Skip to main content

Posts

Showing posts with the label தொகுப்பு : அழகியசிங்கர்

பூனைகள்...........பூனைகள்................பூனைகள்......25

அரசியல் வாதியும் அவர் வளர்த்த பூனையும் அரசியல்வாதி ஒரு பூனை வளர்த்தார் அன்றாடம் பாலுடன் அனுசரணையாய் வளர்க்கப் பட்டது அந்தப் பூனை அவர் மடியில் கிடந்து மாமிசம் சாப்பிட்ட பூனை அது. அரசியல்வாதி எம். எல். ஏ ஆனார். எம். பி ஆனார். மத்திய மந்திரியும் ஆனார் பூனைக் காவல்படையுடன் சுற்றும் அவர் அருகே இன்று அந்த பூனையால் அண்ட இயலவில்லை அரசியல்வாதியின் மனைவியாய் நெடுங்காலம் இருந்த பின் ஒரே நாளில் திடீரென முதல் மனைவியாய் பதவி உயர்வு பெற்ற அந்தப் பெண்ணின் சமையல் அடுப்பில் தூங்குகிறது இன்று அந்த பூனை குமரி எஸ்.நீலகண்டன்..

மீண்டும் வாசிக்கிறேன் 3

நகுலன் நான் எனக்கு யாருமில்லை நான் கூட.........

மீண்டும் வாசிக்கிறேன் 2

மலையோ மனிதன் வார்த்த......... எஸ்.வைத்தியநாதன் மலையோ மனிதன் வார்த்த கட்டிடமோ - எங்கும் நிறைந்து இருக்கும் வெளி. உயர - அழகும்கூட - எங்கும் விரிந்தேன் - வெளியோடு சேர. சேர்ந்தேன் - எங்கும் நிறைந்தேன். மலையோ வார்த்த கட்டிடமோ - எங்கும் நிறைந்து இருக்கும் வெளி.

மீண்டும் வாசிக்கிறேன் 1

நிமல விஸ்வநாதனின் மூன்று கவிதைகள் 1. ந ட்பு நானுன்னை வெறுக்கவில்லை நானுன்னோடு சண்டை போட விரும்புகிறேன் - நன்றாக கவனி நண்பா, விரும்புகிறேன் உன்னோடு சண்டை போட. எனினும் இதிலிருந்து இன்னொன்றும் நீ சுலபமாய் புரிந்து கொள்ளலாம் - நான் சண்டை போடாத எல்லோரையும் நான் விரும்புகிறேன் என்றர்த்தமில்லை. 2. நிலை மத்தியானம் தூங்கினால் மாலையில் என் மனம் குற்றமுணரும் தெரிந்தும் வேலைதேடும் நான் எப்படியோ இன்று மத்தியானம் தூங்கிவிட்டிருக்கிறேன்.... திடீரென காறிக் கமறிய காகங்களின் ஒப்பாரி. கிழித்தெறிந்து விட்டது அதையும் இப்போது... கனவுக்கு வேலி கட்டிய கைசலிப்பில் மளாரென எழுந்திருக்க முடியவில்லை என்னால் வாசலுக்கு வருகிறேன் தெரிகிறது - இன்றேனோ கருணை காட்டாத மின் கம்பிகள் - விழுந்து கிடக்குமொரு கறுப்பைச் சுற்றும் கறுப்பு நிறங்களின் தாறுமாறில் பல்லிளிக்கும் மேலை வானின் வெள்ளைச் சூரியன். அங்கே நிற்கின்ற நிலையில் எனக் கொன்றும் புரிகிறது - நடுத் தெருவில் அப்போது தான் புணர்ந்திறங்குகிற ஆண் கழுதையின் கண்ணில் கசியும் சோகம். 3. விடுதலை மாசு மறுவின்றி வெம்பரப்பாய் விரிந்து கிடக்கும் மத்தியான வெளியில் படபடத்துப் போகும் வச...

