Skip to main content

மொழிப்பெயர்ப்புக் கவிதைகள்

சுக்வீர்

நடத்தல்

நான் நடக்கிறேன்

என் கால்களால் அல்ல

கண்களால் -

சாலைகளையும் தெருக்களையும்

இதயத் தொகுதிகளையும்

இரவின் இருளையும்

கடந்து செல்கிறேன்

சுற்றிலும்

மக்களின் காடு

என் கண்களின் துணையோடு

அதைக் கடந்து செல்கிறேன்

கண்களுக்கே

அதனூடு செல்லும் திறன் உண்டு.

என் கால்கள் களைத்துவிட்டன

மிகவும் களைத்துவிட்டன

ஆனால்

நான் நடந்துகொண்டேயிருக்கிறேன்

மக்கள் கூட்டங்களில் சிக்குண்டு

நான் முன்னேறிப் போகிறேன்

என்றாலும்

இதயங்களின் வலி என்னும்

எல்லையைக் கடக்க

என்னால் முடியவில்லை

நான் நடக்கிறேன்

என் கால்களால் அல்ல

கண்களால்-

ஒரு நீண்ட பயனம்


மூலம் : பஞ்சாபி
(ஆங்கில வழி தமிழில் - மேலூர்
)


நவீன விருட்சம் இதழ் 5 - JULY - SEPTEMBER 1989


Comments