அழகியசிங்கர்
இது என் 15வது கதை. இந்தக் கதையைப் படிக்கும்போது ஒரு நிமிடத்திலிருந்து இரண்டு நிமிடம் வரை ஆகும். முகநூல் நண்பர்களுக்கு வாசிக்க அளித்துள்ளேன்.
கீரை
கிளம்புவதற்குமுன் பாரதி செல்லம்மாவைப் பார்த்து, 'சகுந்தலா எங்கே?' என்று கேட்டார்.
'அவளுக்கு உடம்பு சரியில்லை. படுத்துத் தூங்கறா,' என்றாள் செல்லம்மா .
பாரதி 'இந்தியா' பத்திரிகை அலுவலகத்திற்குக் கிளம்பிவிட்டார். அவர் போவதற்கு முன், 'வரும்போது மறக்காமல் கீரை வாங்கிக்கொண்டு வாருங்கள்,' என்றாள் செல்லம்மா .
ஏதோ ஞாபகமாய், 'சரி' என்று தலை ஆட்டிவிட்டுக் கிளம்பினார் பாரதி.
இந்தியா பத்திரிகை அலுவலகம் வந்தவுடன் ஒரு மேசை மீது உட்கார்ந்துகொண்டு, நமஸ்தே வாயோ..த்வ்மேவ ப்ரத்யஷம் ,,ப்ரஹமாஸி என்றார் உரத்தக் குரலில் .
யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. இந்தியா பத்திரிகை அலுவலகத்தில் பாரதியார் சுதந்திரமானவர். அவரை யாரும் கேள்வி கேட்க முடியாது.
அங்கே பார், என்றார் பாரதி. எதையோ சுட்டிக் காட்டினார். யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. 'அங்கே என்ன ஒன்றுமில்லையே ?' என்றார் குறிஞ்சி அய்யங்கார்.
'அங்கே பந்தலைப் பார். பந்தலில் யாரையுமே காணோமே ? ஒரு சின்ன கயிறுதானே ஆடிக் கொண்டிருக்கிறது.'
'ஆமாம். அவர்தான் அந்தக் கயிற்றை ஆட்டிவிட்டுப் போனார்.'
'காற்றிலே கயிறு தானாக ஆடுகிறது. அவ்வளவுதான்.'
'அது சரி பாரதி. காற்று அடித்தால் கயிறு ஆடாமல் இருக்குமா ? '
அந்தக் கயிற்றை ஆட்டிவிட்ட சக்திதான் இறைவன். இறைவன்தான் காற்று. நமக்கு ஜீவிக்கப் பிராணனைக் கொடுக்கிறது, என்று குறிப்பிட்டார்.
எல்லோரும் அவர் சொல்வதைக் கேட்டுப் பேசாமலிருந்தனர் . அன்று வீட்டிற்குப் போனவுடன் செல்லம்மா சொன்னதை மார்க்கெட்டில் வாங்காமல் வந்து விட்டோமே என்று தோன்றியது பாரதிக்கு.
Comments