அழகியசிங்கர்
'உயிருள்ள பத்திரிகை'
மீரா
லாரி மோதி
மாடு சாவு
மாடு முட்டிக்
கிழவி மரணம்
கணவன் மனைவியின்
கழுத்தை அறுத்தான்
மருமகன் மாமன்
மண்டையை உடைத்தான்
இவை தாம்
என் தமிழ் இனத்தை மேலே
உயர்த்த வந்த
ஒரேஉயி ருள்ள
பத்திரி கையிலே
பளிச்சிடும் செய்திகள்
நன்றி : மீரா கவிதைகள் (முழுத் தொகுப்பு) - அன்னம் மனை எண்.1 நிர்மலா நகர், தஞ்சாவூர் - 613 077 கை பேசி : 7598306036 - பக்கங்கள் : 573 - விலை : ரூ.400 முதல் பதிப்பு : 2015
Comments