரியும் துயர் இலாபக் கணக்குகளால் ஆற்றப் பட்டன கையில் சுமந்திருந்த மோதகத்தைச் சத்தமின்றி பிள்ளையாரின்  காலடித்தட்டில் வைத்து விட்டு எதிர்சுவற்றுச் சந்தைக் காட்சியில்  சாலையில் உருண்டு கிடந்த  தக்காளியைச் சுவைக்கச் சென்றிருந்த  மூஞ்சுறு சேவல்களுக்கு அஞ்சி  உத்திரத்தின் வழியே திரும்பிக் கொண்டிருக்கையில் வானத்துச் சூரியன்  மேற்கே சரிந்துவிட.., விற்காத படங்களுடன் வெளியேறினர் ஓவியர். இருண்ட காலிக் கூடத்தின்  சுவர்களெங்கும் ஓடிஓடித் தேடிக் கொண்டேயிருந்தது  பிள்ளையாரை மூஞ்சுறு. *** ராமலக்ஷ்மி

பன்னீர் முத்துக்களைக் காய்க்கும் இளவெயில்

வானக் கரிய வாவியில் மின்னி நீந்திடும் சிலவேளை வீழ்வதாய்ப் போக்குக் காட்டும் ஊணுண்ணிப் பட்சியென மீன்கொத்தி நிலா மேற்கிலிருந்து கிழக்காய் நகர்ந்து நகர்ந்து கொத்திட காலையில் செவ்வாகாயம் வெறிச்சோடிக் கிடக்கும் இடித்திடித்துக் கொட்டிய நேற்றின் இரவை நனைத்த மழை உனதும் எனதுமான ஏகாந்தப் பொழுதொன்றை நினைவுறுத்திக் கொண்டேயிருந்ததில் அச்சமுற்றிருந்தேன் நான் மின்சாரம் தடைப்பட்டெங்கும் அந்தகாரம் மேவிய பொழுதில் கண்மூடி விழித் திரைக்குள் உனையிறக்கியிருந்தேன் உதறப்பட்ட காலத்தின் துளிகளோடு உன் மீதான எனது சினங்களும் ஆற்றாமைகளும் வெறுப்பும் விலகியோடிப் போயிருக்கவேண்டும் நினைத்துக் கொண்டேயிருந்தேன் உன்னையே அப் பாடலைப் பாடியபடி அச் செல்லப் பெயரால் எனை விளித்தபடி பிரகாசத்தையள்ளி வீசுமுன் குரலையும் கேட்டேன் அங்குமிங்குமசையும் ஊஞ்சல் அந்தரத்தில் சரணடையும் ஆவல் அக் கணத்து மனநிலையை என்சொல்வேன் அகழ்வுகளுக்குள் தேடினால் அர்த்தமற்ற நம் சச்சரவுகளின் நூலாம்படை திரண்டுகிடக்கும் எமக்கெதிரான எல்லாப் புழுதிகளுமெழும்பிக் கட்டிய மதிலதன் அத்திவாரத்தில் இருவரில

நாம் பறவை மரம்

கிளைஅதிர எழும்பிப்பறக்கின்றது பறவை கிளையிலிருந்து உதிர்கின்றது ஒரு இலை, அதன்சிறகிலிருந்து உதிர்கின்றது ஒரு இறகு இலை நமது இருப்பிற்கான ரசீது இறகு நாம் பறப்பதற்கான பயணச்சீட்டு ரவிஉதயன்

சுத்தம் சோறு போடும்

மதி வீட்டைச் சுத்தம் பண்ணி நாளாச்சு குப்பைக்குள் கொஞ்சூண்டு வீடு மீதமிருந்தது ! ஒரு வெள்ளிக்கிழமை ரெண்டாம் சாமத்தில் சடாரெனச் சுதாரித்துக் கொண்டு மூக்கின் மேல் துணியைக் கட்டினோம். வீடு அதிர விளக்குமாறு அதிர ஆவேசமாய் என்றாவது வீட்டைச் சுத்தம் செய்து பழக்கம் உண்டா உங்களுக்கு ? காலியான அரிசி மூடைச் சாக்கொன்றில் வேண்டாத சாமானனைத்தும் விறுவிறுவென அள்ளிப்போட்டபடி .................. உப்பு புளி மிளகு நவதானியச் சத்து மாவு மூன்று மாதமாய்ப் பிரிக்காத ஒரு கிலோ பருப்பு பாக்கெட் கண்ணாடி பாட்டில்கள் காலி பாட்டில்கள் கத்தை கத்தையாய் காகிதங்கள் சாவி தொலைத்த பூட்டுகள் பூட்டு தெரியாத சாவிகள் கொஞ்சம் துணிமணி கிழிந்த செருப்புகள் நாலே நாலு பேர் இருந்த வீட்டில் பதினைந்து டூத் பிரஷ்கள் ! ............... ஏழெட்டு சாக்குகளில் குப்பைச் சாமான். வாசலில் வைத்து விட்டு வந்து பெருக்கி கழுவி வியர்த்து குளித்து முடிந்ததும் பார்த்தால் வீட்டின் விசாலம்

