அழகியசிங்கர்
எலிஸபத் கில்பர்ட் என்ற பெண் எழுத்தாளர் எழுதிய புத்தகம் ஈட், பிரே, லவ். இது ஒரு சுயசரிதம். இந்தப் புத்தகத்தில் அப்படி என்ன விசேஷம் என்ற கேள்வி உங்கள் மனதில் எழும். உலகம் முழுவதும் இந்தப் புத்தகம் 6 மிலியன் பிரதிகள் விற்றிருக்கின்றன. 1 மிலியன் என்றாலே பத்துலட்சம் இருக்குமென்றாலும் 6 மிலியன் என்றால் 60 லட்சம் பிரதிகள். நினைத்தே பார்க்க முடியவில்லை.
இப்படி என் புத்தகம் ஒன்று விற்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். நான் அதை அச்சடிப்பதற்கும் அனுப்புவதற்கும் திண்டாடிப் போய்விடுவேன். நல்லகாலம் எனக்கு ஆண்டவன் அதுமாதிரி அருள் புரியவில்லை. லட்சமே வேண்டாம். ஆயிரக்கணக்கில் ஒரு புத்தகம் விற்றால் கூட போதும். வேண்டவே வேண்டாம் நூற்றுக் கணக்கில் விற்றால் போதும்..
சுய சரிதம் என்பதால் இப்புத்தகம் சுவாரஸ்யமாகப் படிக்க முடிகிறது. 348 பக்கங்கள் உள்ள இந்தப் புத்தகத்தில் 30 பக்கங்கள்தான் படித்திருக்கிறேன். அதற்குள்ளேயே நிறையா மின்னல்கள் இப் புத்தகத்தில். ..பூமியில் கால் ஊன்றி நிற்கவேண்டும். நாலு கால்களில் நிற்பதுபோல் அழுத்தமாக நிற்க வேண்டும். அப்போதுதான் இந்த உலகத்தில் நிலை பெற்றிருக்க முடியும். இந்த உலகத்தை நீ மூளையைப் பயன் படுத்திப் பார்க்காதே..மனதின் வழியாகப் பார். அப்போதுதான் கடவுளை அறிய முடியும்.எலிஸபத் இப்போது நியூ ஜெர்சியில் வசிப்பதாக இந்தப் புத்தகம் குறிப்பிடுகிறது.
இந்தப் புத்தகத்தை நான் ஏதோ பேப்பர் கடையில் வாங்கினேன் என்று நினைக்கிறேன்.
Comments