Skip to main content

Posts

Showing posts from January, 2020

நீங்களும் படிக்கலாம்...

அழகியசிங்கர் இன்றோ நாளையோ 925 பக்கங்கள் கொண்ட நாவலைப் படித்து விடுவேன். ஒரு பங்களூர் பயணத்தின்போது ஆரம்பித்தேன். பின் இன்னொரு பயணம் போது தொடர்ந்து படித்தேன்.  800 பக்கங்கள் வரை படித்து முடித்தேன்.  கிட்டத்தட்ட இன்னும் 200 பக்கங்கள் வரை படிக்க வைத்திருந்தேன். பின் புத்தகக் காட்சியை முன்னிட்டு புத்தகங்களைத் தயாரிப்பதில் மும்முரமாக என் கவனம் திரும்பியது.  ஆனால் எப்படியாவது இந்தப் புத்தகத்தைப் படித்து முடித்து விடவேண்டுமென்று தோன்றியது. இதோ இந்தப் புத்தகத்தைப் பற்றி எழுத வேண்டும்.  புத்தகத்தைப் படித்து விடலாம் ஆனால் எழுதுவது என்பது சாதாரண விஷயமல்ல.  நீங்களும் படிக்கலாம் என்ற என் முதல் புத்தகத்தை ( 20 புத்தகங்களைப் பற்றி எழுதியிருக்கிறேன்) எழுத்தாளர் அசோகமித்திரனிடம் கொடுத்தேன்.  அவர் அதைப் பார்த்துவிட்டுச் சொன்னார்.  'ஒரு புத்தகத்தைப் படித்துவிடலாம்.  ஆனால் அப் புத்தகத்தைப் பற்றி எழுதுவது சுலபமல்ல.  சமயத்தில் என்ன எழுதவேண்டுமென்று தோன்றாது,' என்றார்.  உண்மைதான்.  ஒரு புத்தகத்தைப் படித்து விட்டு என்ன எழுதுவது எ...

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - தொகுதி - 2 - 130

அழகியசிங்கர்   'உயிருள்ள பத்திரிகை' மீரா லாரி மோதி மாடு சாவு மாடு முட்டிக் கிழவி மரணம் கணவன் மனைவியின் கழுத்தை அறுத்தான் மருமகன் மாமன் மண்டையை உடைத்தான் இவை தாம் என் தமிழ் இனத்தை மேலே உயர்த்த வந்த ஒரேஉயி ருள்ள பத்திரி கையிலே பளிச்சிடும் செய்திகள் நன்றி : மீரா கவிதைகள் (முழுத் தொகுப்பு) - அன்னம் மனை எண்.1 நிர்மலா நகர், தஞ்சாவூர் - 613 077 கை பேசி : 7598306036 - பக்கங்கள் : 573 - விலை : ரூ.400  முதல் பதிப்பு : 2015 

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - தொகுதி - 2 - 129

அழகியசிங்கர்   பிம்பம் சுரேஷ் ராஜகோபால் வீட்டில் நிலை கண்ணாடி அதில்தான் தினமும் முகம் பார்ப்பேன் ஒரு அருவருப்பான பிம்பம்தான் தெரிந்தது எனக்குள் ஒரு அகம்பாவம் குற்றம் அதில்தானே என்றே கண்ணாடியை சுத்தம் செய்தேன் துணிகொண்டு துடைத்தேன் மின்னியது மறுபடி போய் நின்றேன் பிம்பத்தில் மாற்றமில்லை பிழை ஆடியிலா என்னிலா- வியந்து நின்றேன் நன்றி : நான் என்னைத் தேடுகிறேன் - சுரேஷ் ராஜகோபால் - பக்கங்கள் : 104 - விலை : ரூ.75 - குவிகம் பதிப்பகம் - தொலைபேசி : 9442525191 - 9791069435