கரடி

பொம்மைகளை வெறுக்கும் பெண்ணொருத ்தி பாண்டிபஜாரில், தன் தோழிக்குப் பரிசளிக்க பெரிய கரடி பொம்மை வாங்கினாள். அதன் தலையைப் பிடித்துத் தூக்கிக் கொண்டு நடந்தவள் வாகாக இல்லாததால் வேறு வழியின்றி அதைக் தூக்கி இடுப்பில் வைத்துக்கொண்டாள். ரங் கநாதன் தெருவைக் கடக்கையில் கரடி அவள் தோள் மேல் சாய்ந்து கொண்டது. மின்வண்டியி ல் பக்கத்தில் இடமிருந்தும் தன் மேலேயே வைத்துக்கொண்டாள். கு ளிர்காற்று வீசியபோது கரடி அவளைக் கட்டிக்கொண்டது. "டேய ் விடுடா என்னை" என்று அதட்டினாள்.  முகுந்த் நாகராஜன்.

THREE POEMS

யாத்ரிகன் இக்கரைக்கு அக்கரை பச்சை எப்ப பார்த்தாலும் எதிர் வீட்டு கனவானிடம் என்னை ஒப்பிட்டுப் பார்த்தால்… கதவைத் திறந்ததும் இருட்டு கடை அல்வாவை எதிர்பார்த்து கைகளைத் துழாவும் குழந்தைகளின் கண்கள் மனோவேகத்திற்கு உடல் ஒத்துழைக்கவில்லை நீந்தத் தெரியாதவன் கடலில் மீன் பிடிக்க போன கதை கவரிங் நகை வாங்கக்கூட யோசிக்க வேண்டியிருக்கிறது இதில் தங்கத்திற்கு எங்கே செல்வது படியளக்கிறவன் பரிதாபம் பார்ப்பதால் மூன்று வேளையும் வயிற்றை நிரப்ப முடிகிறது பிள்ளைங்க என்ன கிளாஸ் படிக்கிறாங்க என்று கேட்டால் யோசிக்க வேண்டியிருக்கிறது சர்க்கஸ் கலைஞன் சிங்கத்தின் வாயில் தன் தலையை கொடுப்பது போல் வாழ்க்கை எங்களை வேட்டையாடத் துடிக்கிறது நோஞ்சான் நாய் துரத்தினால் எப்படி இவ்வளவு வேகமாக ஓடுகிறான் என வியந்ததுண்டு ஓடிக்களைத்து ஓரிடத்தில் நின்று பார்த்தால் தான் தெரிகிறது துரத்தியது நாயல்ல நிழலென்று பிச்சைக்காரர்களை பார்க்கும் போதெல்லாம் நான் திருவோடு ஏந்துவது போலுள்ளது. வடு படுக்கையிலிருந்து எழுந்திருக்க மனம் வரவில்லை வங்கிக் கணக்கை வைத்து எடைபோடும் மனிதர்கள் மத்தியில் வாழ வேண்டியிருக்கிறது தோணி முன்னேறிச் செல்ல துடுப்பை வல

செல்வராஜ் ஜெகதீசன் கவிதைகள்

நினைவு தினம் அன்றைக்கென்று அலுவல் நிமித்தம் அடுத்த நாடொன்றுக்கு ஆகாயப் பயணம் . அலை அலையாய் அம்மாவின் நினைவுகளோடு . அசைவ உணவை அண்டாமல் இருந்ததொன்றே அயலக வாழ்வில் அடியேனால் முடிந்தது அம்மாவின் இந்த முதலாம் ஆண்டு நினைவு நாளில். 0 அப்படியே இருப்பதுதான் என்றைக்காவது பார்த்தால் கேட்பதற்கென்று சில கேள்விகள் என் வசம் . என்றைக்காவது பார்த்தால் கேட்கப்படாமல் அவைகள் அப்படியே இருப்பதுதான் அழகு. o எப்போதும்   போல எப்போதும்   போல்தான் இதையும் சொன்னேன். எப்போதையும் போலின்றி கேட்கின்ற வகையில் நீ இருந்ததுதான் இன்றைய சிறப்பம்சம்.

