Skip to main content

மாற்றம்


நிலைக்கண்ணாடி முன்பு
தான் தொலைத்த
இளமையைத் தேடுகிறார்கள்
தன் பிம்பம் தான் இது
என்று ஏற்றுக் கொள்ள
மறுக்கிறார்கள்
கடவுளால் பரிசளிக்கப்பட்ட
பேரழகை
சாத்தான் களவாடிவிட்டதாக
எண்ணுகிறார்கள்
வயதைக் காட்டிக் கொடுக்கும்
நரைத்த முடியை
டை அடித்து மறைக்கிறார்கள்
பருவத்தில் மினுமினுத்த மேனியில்
சுருக்கம் விழுவதை பார்த்து
பதறுகிறார்கள்
இன்று எந்தக் கண்களுமே
ஆச்சர்யத்துடன் தன் எழிலை
ஏறிட்டுப் பார்ப்பதில்லை
என்பதை எண்ணும் போது
நிலைக்கண்ணாடி முன்பு நின்று
கேவி அழுகிறார்கள்.

Comments

மாற்றம்தானே நிரந்தரம்... நல்ல கவிதை மதி....
ஷைலஜா said…
//கடவுளால் பரிசளிக்கப்பட்ட
பேரழகை
சாத்தான் களவாடிவிட்டதாக
எண்ணுகிறார்கள்
//
உண்மைதான்..கவிதை எதார்த்தம்.