துளி - 103 - குமுதத்திற்கு நன்றி

அழகியசிங்கர் இன்று குமுதம் பத்திரிகையில் என் நாவல் üதனி இதழ் நன்கொடை ரூ.20ý குறித்துபு(து)த்தகம் பகுதியில் குறிப்பிட்டிருந்தார்கள்.  குமுதம் ஆசிரியருக்கு நன்றி.   இந்த ஆண்டு என் இரண்டாவது நாவலைக் கொண்டு வருவதென்று பெரிய முயற்சியில் வெற்றி பெற்றுவிட்டேன்.  இந்த ஆண்டு நாவல் யுகம்போல் தோன்றுகிறது.  புத்தகக் காட்சியில் ஏகப்பட்ட நாவல்களை வாங்கியிருக்கிறேன்.   குமுதம் கீழ்க்கண்ட குறிப்பை வெளிப்படுத்தியிருக்கிறது. ‘தனி இதழ் நன்கொடை ரூ.20’  என்ற நாவலைப் பற்றி 5.2.2020 குமுதம் இதழில் குமுதம் நூலகத்தில் பு(து)த்தகம் என்ற பகுதியில் வெளிவந்த குறிப்பு.        ‘சிற்றிதழ்கள் பெருகியிருந்த காலம் மறைந்து அருகிவிட்ட இக்காலத்தில், சிற்றிதழ் ஒன்றினை நடத்தும் ஆசிரியர் முதல் அதில் எழுதுவோர், வாசகர் என அத்தனை பேரின் அத்தனை கணங்களையும் கண் முன் நிறுத்தும் நாவல்/நடையிலும் நயத்திலும்  நவீனத்துக்கு ஏற்ற நளினமான மாற்றங்களுடன் புதிய உத்தியோடு சுவாரஸ்யமான கதையாக நகர்கிறது. படிக்கப் படிக்க, நிஜமா? கற்பனையா? என்ற கேள்வி நிறைய முறை மன...

இந்திரா பார்த்தசாரதியைச் சந்தித்தேன்

அழகியசிங்கர் போன சனிக்கிழமை இலக்கியச் சிந்தனை, குவிகம் கூட்டத்திற்கு ஆழ்வார்பேட்டையில் இருக்கும் அம்புஜம்பாள் தெருவிற்குச் சென்றேன்.  நான் ஐந்தரை மணிக்கே அங்குச் சென்றுவிட்டேன்.  இந்திரா பார்த்தசாரதியைப் பார்க்க வேண்டுமென்றுதான்.   சமீபத்தில் கடுமையான அறுவை சிகிச்சை செய்துகொண்டு ஓய்வில் இருக்கிறார் இந்திரா பார்த்தசாரதி.  நான் அவர் வீட்டின் முன் நுழைவதற்கு வண்டியை வைத்துவிட்டுத் திரும்பினேன்.  என்னை கல்கி  பொறுப்பாசிரியர்  (அவர் மனைவியுடன் வந்திருந்தார்) ரமணன் கூப்பிட்டார்.   "கூட்டம் ஐந்து மணிக்கென்று போட்டிருக்கிறார்கள்.  யாரும் வரவில்லையே?" "இல்லை ஆறுமணிக்குத்தான் கூட்டம்.  தவறுதலாகக் குறிப்பிட்டிருப்பார்கள்.  நான் இந்திரா பார்த்தசாரதியைப் பார்க்கப் போகிறேன்," என்றேன். இ.பாவைப் பார்க்க கல்கி ஆசிரியரும் என்னுடன் சேர்ந்து கொண்டார்.  இ.பா வீட்டு வாசலில் காலிங்பெல்லை அழுத்தியவுடன், இ.பாவே கதவைத் திறந்தார்.  கொஞ்சம் பலவீனமாகப் பார்க்கத் தென்பட்டாலும், ஆரோக்கியமாகவே இருக்கிறார்.  அவருக...

துளி - 101 - ஒரு புகைப்படம் கிடைத்தது

அழகியசிங்கர் புத்தகக் காட்சியை ஒட்டி நான் ஸ்டீல் ராக்கில் உள்ள புத்தகங்களைச் சாக்கு மூட்டைகளில் கட்டிவிடுவேன்.  இது மாதிரி 20 சாக்கு மூட்டைகள் இருக்கும்.  புத்தகக் காட்சிக்கு ஸ்டீல் ராக்குகளை எடுத்துக்கொண்டு போவேன். திரும்பவும் புத்தகக் காட்சி முடிந்தவுடன் ஸ்டீல் ராக்குகளை  கொண்டு வந்து எல்லாப் புத்தகங்களையும் சாக்கு மூட்டைகளிலிருந்து எடுத்து அடுக்குவேன்.  அப்போது எல்லாம் புத்தகங்களும் இடம் மாறிவிடும்.  முன்பு கவிதைகள் இருந்த ஸ்டீல் ராக்கில் ஆங்கிலப் புத்தகங்களை அடுக்கி வைத்திருப்பேன்.   தினமும் ஒரு மணி நேரம் இரண்டு மணி நேரங்களைத்தான் ஒதுக்குவேன்.  அதற்குமேல் அதில் ஈடுபட முடியாது.  எனக்கு உதவி செய்ய ஒரு இலக்கிய நண்பரும் வருகிறார்.   இன்று மாலை கவிதைப் புத்தகங்களாக மூட்டையிலிருந்து எடுத்துக் கொண்டிருந்தேன்.  அப்போது ஒரு புத்தகத்திலிருந்து ஒரு புகைப்படம் கிடைத்தது. யாரோ எனக்குக் கொடுத்திருக்கிறார்கள்.  யார் கொடுத்தார்கள்?  எப்போது கொடுத்தார்கள் என்றெல்லாம் நினைவில்லை.  ஆனால் நண்பர்களுடன் அந்தப் பு...

