நதி வெள்ளம் கடல் நோக்கி என்னவளின் வீட்டின் கதவு திறக்காது தாமதமாய்ப் போனால் மேகங்கள் தூது போகும் என்னவளின் செளக்கியத்தைச் சொல்லாது மழை நீர் பேதம் பார்த்தா மனிதனைத் தொடும் பயணம் இரவுகளைத் தொலைக்கும் பிரிவு வரத்தை யார் தான் வேண்டுவார்கள் வெண்மேகம் கரைந்தோடும் நினைவுப் போரலைகள் விண்ணைத் தொடும் நெஞ்சம் நிழலாடுகிறது நிழல்கள் கூட உன்னைப் போலவே தெரிகிறது எழுதுகோலில் மை இருக்கிறது கவிதை எதிரில் உட்கார்ந்திருக்கிறது.