Skip to main content

ராஜேஷ் சுப்பிரமணியன் மொழி பெயர்த்தார்...

ராஜேஷ் சுப்பிரமணியன் மொழி பெயர்த்தார்... அழகியசிங்கர்



போன ஆண்டு என் கவிதைகள் முழுவதும் சேர்த்து முழுத் தொகுதி கொண்டு வந்தேன். மொத்தம் 306 கவிதைகள். 504 பக்கங்களில் இதைக் கொண்டு வந்தேன்.
பிப்பரவரி மாதம் நான் அமெரிக்கா போய்விட்டேன். அங்குப் போய் 26 கவிதைகள் எழுதினேன். திரும்பவும் சென்னை வந்தவுடன் எந்தக் கவிதையும் இன்று வரை எழுதவில்லை.
என் நண்பர் ராஜேஷ் சுப்பிரமணியத்தைப் பார்த்து, என் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்கக முடியுமா என்று கேட்டேன். உரிய நேரத்தில் 92 கவிதைகளை மொழி பெயர்த்துள்ளார். என்னால் நம்ப முடியவில்லை. அவர் சிறப்பாகவே ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். அவருக்கு என் நன்றி. தொகுப்பின் பெயர் Shifting shadows 130 பக்கங்கள் விலை ரூ.150. 


Comments