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - தொகுதி - 2 - 128

அழகியசிங்கர்   தவசிக்கருப்புசாமி கவிதை முடிந்துவைத்துக் கொடுப்பவள் மூச்சு வருவதும் போவதுமாயிருக்கிறது ஓலை வந்தால் நடையழியும் அன்றுமில்லை காற்று இன்றுமில்லை குளிர் மீறின பண்ணாட்டுக்காரி தொண்டைக்குழியிலென்ன ஆசையோ சொத்துக்கு வழக்காடுகிறா ளென்றுச்சொல்லி சித்திரத்தை தோண்டி அப்புறத்திலே பதிக்கும் செல்ல மகளை தள்ளி வைத்தோம் நெய்ப்பந்தம் பிடிப்பவர்களுக்கேது நேரம் தலை திரும்பவொட்டாது தொடுதிரை மேய்ச்சல் அப்பனாத்தாள் பேச்சுக்கு செவி சாய்ப்ப தென்பதொரு அப்பட்டமான பொய் பித்தலாட்டம் எசமான் பிழைக்கவா கன்றுகள் சூல் கொள்வது பெயர்த்த பணத்திற்கு குதிரைகளோட வேண்டும் மலம் ஜலம் புடை சூழ முடைக்கட்டில் கோலோச்சும் காய்ச்சல்காரி கருவாட்டுக்கு அனத்துகிறாள் ஊசிப்போட்டுக்கொல்லுங்க ஊசிப்போட்டுக்கொல்லுங்க ஒத்த நூறுருவா தாளுக்கு பழி சுமக்க நமெக்கென்ன கேனமா? நன்றி : அழிபசி - தவசிக்கருப்புசாமி - வெளியீடு : மணல்வீடு - ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல், மேட்டுர் வட்டம், சேலம் மாவட்டம் - 636 453 பக்கம் : 78 விலை : ரூ.80 தொலைபேசி : 09894605371

காந்தி - நேற்றும் இன்றும் ஒளிப்பதிவு 1,2,3

காந்தி - நேற்றும் இன்றும் ஒளிப்பதிவு 1,2,3 அழகியசிங்கர் இன்று குடியரசு தினம் காந்தி - நேற்றும் இன்றும் என்ற தலைப்பில் ம.நித்தியானந்தம் 24.01.2020 (வெள்ளியன்று) உரை நிகழ்த்தினார் விருட்சம் சார்பாக. அந்த உரையின் ஒளிப்பதிவை இங்கு அளிக்கிறேன்.

விருட்சம் புத்தகக் காட்சி கூட்டம் - 8

அழகியசிங்கர் 17.01.2020 அன்று ராஜேஷ் சுப்பிரமணிய்ன் அவர்கள் அழகியசிங்கரின் நாவலான 'தனி இதழ் நன்கொடை' என்ற புத்தகம் குறித்து உரையாடிய ஒளிப்பதிவு

