Skip to main content

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - தொகுதி - 2 - 128


அழகியசிங்கர்  


தவசிக்கருப்புசாமி கவிதை




முடிந்துவைத்துக் கொடுப்பவள் மூச்சு
வருவதும் போவதுமாயிருக்கிறது
ஓலை வந்தால் நடையழியும்
அன்றுமில்லை காற்று இன்றுமில்லை குளிர்
மீறின பண்ணாட்டுக்காரி தொண்டைக்குழியிலென்ன ஆசையோ
சொத்துக்கு வழக்காடுகிறா ளென்றுச்சொல்லி
சித்திரத்தை தோண்டி அப்புறத்திலே பதிக்கும்
செல்ல மகளை தள்ளி வைத்தோம்
நெய்ப்பந்தம் பிடிப்பவர்களுக்கேது நேரம்
தலை திரும்பவொட்டாது தொடுதிரை மேய்ச்சல்
அப்பனாத்தாள் பேச்சுக்கு செவி சாய்ப்ப தென்பதொரு
அப்பட்டமான பொய் பித்தலாட்டம்
எசமான் பிழைக்கவா கன்றுகள் சூல் கொள்வது
பெயர்த்த பணத்திற்கு குதிரைகளோட வேண்டும்
மலம் ஜலம் புடை சூழ முடைக்கட்டில் கோலோச்சும்
காய்ச்சல்காரி கருவாட்டுக்கு அனத்துகிறாள்
ஊசிப்போட்டுக்கொல்லுங்க
ஊசிப்போட்டுக்கொல்லுங்க
ஒத்த நூறுருவா தாளுக்கு பழி சுமக்க
நமெக்கென்ன கேனமா?


நன்றி : அழிபசி - தவசிக்கருப்புசாமி - வெளியீடு : மணல்வீடு - ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல், மேட்டுர் வட்டம், சேலம் மாவட்டம் - 636 453 பக்கம் : 78 விலை : ரூ.80 தொலைபேசி : 09894605371

Comments