Skip to main content

பிணா என்ற பத்மஜா நாராயணன் கவிதைத் தொகுதி

அழகியசிங்கர்




இந்த முறை பிணா என்ற கவிதைத் தொகுதியைக் கொண்டு வந்துள்ளேன்.  மொத்தம் 41 கவிதைகள் கொண்ட தொகுப்பு இது.  விலை ரூ.50.  தமிழில் கவிதை நூல் கொண்டு வருவதுபோல ஆபத்தான சமாச்சாரம் எதுவும் இல்லை.  ஆனால் ஒரு பதிப்பாளர் என்ற முறையில் பல கவிதைத் தொகுப்புகள் எனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தாமல் இருந்ததில்லை. பெரிதாக விற்கவில்லை என்று கவலைப் பட மாட்டேன். 

பினா கவிதைத்தொகுப்பில் ஒன்றை கண்டுபிடித்தேன்.  அத் தொகுதியில் உள்ள கவிதைகளை சத்தமாக வாசித்தல்.  அப்படி வாசிக்கும்போது மனதில் பதியும்படி கவிதை வரிகள் நம்மை வசப்படுத்துகின்றன.   மௌனமாக வாசிக்கும்போது கவிதை வரிகள் நம்மை விட்டு நழுவி விடுகின்றன.  கவிதைகளை வாசிக்கும்போது அதிக இடைவெளி கொடுத்து வாசிக்க வேண்டும்.  வேசமாக ஒரு நாவலைப் படிப்பதுபோலவோ சிறுகதை வாசிப்பதுபோலவோ படிக்ககு; கூடாது என்பது அடியேனின் கருத்து. 
 

Comments