புத்தகக் காட்சியை முன்னிட்டு தாறுமாறான கவிதைகள்

அழகியசிங்கர் 1. புத்தகக் காட்சி ஓய்ந்து விட்டது இன்னும் ஓயவில்லை மனதிலிருந்து 2. தனி இதழ் நன்கொடை விலை ரூ.20 என் நாவலின் பெயர் விலை ரூ.20 தா என்று கேட்கிறார்கள் 3. எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு வந்து விட்டேன் வீடு முழுக்க புத்தகங்கள் 4. நண்பர்கள் வந்தார்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள் பின் சிரித்தபடியே சென்று விட்டார்கள் 5. எல்லாரும் வந்தார்கள் எல்லாம் சரிதான் ஆனால் நான் நினைத்தபடி புத்தகங்கள் வாங்கவில்லை 6 புத்தகக் காட்சியில் சில இடங்களைத் தவிர்க்க நினைத்தேன் ஆனால் முடியவில்லை யூரின் போகுமிடத்தையும் சாப்பாடு கூடத்தையும் 7. இந்தப் புத்தகக் காட்சியில் நாவல்களாக வாங்கிக் குவித்தேன் என்னன்ன நாவல்கள் என்று கேட்டார்கள் நான் சொல்லவில்லை 8. புத்தகங்களை வாங்கியாயிற்று எப்போது என்று கேட்கிறார்கள் அது எப்போதும் குழப்பம்தான் 9. வந்தார்கள் வென்றார்கள் சென்றார்கள் 10. பொன்னியின் செல்வன் வத்தியதேவன் குதிரையேறி எல்லாக் கடைகளிலும் இருக்கிறான்  

விருட்சம் நடத்திய புத்தகக் காட்சி கூட்டம் - 6

அழகியசிங்கர் 15.01.2020 அன்று மந்திர மூர்த்தி அவர்கள் மருத்தவர் பாஸ்கரின் கடைசி பக்கம் என்ற நூலினை விருட்சம் இலக்கிய அன்பர்களுக்கு அறிமுகப்படுத்துகிறார்.

சில சிறுபத்திரிகைகள்.. 2

அழகியசிங்கர் காக்கைச் சிறகினிலே காக்கைச் சிறகினிலே நூறாவது இதழ் வெளிவந்துள்ளது. 144 பக்கங்கள். ரூ.25 தான்.  ஒருவர் கட்டாயம் வாங்கி வைத்துக்கொள்ள வேண்டிய இதழ்.  ஒரு விளம்பரமில்லாமல் அதிகப் பக்கங்களுடன் எப்படி இதழைக் கொண்டு வந்துள்ளார்கள் என்ற ஆச்சரியம் இல்லாமலில்லை.  பழைய காக்கைச் சிறகினிலே இதழ் பிரதிகள் என் நூலகத்தில் உண்டு.   வி முத்தையா ஆசிரியர் பொறுப்பில் உள்ளார்.  ஆசிரியர் குழுவில் இரா.எட்வின், முகிலன், அமரந்த்தா, கசன் உள்ளார்கள்.  இது ஒரு இலக்கிய மாத இதழ். புத்தகக் காட்சி முடிந்தவுடன் நிதானமாக வாசிக்க வேண்டுமென்று நினைக்கிறேன். சிறுபத்திரிகை இந்தப் பெயரில் இது இரண்டாவது இதழ் பயணி கொண்டு வந்துள்ளார்.  இந்த இதழ் எனக்கு வந்தபோது நான் அசந்து போய்விட்டேன்.  இதிலும் விளம்பரமில்லை.  பத்திரிகை நடுவில் வண்ண ஓவியங்கள்.  இதன் விலை ரூ.150.  இப்படி சாத்தியமில்லாததைச் சாதிப்பதுதான் சிறுபத்திரைகயில் பங்கெடுப்பவர்கள் வழக்கம். இதில் பயணி ஒரு நீண்ட தலையங்க உரை எழுதியிருக்கிறார். நிதானமாக வாசிக்க வேண்டிய பத்திரிக...

சில சிறுபத்திரிகைகள்..

சில சிறுபத்திரிகைகள்.. அழகியசிங்கர் முன்றில் 1988 ஆம் ஆண்டிலிருந்து விருட்சம் வருகிறது. கிட்டத்தட்டச் சற்று பின்னே முன்றில் இதழும் வந்து கொண்டிருந்தது. தி.நகரலில் முன்றிலும் விருட்சம் ஒரே அச்சுக் கூடத்தில் தயாராகி வெளிவரும். முன்றில் பத்திரிகை ஆசிரியராக க.நா.சு, அசோகமித்திரன் வகித்து வந்தார்கள். பின்னால் ஆசிரியரி பொறுப்பை ம.அரங்கநாதன் பார்த்து வந்தார். தொடர்ந்த வந்து கொண்டிருந்த முன்றில் இதழ் நின்று விட்டது. இப்போது திரும்பவும் முபின் சாதிகா ஆசிரியர் பொறுப்பில் முன்றில் இதழ் வருகிறது. வேற உருவத்தில் வெளி வருகிறது. முன்னர் வந்த முன்றில் விருட்சம் மாதிரி டெமி அளவில் வந்து கொண்டிருந்தது. கிட்டத்தட்ட சிறுபத்திரிகைகள் கேலிக்கு உள்ளாகும் நிலையில் முன்றில் வெளிவந்திருப்பதை வாழ்த்துகிறேன். எந்தவித சார்புமில்லாமல் முபின் சாதிக்கா இந்தப் பத்திரிகையைக் கொண்டு செல்வார் என்று நினைக்கிறேன். அவருக்கு என் வாழ்த்துகள் . பேபல் இந்தப் பெயரில் ஒரு சிறுபத்திரிகையைப் பார்த்தபோது அரண்டு விட்டேன். ப...

