சில சிறுபத்திரிகைகள்..
முன்றில்
1988 ஆம் ஆண்டிலிருந்து விருட்சம் வருகிறது. கிட்டத்தட்டச் சற்று பின்னே முன்றில் இதழும் வந்து கொண்டிருந்தது. தி.நகரலில் முன்றிலும் விருட்சம் ஒரே அச்சுக் கூடத்தில் தயாராகி வெளிவரும்.
முன்றில் பத்திரிகை ஆசிரியராக க.நா.சு, அசோகமித்திரன் வகித்து வந்தார்கள். பின்னால் ஆசிரியரி பொறுப்பை ம.அரங்கநாதன் பார்த்து வந்தார்.
தொடர்ந்த வந்து கொண்டிருந்த முன்றில் இதழ் நின்று விட்டது. இப்போது திரும்பவும் முபின் சாதிகா ஆசிரியர் பொறுப்பில் முன்றில் இதழ் வருகிறது. வேற உருவத்தில் வெளி வருகிறது.
முன்னர் வந்த முன்றில் விருட்சம் மாதிரி டெமி அளவில் வந்து கொண்டிருந்தது.
கிட்டத்தட்ட சிறுபத்திரிகைகள் கேலிக்கு உள்ளாகும் நிலையில் முன்றில் வெளிவந்திருப்பதை வாழ்த்துகிறேன். எந்தவித சார்புமில்லாமல் முபின் சாதிக்கா இந்தப் பத்திரிகையைக் கொண்டு செல்வார் என்று நினைக்கிறேன். அவருக்கு என் வாழ்த்துகள்.
இந்தப் பெயரில் ஒரு சிறுபத்திரிகையைப் பார்த்தபோது அரண்டு விட்டேன். பிரவீன் பஃறு,, கார்த்திக் பாலசுப்ரமணியன், ராஜாஜி, அரிசங்கர் ஆகியோர் ஆசிரியர்களாகக் கொண்ட பத்திரிகை. இத்தனைப் பேர்கள் ஆசிரியர்களாக இருப்பதால் கருத்து வேற்றுமையால் பத்திரிகை தொடர்ந்து வராமலிருப்பதற்கு வாய்ப்புண்டு. ஐந்து பேர்களில் ஒருவருக்கொருவர் அவர்களுக்குள்ளேயே எழுதுகிற பத்திரிகையாக இருக்கலாம் போல் தோன்றுகிறது. ரூ.40க்கு இந்த நீளமான பத்திரிகையின் விலை குறைவு. சிறுபத்திரிகையில் தீவிர பத்திரிகை ஜனரஞ்சகமான சிறுபத்திரிகை என்று பிரிக்கலாமென்று தோன்றுகிறது. இது தீவிர பத்திரிகை. விருட்சம் ஜனரஞ்சகமான சிறுபத்திரிகை.
மேலும் இரண்டு சிறுபத்திரிகைகள் பற்றி நாளை எழுதுகிறேன்.
Comments