21.02.2021
துளி - 172
	இன்று மதியம்தான் வந்தோம்.  பெண்வீட்டிலிருந்து  கிளம்பி.  பெண் வீடு மடிப்பாக்கத்திலிருக்கிறது .  மடிப்பாக்கத்தில் சில நண்பர்கள்/உறவினர்கள் இருக்கிறார்கள்.  உஷாதீபன்  பக்கத்திலிருக்கிறார் .  இன்று அங்கிருந்து  கிளம்பியபோது உஷாதீபன்  வீட்டிற்குச் சென்று விடைபெற்றுக் கொண்டேன்.  மாம்பலம் வீட்டிற்கு வந்தபிறகு ஒரு பெரிய பெருமூச்சு என்னை விட்டு இன்னும் அகலவில்லை.  என்றுடைய இரண்டு புதியப் புத்தகங்களை அவருக்குக் கொடுத்தேன்.  அவர் தன்னுடைய  'உறங்காக் கடல்'  என்ற புத்தகத்தை என்னிடம் கொடுத்தார்.  
	எனக்குத் தெரிந்து முகநூலில்  சிலர் புத்தகங்களைப் பற்றி எழுதிக்கொண்டேயிருக்கிறார்கள்.  அதில் உஷாதீபனும்  ஒருவர். அவர் கொடுத்த ‘உறங்காக்  கடல்'  புத்தகமும் அப்படித்தான்.
	15 எழுத்தாளர்களின் படைப்புகளைப் பற்றி கட்டுரைகள் எழுதி உள்ளார்.
	ஒவ்வொரு கட்டுரையும் இரண்டரை அல்லது மூன்று பக்கங்களில் முடித்து விடுகிறது.  
	இனிமேல்தான் படிக்க வேண்டும்.  புரட்டிப் பார்த்தேனே தவிர இன்னும் படிக்கவில்லை.
	நான் அவருக்குக் கொடுத்த ஒரு கதை ஒரு கருத்து என்ற என் புத்தகத்தில் நானும் கதைகளைக் குறிப்பிட்டு கருத்துக்கள் வழங்கியிருக்கிறேன். இன்னொரு புத்தகம் துளிகள் 2
	நிறையா சிறுகதைகள், கட்டுரைகள், நாவல்கள் என்று  எழுதிக்கொண்டிருக்கும்  உஷாதீபன்  தன்னை எப்போதும் உயிர்ப்புடன் வைத்துக்கொண்டிருக்கிறார்.  அவருக்கு வாழ்த்துகள். 

Comments