அழகியசிங்கர்
70கள் ஆரம்பத்தில் அல்லது 80களில் என்று நினைக்கிறேன். தீபத்திலும கணையாழியிலும் அதிககமாகக் கவிதைகள் வெளிவந்தன. அவையெல்லாம் வேறுவிதமான கவிதைகள். புதிய வகை கவிதைகள். தீபத்தில் வானம்பாடி கவிதைகளின் போக்கை அதிகம் பார்க்கலாம். கணையாழியிலோ எழுத்து காலத்துக் கவிதைகள். அதாவது சிறுபத்திரிகைகளின் கவிதைகள்.
பலர் இரண்டு பத்திரிகைகளிலும் அறிமுகமானார்கள். அப்போது வந்து கொண்டிருந்த சிறுபத்திரிகைகள் கவிதைகளை அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தன (நடை, கசடதபற, பிரஞ்ஞை, அஃ போன்ற உதாரணங்கள்). ஆனால் தொடர்ச்சியாக சிறுபத்திரிகைகள் வரவில்லை. ஒரே காலத்திலும் வரவில்லை. ஆனால் கணையாழியும், தீபமும் வந்து கொண்டிருந்தன. மாதம் ஒரு முறை. அதனால் சிறுபத்திரிகையின் பங்கை இரண்டு பத்திரிகைகளும் ஏற்றுக் கொண்டன.
80களின்தான் கவிதைகள் முழு உருப்பெற்றன. பெரும்பாலான சிறுபத்திரிகைகளில் எழுதுபவர்கள் கணையாழியில் தொடர்ந்தார்கள்.
தீபத்தில் வானம்பாடி என்ற குழுவைச் சார்ந்தவர்கள். இரண்டு பத்திரிகைகளிலிருந்தும் இரண்டு விதமான கவிதைகளைக் காட்ட முடியும்.
முதலில் கணையாழியை எடுத்துக்கொள்வோம்.
ஆகஸ்ட் 65ல் எழுதிய கி.கஸ்தூரிரங்கன் இறைவணக்கம் என்ற பெயரில் எழுதிய கவிதையைப் பார்ப்போம்.
இறை வணக்கம்
"கடவுளும் கவர்மென்டும் ஒன்று
அதைத் தூற்றாதே; பழிசேரும்
உனக்கு. அதற்கு
ஆயிரம் கண்கள்; காதுகள்.
ஆனால் குறையென்றால்
பார்க்காது கேட்காது
கை நீளம்; பதினாயிரம்
கேட்கும், பிடுங்கும்.
தவமிருந்தால்
கொடுக்கும்.
கவர்மென்ட் பெரும் கடவுள்
அதைப் பழிக்காதே
பழித்தால்
வருவது
இன்னும்
அதிகம்
கவர்மென்ட்தான்!''
- கி. கஸ்தூரிரங்கன்
ஆகஸ்ட் 1965
தீபத்திலிருந்து ஒரு கவிதை.
சமயோஜிதம் என்ற கவிதை.
இன்று பிற்பகல்
கட்சி மாறிய
அந்த அரசியல்வாதியின்ü
பெயர்
üபலவேசம்ý
இவரைவிடப் புத்திசாலிகள்
இந்தப் பெயரை வைத்த
அவரின்
அப்பா...அம்மாக்கள்தான்.
- இளசை அருணா
இரண்டு பத்திரிகைகளில் பிரசுரமான கவிதைகளின் மாதிரிதான் கொடுத்துள்ளேன்.
நன்றாகப் படித்துப் பார்த்தால் இரண்டு பத்திரிகைகளிலும் இரண்டு விதமான கவிதைப்போக்கு வெளிப்படுத்தப்பட்டிருக்கும். கணையாழி கவிதைகள் போல் தீபத்தில் கவிதைகள் தொகுக்கப்பட்டிருக்கவில்லை. இந்தப் போக்கு இப்போது வரைக்கும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
80களில் கணையாழியில், தீபத்தில், தினமணிகதிரில் வெளிவந்த எல். ரகோத்தமனின் கவிதைகளை 'நிழல் விரட்டும் பறவைகள்' என்ற பெயரில் கவிதைத் தொகுப்பாக விருட்சம் வெளியீடாக கொண்டு வந்துள்ளேன். உதாரணத்திற்கு ஒரு கவிதையை இங்கு தருகிறேன்.
முதலில்.....
ரோஜா அழகாக இருக்கும்!
பக்கத்தில் போய் முகரலாம்!
இதழ்களைக் கிள்ளி
சுவைக்கலாம்!
கையில் முள் கிழிக்காமல்
கொய்து சூடலாம்!
நாரில் அடைத்து காசு
பண்ண லாம்! |
நீரூற்றலாம்!
தெம்பிருந்தால் உரமிடலாம்!
சொந்தம் கொண்டாட வேலி போடலாம்!
நமதென்று உரிமை கோரலாம்!
இன்னும் என்னெனன்ன பயனென்று
யோசிக்கலாம்!
அது பூப்பது முதலில் செடிக்காக
என்பதை மறந்துவிட்டு!
விருட்சம் வெளியீடாக வந்த இக்கவிதைத் தொகுப்பின் விலை ரூ.70.
Comments