அழகியசிங்கர்
1. இன்றைய தினத்தைத்
துக்க தினமாக அனுசரிக்கப்பட்டு
நம் மதிப்பிற்குரிய
பாடகர் எஸ்.பி.பி பூலோக
வாழ்வைத் துறந்து விட்டார்
அவர் ஒரு இசை மேதை
அவர் ஒரு சகாப்தம்
யாரோ ஒருவர்தான் அப்படித்
தோன்றுவார்கள்
கடந்த சில தினங்களாக
அவரைப் பற்றி செய்தி
குடும்பத்தில் எல்லோரிடமும்
நுழைந்து நுழைந்து
வந்து கொண்டிருந்தது.
2. இன்று மதியம்தான் தெரிந்தது
தூங்கி விழித்தபோது
எஸ்.பி.பியின் மறைவு
வாட்ஸ்அப்பில் செய்தியாகப் பரவியிருந்தது
நண்பர் ஒருவர் தெரிவித்திருந்தார்
அவருக்கு எஸ்.பி.பி என்றால்
உயர் மூச்சு
நிச்சயம் கண்ணீர் சிந்தியிருப்பார்
என் நினைவில்
எஸ்.பி.பி வந்து வந்து போய்க்
கொண்டிருந்தார்
அவர் பூத உடல்
அவர் இல்லத்தை அடைந்தபோது
மழை பெய்ததாம்
ஆம்
அவருக்காக வானமும் துக்கத்தைத்
தெரிவித்து கண்ணீர் சிந்தியதா?
(25.09.2020)
(நேற்று விருட்சம் கவிதை வாசிக்கும் கூட்டத்தில் படித்த கவிதை)
Comments