அலைதலின் முற்றுகை
கோவில் மதிற்சுவர் நரகல் மணம் கூசுவதொத்த
மனம் எனது
தவறவிட்ட
பிடித்தே ஆகவேண்டிய தொடர்வண்டியை
மழையும் வெயிலும்
துரத்திக் கொண்டிருக்கிறது
மேல்நோக்கி
கீழிறங்கி
அந்தரத்தில் மிதந்து அலையும்
இறகு ஒன்றினைத் தனதாக்க
நெஞ்சு விம்ம விம்ம
கைகளை நீள.. நீள... நீட்டுகிறேன்
ஓணான் அடிக்கும் குழந்தைகளை
யதேச்சையாய்க் கடக்கிறேன்
தொப்பலென
உனதான எனக்கானத் தாய்மடியில்
தலை வைத்து சாய்ந்து கொண்டேன்
***
--ஆறுமுகம் முருகேசன்
Comments