Two poems

கவி சட்டென உடைந்து விடுகிறது ஏதோவொரு காதல் ஏதோவொரு நட்பு ஏதோவொரு ரகசியம் ஏதோவொரு இறப்பு ஏதோ சில சிலவாகிய பல எவ்வித சமரசமும் இல்லாமல் கிளையிலிருந்து வீழும் இலை போல் வானிலிருந்து நழுவும் நட்சத்திரம் போல் உயர எறிந்த பந்து கீழே விழுவது போல் காற்றடைந்த குமிழி போல் இன்னும் போல பல புதிதாய் முளைவிடும் இலை காலம் வெளித்தள்ளிய நட்சத்திரம் பிடித்து இழுத்த விசையுறு பந்து வெற்றிடம் உருவாக்கும் குமிழ் மற்றுமொரு காதல் வெறுப்புமிழ்ந்த நட்பு விவரித்துவிட வேண்டிய ரகசியம் வேறொருவருக்கான உயிர் ஏதேனும் தேவைப்படுகிறது தான் நிரப்பி விடவும், விட்டு விடுதலையாகவும்.. வீடு சதுரங்கள் மடித்த முக்கோணங்களாகவோ வட்டங்களாகவோ செவ்வகவமாகவோ தான் எப்போதும் இருக்கின்றன வீடுகள் வெறுப்புக்களும், நிராசைகளும், சலிப்புக்களும் புகைந்து வெளியேறிக்கொண்டே இருக்கின்றன . தங்கசங்கிலிக்குள் புதைந்த சம்பிரதாயங்களின் ரகசியம் அவிழ்க்கப்படுகின்றன கடமைகள்,பொறுப்புக்கள் வளர்ந்து அச்செடுக்கப்படுகின்றன அசல் பிரதிகளை போல எப்போதாவது தான் பசியாற வைக்கும் உணர்வுகள் சங்கமிக்கும் அன்

நான், பிரமிள், விசிறி சாமியார்.............17

அழகியசிங்கர் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் தேவைப்படுவது. உணவு, உடை, இருப்பிடம்.  இந்த மூன்றுமே பிரமிளுக்குச் சிக்கலாக இருப்பதாகவே எனக்குப்படும்.  இருப்பிடம் என்பதை எடுத்துக்கொண்டால், வேறு வழியில்லாமல் இருக்க வேண்டுமென்று இருப்பதாக எனக்குப்படும்.  க்ரியா அலுவலகத்திற்கு எதிரில் உள்ள தெருவில் உள்ள இடத்தில் ஒரு அறையில் அவர் ரொம்ப வருடங்கள் குடியிருந்தார்.  அது வெறும் அறை.  பொது எதிரில் உள்ள ஒரு அறையில் அவர் ரொம்ப வருடங்கள் குடியிருந்தார்.  அது வெறும் அறை.  பொது கழிவறை, குளியலறை. அந்த இடத்திற்கான வாடகையைக்கூட யாரோ சில நண்பர்கள் அவருக்கு உதவினார்கள்.  பின் அங்கிருந்து திருவான்மியூரில் உள்ள ஒரு இடத்திற்குச் சென்றார்.  அங்கிருந்து அவர் அயோத்தியா குப்பம் என்ற இடத்திற்கு வந்தார்.  உள்ளே நுழையக்கூடிய அறை மட்டும்தான்.  பொதுவாக அயோத்தியா குப்பத்திலுள்ள எல்லோரும் பயன்படுத்தும்படி பொது கழிவறை.  போதுமான வசதிகள் இல்லாமல் எத்தனையோ ஏழை மக்கள் இப்படியெல்லாம் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.  மயிலாடுதுறையில் நான் இருந்த இடத்திலுள்ள தெருவில் பாய் முடைபவர்கள், பாயெல்லாம் முடைந்து தெருவில்தான்

நான், பிரமிள், விசிறி சாமியார்.............16

அழகியசிங்கர் இந்தத் தொடரை எழுதவே தோன்றாமல் நிறுத்திவிட்டேன்.  பிரமிளைப் பற்றி இன்னும் என்ன எழுதுவது என்பதைப் பற்றி யோசித்துப் பார்க்கிறேன். பிரமிளின் கடைசித் தினங்களைப்பற்றி எழுத எனக்கு விருப்பமில்லை.  நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும்போது, பாரதியார் பற்றி புத்தகம் தூரன் எழுதியதைப் படித்துக்கொண்டிருப்பேன்.  பாரதியாரின் மரணம் எனக்குப் படித்தபிறகு பெரிய துக்கமாக இருக்கும்.  அவர் வாழ்ந்த இடத்தையும், பார்த்தசாரதிக்கோயிலையும் இப்போதும் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.  நோபல் பரிசு பெற பாரதியார் தாகூருடன் போட்டிப்போடுகிறார்.  அந்தத் திறமை பாரதியாருக்கு உண்டு.  ஆனால் பாரதியார் வாழ்ந்த வாழ்க்கை மிகக் கொடூரமானது.  அதிக ஆயுளுடன் அவர் இருந்திருந்தால், அவர் நோபல் பரிசுகூட வாங்கியிருப்பார்.  பிரமிளை எடுத்துக்கொள்ளுங்கள்.  56வயது சாகக்கூடிய வயதே இல்லை என்று எனக்குத் தோன்றுகிறது.  வறுமை அவரைப் பற்றிக்கொண்டு விடவில்லை என்பது உண்மை.  ஆனால் அவரிடம் எந்தக் கெட்டப் பழக்கமும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ஆரம்ப காலத்தில் அவர் கஞ்சா புகைப்பார் என்று எனக்கு சில நண்பர்கள் குறிப்பிட்டிருக

