அழகியசிங்கர்  
காணாமல் போன ஆறு
சுரேஷ் பரதன் 
ஆதியில் அந்த ஆறு
ஓர் ஆறாகவே 
இருந்தது.
அதன் கரையில்
படகுத்துறையும் இருந்தது.
படகோட்டி ஒருவனும்
இருந்தான்
படகோட்டி
படகுத்துறை ஆற்றோடு
போயிற்று
ஆறும் காணாமலேயே
போய்விட்டது.
நன்றி : ஊர் நடுவே ஒரு வன தேவதை - சுரேஷ் பரதன் - வெளியீடு : நான்காவது கோணம் வெளியீடு - பக்  : 112 - விலை : ரூ.90 

Comments