அழகியசிங்கர்
பிம்பம்
சுரேஷ் ராஜகோபால்
வீட்டில் நிலை கண்ணாடி
அதில்தான்
தினமும் முகம் பார்ப்பேன்
ஒரு அருவருப்பான பிம்பம்தான்
தெரிந்தது
எனக்குள் ஒரு அகம்பாவம்
குற்றம் அதில்தானே என்றே
கண்ணாடியை சுத்தம் செய்தேன்
துணிகொண்டு துடைத்தேன்
மின்னியது
மறுபடி போய் நின்றேன்
பிம்பத்தில் மாற்றமில்லை
பிழை
ஆடியிலா
என்னிலா-
வியந்து நின்றேன்
நன்றி : நான் என்னைத் தேடுகிறேன் - சுரேஷ் ராஜகோபால் - பக்கங்கள் : 104 - விலை : ரூ.75 - குவிகம் பதிப்பகம் - தொலைபேசி : 9442525191 - 9791069435
Comments