மொழிப்பெயர்ப்புக் கவிதைகள்

லூயிஸ் சிம்ஸன் அன்பு : எனது கருவி அன்புதான் எனது கருவி அதுதரும் தப்பித்தல் மூலம் நாம் உதித்தெழுகிறோம் நாம் உண்டாக்கும் ஒலி அதிர்வுகளின் மேல் நாமே பயணம் செய்கிறோம். ஒவ்வொரு ஆணும் பெண்ணும் ஒரு நட்சத்திரத் துளிரில் கண்ணி வயப்பட்டு, பிரமித்து அமரத்துவம் பெற்ற ஆன்மாவாகின்றனர் ஹலோ டோ க்கியோ ஹலோ யூஜூரு கரகரி என் குரல் கேட்கிறதா? நகரங்களிலேயே இருளடர்ந்த சான்பிரான்சிஸ்கோ, என் குரல் உனக்குக் கேட்கிறதா? இதோ, ஆதியந்தமற்ற வெளி இதோ, ஆதியந்த மற்ற ஏகாந்தம் இவற்றுள் ஏதும் உனக்கு விசித்திரமாய்ப் படுகிறதா? இங்குள்ளவர் மிகப் பலர் இதோ காந்தி இதோ யேசு மோஸஸ் இன்னும் பல செயல் திறனாளிகள் நட்சத்திர ஒளியின் மூலம் இந்த இரவு தீவிரம் பெற்றுள்ளது என் உலகைக் கண்டுபிடிக்க இந்த இரவினூடே நான் போய்க் கொண்டிருக்கிறேன் தமிழில் : கால. சுப்ரமணியம் நவீன விருட்சம் இதழ் 6 - OCTOBER - DECEMBER 1989

மொழிப்பெயர்ப்புக் கவிதைகள்

மார்ஸிலிஜஸ்மார்டினைடிஸ் நித்தியம் அதிகாலை விழித்த கிழவன் பார்வையில் வாசல்முன் அன்றைய சுமை. நெருப்பு வளர்த்தல், கட்டளையிடல் வாளிகளின் ஒலி கிழவனின் பெருமூச்சு அனைத்துமே அடக்கம் அச்சுமையில் அவிழ்க்கப்பட்ட சுமையில் ஆற்றவேண்டிய காரியங்களால் நிறைந்து போனது முற்றம் முழுதும். கதவின் கீச்சொலி வைக்கோலின் குசுகுசுப்பு ஜன்னலின் பளிச்சிடல் கால்நடைகளின் பெருமூச்சு பறவைகளின் இன்னிசை மனிதர்களின் பேச்சரவம் சக்கரங்களின் சடசடப்பு அந்தியும் வந்தது இன்பமயமான நீண்ட அந்திமாலை மூலம் : லிதுவேனியக் கவிதை ஆங்கில வழி தமிழில் : நஞ்சுண்டேஸ்வரன் . நவீன விருட்சம் இதழ் 5 - JULY - SEPTEMBER 1989