பந்தநல்லூரில் கிடைத்த பதவி உயர்வு

.... அழகியசிங்கர் முன்கதைச் சுருக்கம் அழகியசிங்கரின் கதாபாத்திரமான பத்மநாபன் 50வது வயதில் பதவி உயர்வு பெற்று கும்பகோணம் செல்வதை அழகியசிங்கரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மேலும் பத்மநாபனை விட்டுப் பிரிவது என்பதை அழகியசிங்கரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 4. கும்பகோணத்தில் வட்டார மேலாளரை பத்மநாபனுக்குத் தெரியும்.  நேரிடையாக அவரிடம் பேசினார்.  ''சார், நான் கும்பகோணத்திற்கு வருகிறேன்.  மயிலாடுதுறையில் என் உறவினர்கள் இருக்கிறார்கள்.  அஙகுள்ள பிராஞ்சில் எனக்கு போஸ்டிங் தரமுடியுமா?'' ''அது முடியாது.  எதாவது நல்ல பிராஞ்சா பாத்துப்போடறேன்.'' ''அப்படி இல்லாவிட்டால், மயிலாடுதுறையிலிருந்து போகும்படி எதாவது பிராஞ்ச் தர முடியுமா?'' ''பார்க்கிறேன்.'' அவர் பார்க்கிறேன் என்று சொன்னது.  பந்தநல்லூர் என்ற கிளையை.  மயிலாடுதுறை கும்பகோணம் இடையில் உள்ள இடம் இந்த பந்தநல்லூர்.  மயிலாடுதுறையிலிருந்து 28கிலோமீட்டர்.  கும்பகோணத்திலிருந்து 30 கிலோமீட்டர். என்னடா இது ஏதோ ஒரு கிராமத்தில் போய் மாட்டிக்கொள்கிறோம் எ

ழ 6வது இதழ்

பிப்ரவரி / மே 1979  பலமுறை  பஸ்ஸிலும் நடந்தும் சைக்கிளிலும்  போகுமிடம் போகையில்  இரண்டு பக்கமும் வயல்களைப் பார்த்துப்  போனதுதான் இந்த ரோடு;  சும்மா உலாவ வருகையில்  இன்று தெரிந்தது  வயலுக்கு நடுவேதான் ரோடு போகிறது.   பிரதீபன்.

எதையாவது சொல்லட்டுமா.........72

அழகியசிங்கர் நான் இன்னும் சீர்காழியிலிருந்து சென்னைக்கு வரவே இல்லை என்றே நினைக்கிறேன்.  நான் முன்பு பார்த்த சென்னை மாதிரி இது தெரியவில்லை.  மிகச் சாதாரணமாக நடக்கும் சாலையில் கூட கூட்டம் அதிகமாகத் தெரிகிறது. வண்டியை அந்தப் பக்கத்திலிருந்து இந்தப் பக்கம் கொண்டு வர முடியவில்லை. போன மாதம் முழுவதும் என் புதல்வனின் திருமணத்தில் மூழ்கியிருந்தேன்.  முதலில் நான் என் பையனுக்கு திருமணம் செய்து வைக்கப்போகிறேனென்பதை நம்பவில்லை. 8 ஆண்டுகளுக்குமுன் என் பெண்ணிற்குத் திருமணம் செய்து முடித்திருந்தேன்.  வயது கூடிக்கொண்டே போகிறது.  என்னால் என்னை நம்பமுடியவில்லை.  காரணம் நான் வயதானவன் மாதிரி தோன்றவில்லை என்று நம்பிக்கொண்டிருந்தேன். என்னுடைய பல நண்பர்கள் தளர்ந்து போயிருந்தார்கள்.  திருமணத்திற்கு நான் பலரைக் கூப்பிடவே இல்லை.  காரணம் முகவரிகளைத் தொலைத்துவிட்டேன்.  கிட்டத்தட்ட 55 பேர்களுக்குமேல் பல எழுத்தாள நண்பர்களைப் கூப்பிட்டேன். இப்போது அப்படி இல்லை.  8 ஆண்டுகளுக்கு முன், நான் தலையை டை அடித்திருந்தேன்.  முதன் முறையாக அப்போது டை அடித்திருந்ததால் வினோதமாகக் காட்சி அளித்தேன். பெண் திரும