புத்தகக் காட்சி நினைவுகள் 7

அழகியசிங்கர் 2019 ஆம் ஆண்டு இறுதியிலும், 2020 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ் நாவல்களை வாங்கிக் கொண்டிருக்கிறேன். ஏற்கனவே கொடுத்த லிஸ்டில் இன்னும் சில நாவல்களையும் ரேச்க்கிறேன். இதுவரை 9 நாவல்களை நான் சேர்த்துள்ளேன். தமிழவனின் 'ஷம்பாலா', சோ.தர்மனின் 'பதிமூனாவது மையவாடி'', பா ராகவனின் 'புல்புல்தாரா', 'இறவான்.' நான் இப்போது கொடுக்கும் லிஸ்ட் தீர்ந்து விடும் என்று சொல்ல வரவில்லை. என் கணக்கில் இதுவரை 9 நாவல்களை வாங்கிவிட்டேன். இன்னும் என்னன்ன நாவல்களை வாங்குவேன் என்பதை என்னால் தீர்மானிக்க முடியவில்லை. வாங்கும் எல்லா நாவல்களையும் படித்து அலசி ஒரு புத்தகம் எழுதுவதாக உள்ளேன். இதற்கு அசிக்காடு மதுர காளி எனக்குத் தைரியம் கொடுக்கட்டும்.

புத்தகக் காட்சி கூட்டம் - 2 - ஒளிப்பதிவு 3

புத்தகக் காட்சி கூட்டம் - 2 - ஒளிப்பதிவு 3 அழகியசிங்கர் ஆதிரா முல்லை 11.01.2020 எல் ரகோத்தமன்   கவிதைத் தொகுதி நிழல் விரட்டும் பறவைகள் குறித்து ஆற்றிய உரை.

நான்கு புதிய புத்தகங்கள் சலுகை விலையில்

அழகியசிங்கர் சமீபத்தில் 11 புத்தகங்கள் விருட்சம் வெளியீடாகக் கொண்டு வந்தேன் புத்தகக் கண்காட்சியை ஒட்டி.  அதில் 5 புத்தகங்கள் நான் எழுதிய புத்தகங்கள்.  நான்கு புத்தகங்களை 20 சதவீதம் தள்ளுபடி செய்து விற்க விரும்புகிறேன்.  விருட்சம் ஸ்டால் 430க்கு வந்திருந்து வாங்கவும். 1. தனி இதழ் நன்கொடை ரூ.20  2. துளிகள் 1 3. வாசிக்க வாசிக்க 1 4. இன்னும் காலியாக இருக்கின்றன நாற்காலிகள்

புத்தகக் காட்சி நினைவுகள் 5

அழகியசிங்கர் நாம் எல்லோரும் பல அவதாரங்கள் எடுத்துக்கொள்கிறோம்.  சிலர் அதில் வெற்றியும் பெறுகிறார்கள்.  சிலர் தோல்வியும் அடைகிறார்கள்.  புத்தக விற்பனையாளனாக இருந்தால் புத்தக விற்பனையாளனாக மட்டும் இருக்க வேண்டும்.  ஒவ்வொரு புத்தகத்தையும் எப்படி விற்க வேண்டுமென்றுதான் யோசிக்க வேண்டும்.  விற்பனையாளனாக மட்டும் இல்லாமல் பதிப்பாளராகவும் இருந்தால் எப்படிப் புத்தகத்தைப் படித்து விற்க முடியும் என்று யோசிக்க வேண்டும்.  விற்பனை சந்தையில் எதுமாதிரிôன புத்தகங்கள் போகின்றன.  எப்படித் தயாரித்து விற்க வேண்டுமென்று யோசிக்க வேண்டும். ஒருவன் புத்தக விற்பனையாளனாகவும் பதிப்பாளனாகவும் இருக்கலாம். மோசமில்லை.  இன்னொரு அவதாரம் எடுப்பது மோசமானது.  அதாவது எழுதுபவனாக இருப்பது.  எல்லாம் ஒரே அவதாரமாக இருப்பது.   நண்பருடன் பூங்காவில் நடைப்பயிற்சி செய்து கொண்டிருப்பேன்.  எதாவது பேசிக்கொண்டிருக்கும் போது நானும்தான் எழுதியிருக்கிறேன் என்று கூறிவிடுவேன்.  என்னது நான் என்று சொல்கிறீர்கள் அந்த நானை விட முடியாதா என்பார்.  சர...

