அழகியசிங்கர்
 கடந்த 3 வாரங்களாக நான் சூமில்  கவிதைக் கூட்டம் நடத்தி வருகிறேன்.  முதல் வாரம் 4 கவிதை வாசிப்பவர்களை அழைத்து கவிதை வாசிக்கக் கூப்பிட்டேன்.  அந்தக் கூட்டம் சரியாக நடக்கவில்லை. நானும் சூம்  கூட்டம் நடத்துவதற்குப் புதுசு.  கொஞ்சம் சரியாக நடக்காமல் போய்விட்டது. 
 இரண்டாவது கூட்டத்தில் கவிதை வாசிப்பவர்கள் எண்ணிக்கையைக் கூட்டினேன்.  இந்தமுறை பத்து   கவிதை வாசிப்பவர்கள்.  ஆனால் கூட்டம் நடத்தும்போது சிலர் கூட்டத்தில் முன்னதாக வந்திருந்து காத்திருந்ததால் நேரம் குறுகலாகப் போய்விட்டது. 
 அதனால் வரும் வெள்ளிக்கிழமை (12.06.2020) கவிதை வாசிப்பவர்கள் எண்ணிக்கை  5 பேர்களாக வைத்திருக்க விரும்புகிறேன்.  ஏற்கனவே வாசித்தவர்களைத் தவிர்த்து புதியதாக வாசிப்பவர்களைக்  கொண்டு வர விரும்புகிறேன். 
 ஒருவர் பின் ஒருவராக ஒவ்வொரு கவிதையாக  வாசிக்க வைக்கலாமென்றும்  தோன்றுகிறது.  
 கவிதை வாசிக்கும் நிகழ்ச்சியில் நான் கண்டு பிடித்த விஷயம்.  கவிதை வாசிப்பதைக் கேட்கச்  சிறப்பாகவே இருக்கிறது.  கவிதையை மௌனமாக வாசிக்கும்போதுதான் பெரும்பாலான கவிதைகள் நமக்கு உடன்பட மறுக்கிறது.
 இன்னொன்றும் கண்டுபிடித்தேன் எல்லோரும் கவிதைகளைச் சிறப்பாகவே வாசிக்கிறார்கள்.

Comments