அழகியசிங்கர்
வணக்கம்.
இன்றைய விருட்சம் கவிதை வாசிப்பு அரங்கத்தில் கவிஞர் க.வை பழனிசாமி, தேவதச்சன் நின்று பார்க்கும் இடம் என்ற தலைப்பில் சிறப்பாக உரை நிகழ்த்தினார். எப்படி தேவதச்சன் கவிதைகளைப் புரிந்துகொள்ள வேண்டுமென்று உதாரணங்களோடு விளக்கினார்.
பிறகு, மழையைக் குறித்து எல்லோரும் கவிதைகள் வாசித்தோம்.
இதோ நான் வாசித்த கவிதைகளை இங்கு அளிக்கிறேன்.
மழை 1
மழை ஒரு நாள் வந்தது
பூமி குளிர்ந்தது
தெருவெல்லாம் சுத்தமாச்சு
வீடுகளைக் குளிப்பாட்டியது
உயர்ந்த கட்டிடங்களைக் கழுவி
வண்டிகளை நனைத்துப் புனிதமாக்கியது
தெருவில் நடக்கும்போது
உன்னையும் என்னையும் நனைத்தது
ஆடு மாடுகளெல்லாம் நனைத்தது
ஆனால் ஒருநாள் மட்டும்தான்
பின்
எங்கோ காணாமல் போய்விட்டது
(06.11.2020)
மழை 2
மழை ஒரு விசித்திரம்
அது பெய்தாலும் சரி,
பெய்யாவிட்டாலும் சரி,
அது குறித்துப் பேசினாலும் சரி
பேசாவிட்டாலும் சரி
(06.11.2020)
Comments