மொழிப்பெயர்ப்புக் கவிதைகள்

டேவிட் சட்டன் கம்ப்யூட்டர் அறை, நடு இரவு குகையின் சில்லிப்பாய்க் காற்று...... இரண்டு மேலங்கிகளாவது இங்கே வேண்டும். பருவகாலங்களில்லை, வேறுபாடுகளுமில்லை. சுவர்களின் ரீங்காரமே இரவிலும் பகலிலும். அலமாரி அடுக்குகளில் ஏறி வீழ்கிறது வெள்ளோட்டுக் கூரையின் வெளிச்சம். எல்லாமே இங்கு நிழலின்றிச் சுதந்திரமாயுள்ளன. சந்தேகமின்மையின் இருப்பிடம் இதுவே இங்கேதான் நான் வாசம் புரிகிறேன் கட்டளைக்கிணங்கும் அசரீரிகளினிடையில் இயக்கி பாதுகாப்பாய் உணர்கிறேன் இந்தத் திரையைப் பார்த்து நடுநிசியின் குழிந்த கண்களுடன் குறிப்பெடுக்கத் தாமதிக்கையில் உடனே தோன்றுகிறது பசுமைத் தீயில் ஒளிரும் எழுத்தாகக் காவியத்தின் பதில் 'ஆரம்பி' இதன் சமாச்சாரங்களெல்லாம் எனக்குப் புரியும் ஆணையிடுகிறேன். இந்த விசித்திர விலங்குகள் புர்ரிட்டுக்கொண்டு அடிபணிகின்றன. அர்த்தமற்ற ஆனால் அழகான இவற்றை வசப்படுத்த எனக்கு 15 ஆண்டாயிற்று. சுண்டெலி சமைத்த, நேர்த்தியான தர்க்க வளைகளாய் எலித்தன்மையுடன் ஓடும் போட்டித்திறனால் கட்டுப்பட்ட இதன் உட்புறத்தில் பிரமிக்கிறது குறிகளின் மின்சாரம். வீடு செல்லும் நேரம்.....வெளிப்பக்கத்தில் குறியிடல்... காவல்காரனுக...

மொழிப்பெயர்ப்புக் கவிதைகள்

எம் கோவிந்தன் நானும் சைத்தானும் தேவனுக்குரியதை தேவனுக்கும் தேசத்திற்குரியதை அதற்கும் தர நான் முன் வந்தபோது யாரோ என் முன் வந்து சொன்னான் 'எனக்குரியதை கொடு' 'யார் நீ' என்றேன் 'தெரியாதோ சைத்தானை' என்றான் 'கேட்டுக்கொள் என்னுடையவை எல்லாம் எனக்குத்தான் என்பதே இன்றுமுதல் என் வேதம்' என்றேன் சைத்தான் உரக்க சிரித்தான் என்னை சிக்கென்று கட்டிப் பிடித்தான் செவியில் மெல்ல சொன்னான் 'எனக்கு வேண்டியதைத்தான் தந்தாய், நன்றி' (மலையாள அறிஞர், கவிஞர் எம் என் ராயின் பிரதான மாணவராக அறிவுத்துறையிலும் மலையாள மொழியின் திராவிட மயமாக்குதலை தொடங்கி வைத்தவர் என்ற நிலையில் இலக்கியத்திலும் முன்னோடியாக திகழ்ந்தவர்) மொழிபெயர்ப்பு : ஜெயமோகன் நவீன விருட்சம் இதழ் 5 - JULY - SEPTEMBER 1989

மொழிப்பெயர்ப்புக் கவிதைகள்

சுக்வீர் வண்ணங்கள் வண்ணங்கள் சாவதில்லை அவை கரைந்து விடுகின்றன அல்லது அடித்துக்கொண்டு போகப்படுகின்றன அல்லது பூமியின் அந்தகாரத்தில் விதைக்கப்படுகின்றன. வண்ணங்கள் மலர்களாக மாறுகின்றன மேகங்களின் ஒளிர்ந்து உதடுகளில் புன்னகை பூக்கின்றன கண்ணீரைப் பெருக்கி ஒளியை ஈன்றெடுக்கின்றன வண்ணங்களாகிய நாம் வண்ணங்களை உருவாக்கும் நாம் வாழ்க்கையை நம் முதுகுகளில் சுமந்துகொண்டோ நம் பின்னால் இழுத்துக்கொண்டோ நம் சிறகுகளில் அலைந்துகொண்டோ இங்கு வந்து சேர நூற்றாண்டுகளைத் தாண்டியிருக்கிறோம். இருள் முதல் ஒளிவரை உள்ள எல்லா வண்ணங்களுமான நாம் பல தடவைகளில் அடித்துக்கொண்டு போகப்பட்டு மறுபடியும் பிறந்திருக்கிறோம் இன்றும் காலத்திரையை வண்ணங்கொண்டு தீட்டுகிறோம் அனாதிகாலத்தொட்டுப் பிறந்து வரும் நாம் வாழ்க்கையின் அமுதைக் குடித்ததால் இன்றும் நஞ்சுடன் கலந்த வாழ்க்கையமுதைச் சுவைக்கிறோம் கனவுகளை உருவாக்குகிறோம் மூலம் : பஞ்சாபி (ஆங்கில வழி தமிழில் - மேலூர் ) நவீன விருட்சம் இதழ் 5 - JULY - SEPTEMBER 1989 (சுக்வீர் (1925) நாவல், சிறுகதை, கவிதை இத்துறைகளில் பஞ்சாபி மொழியில் சிறந்து விளங்குகிறார். நான்கு கவிதைத்தொகுதிகள் வெளிவந்துள்ளன....

மொழிப்பெயர்ப்புக் கவிதைகள்

சுக்வீர் நடத்தல் நான் நடக்கிறேன் என் கால்களால் அல்ல கண்களால் - சாலைகளையும் தெருக்களையும் இதயத் தொகுதிகளையும் இரவின் இருளையும் கடந்து செல்கிறேன் சுற்றிலும் மக்களின் காடு என் கண்களின் துணையோடு அதைக் கடந்து செல்கிறேன் கண்களுக்கே அதனூடு செல்லும் திறன் உண்டு. என் கால்கள் களைத்துவிட்டன மிகவும் களைத்துவிட்டன ஆனால் நான் நடந்துகொண்டேயிருக்கிறேன் மக்கள் கூட்டங்களில் சிக்குண்டு நான் முன்னேறிப் போகிறேன் என்றாலும் இதயங்களின் வலி என்னும் எல்லையைக் கடக்க என்னால் முடியவில்லை நான் நடக்கிறேன் என் கால்களால் அல்ல கண்களால்- ஒரு நீண்ட பயனம் மூலம் : பஞ்சாபி (ஆங்கில வழி தமிழில் - மேலூர் ) நவீன விருட்சம் இதழ் 5 - JULY - SEPTEMBER 1989

மொழிப்பெயர்ப்புக் கவிதைகள்

சார்லஸ் போதலேர் கேரளக் கன்னிக்கு உன் பாதங்கள் உன் கைகளைப்போல் மென்மையானவை.உன் இடை மிக அழகிய வெள்ளைக்காரப் பெண்ணையும் பொறாமையுறச் செய்யும் சிந்தனைமிக்க கலைஞனை உன் சரீரம் வசீகரிக்கும். வெல்வட்டுப் போன்ற உன் கண்கள் உன் மேனியை விடக் கரியவை. நீல மேகங்களும் புழுக்கமும் நிறைந்த உன் தாய் நாட்டில் உன் முதலாளியின் புகை பிடிக்கும் குழாயைப் பற்ற வைத்து பாத்திரங்களில் நீரை நிரப்பி வாசனைத் திரவியங்கள் கலந்து, தொல்லை தரும் கொசுக் கூட்டங்களைப் படுக்கையினின்றும் விரட்டியடித்து, புலர்ந்து புலராப் பொழுதில் அத்திமர இலைகளின் வழி காற்று இசை எழுப்பும்போது அங்காடியில் அனாசிப் பழமும் நேந்திர வாழைப்பழமும் வாங்குகிறாய். நாள் முழுவதும் நீ விரும்புகிற இடத்துக்கெல்லாம் வெறுங்காலுடன் சென்று மறந்துபோன பழம் பாடல்களை மனதுக்குள்ளேயே முணுமுணுக்கிறாய் மேற்கே சூரியன் தன் சிகப்புச் சட்டையோடு சாயும்போது கோரைப்பாயில் நீயும் மெதுவாகத் தலை சாய்க்கிறாய் மிதக்கும் உன் கனவுகளில் குருவிகள் கீச்சிடும், வண்ணப்பூக்கள் மலர்ந்து வழியும் களித்துத் திரியும் கன்னியே, கடலோடிகளின் வன் கரங்களில் உன் வாழ்க்கையை ஒப்படைத்து உனக்குப் பிடிக்கும...

மொழிப்பெயர்ப்புக் கவிதைகள்

ஆற்றங்கரை வணிகனின் மனைவி ஒரு கடிதம் என் தலையிற் வகுடாக நெற்றியில் வெட்டியிருக்கும் போதே வாசல் முற்றத்தில் பூ பறித்து நான் விளையாடியிருக்க நீர் வந்தீர். மூங்கில் பொய்கால் ஏறி குதிரை விளையாடி வந்தீர். நீலக் கொடிமுந்திரிகளை வைத்து விளையாடிக் கொண்டு நான் இருக்கும் இடத்தைச் சுற்றி நடந்தீர். நாம் சொக்கான் கிராமத்திலேயே வாழ்ந்து வந்தோம். இரு சிறுவர்கள் வெறுப்பும் சந்தேகமும் இன்றி பதிநாலு வயதில் ஐயனே உம்மை மணம் புரிந்தேன் நான் ஒரு போதும் சிரிக்கவில்லை, நாணத்தினால் தலை குனிந்து சுவரைப் பார்த்து நின்றேன் ஆயிரம் தடவை அழைத்தும் ஒரு பொழுதாவது நான் திரும்பி பார்க்கவில்லை பதினைந்து வயதில் முகம் சுளிப்பதை நிறுத்தினேன் என் தூசு உங்கள் தூசுடன் கலக்க விரும்பினேன் என்றைக்கும் என்றைக்கும் என்றென்றைக்குமாக ஏன் நான் வெளியைப் பார்க்க ஏறிவர வேண்டும்? பதினாறில் நீங்கள் பிரிந்தீர்கள் குமளி மறையும் நீர்ச் சுழிகள் நிறைந்த நதி வழியாக தொலைவிலுள்ள கோடு யென்னுக்குச் சென்றீர்கள் நீங்கள் போய் மாதங்கள் ஐந்தாகி விட்டன மேலே குரங்குகள் சோகமாய் கரைகின்றன. நீங்கள் போகும்போது மனதில்லா மனதுடன் கால்களை இழுத்துச் சென்றீர்கள் வாசல...

மொழிப்பெயர்ப்புக் கவிதைகள்

நவீன விருட்சம் இதழில் பல மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் பிரசுரமாகி உள்ளன. அவற்றைத் தொகுத்துப் புத்தகமாகக் கொண்டு வரும் எண்ணம் உள்ளது. சில கவிதைகளை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். நார்மன் மேக்கே கவிஞன் சம்பவங்கள் அவனை நெருக்கடியான நிலையில் தள்ளித் துன்புறுத்தின. வறுமை, சமூகம், நோய் - எல்லாப் பக்கங்களிலிருந்தும் அவனைத் தாக்கின. அவற்றால் அவனை மெளனமாக்க முடியவில்லை. கல்லெறிபட்ட காக்கை முன்பு ஒரு போதும் நினைத்தேயிராத வகையில் எல்லாம் தப்பிப் பிழைக்க வழிகாண்பது போல முன்னைவிட மேலும் பல கவிதைகள் அவன் எழுதினான் எல்லாம் வெவ்வேறாக இப்போது சிரமமில்லாது சமநிலையில் பறப்பதைத் தொடருமுன் மக்களின் தலைகளுக்கு மேலே அவர்கள் வீசியெறியும் கற்கள் தன்மீது படாத உயரத்தில் சில சமயங்களில் திடீர் என அவன் தடுமாறுகிறான். தடைப்பட்டு நிற்கிறான். பக்கவாட்டில் சுழல்கிறான் இதில் என்ன ஆச்சரியம்!.... மூலம் : ஆங்கிலம் தமிழில் : கன்னி ( நார்மன் மேக்கே ஒரு பிரபல ஸ்காட்லாந்து கவிஞர். தனது 75வது வயதில் 26.02.1986 ல் காலமான இவர் 13 கவிதைத் தொகுதிகள் வெளியிட்டுள்ளார். இத் தொகுதிகளிலிருந்து பல கவிதைகளும் இதுவரை வெளியிடாதிருந்த...