துளி - 94- புத்தகக் காட்சி நினைவுகள் 4

அழகியசிங்கர் ஒரு போன் வந்தது.  புத்தகக் காட்சி எப்படிப் போய்க் கொண்டிருக்கிறது என்று கேட்டு.  என் பதில். என் கடை முன்னால் இந்தப் பக்கமாகவும் அந்தப் பக்கமாகவும் எல்லோரும் போய்க் கொண்டிருக்கிறார்கள் என்றேன்.  ஒரு விதத்தில் இது சரிதான்.  எல்லோரும்  என் கடைக்குள் வந்தால் தடுமாறிப்போய்விடுவேன்.  அப்படியெல்லாம் ஒன்றும் நடக்காது.   ஒரு புத்தகக் காட்சியை நடத்துவது சிரமம்.  அதை விடச் சிரமம் புத்தகக் கடையில் புத்தகங்களை விற்பது.   கடைக்குள் வருபவர்களை இந்தப் புத்தகம் வாங்க வேண்டுமென்று கட்டளை இட முடியாது. கட்டாயப் படுத்தவும் முடியாது. விருட்சம் அரங்கிற்கு ஒருமுறை உதவி செய்யப் புத்தகம் வெளியிடுபவரே வந்தார். அவர் இளைஞர். மிகக் குறைவாகவே புத்தகங்களைக் கொண்டு வந்திருந்தார்.  அவர் புத்தகங்கள் குறித்து அவருக்குப் பெருமை அதிகம்.  ஆனால் அவரால் தனியாக அரங்கம் எடுத்துப் புத்தகம் விற்க முடியாது.   என் கடையைப் பார்த்துக்கொள்ளும் பணிக்காகத் தினமும் அவருக்கு ஒரு தொகையைக் கொடுப்பேன்.  அப்படிப் பார்த்துக்கொண்டிருந்தவர் ...

துளி - 93- புத்தகக் காட்சி நினைவுகள் 3

அழகியசிங்கர் பொதுவாகப் புத்தகக் காட்சி உரிய நேரத்திற்கு நான் வர முடியாது.  நேற்று கூட்டம் 12 மணிக்குக் கூட்டம் ஆரம்பிக்கிறது என்று போனேன்.  பிறகுதான் தெரிந்தது பதினொரு மணிக்கே. புத்தகக் காட்சியில்தான் பல நண்பர்களைப் பார்த்து உரையாடமுடியும்.  புத்தகக் காட்சியில் பரிதாபத்துக்குரியவர்கள் கவிஞர்கள்.   என்ன தலைகீழாக நடந்தாலும் கவிதைப் புத்தகம் விற்பது என்பது நடக்காது.  பலர் கவிதைப் புத்தகங்களை விசிட்டிங் கார்டு போல கொடுத்துவிடலாமென்று கேவலப் படுத்துவார்கள்.  அதுமாதிரியெல்லாம் கொடுக்கக் கூடாது என்று எனக்குத் தோன்றும். கவிதைப் புத்தகம் கொண்டு வருபவர்களை நான் எச்சரிக்கை செய்வது வழக்கம்.  இப்போது உள்ள சூழலில் கவிதைப் புத்தகத்தைக் குறைவாக அச்சிட்டு வைத்து கொள்ளலாமென்று தோன்றுகிறது. நான் ஞானக்கூத்தனின் இம்பர் உலகம் (அவர் சொல்லி) கவிதைத் தொகுதி கொண்டு வந்தபோது 50 பிரதிகள்தான் விற்க முடிந்தது.  நானும் அதிகமாக அடிக்க வில்லை.  அசோகமித்திரனின் அந்தரங்கமானதொரு தொகுப்பு 100 பிரதிகள்தான் அடித்திருந்தேன். 100 கவிஞார்களின் கவி...

புத்தகக் காட்சி நினைவுகள் 2

அழகியசிங்கர் புத்தகக் காட்சி ஜனவரி மாதம் நடப்பதுதான் சரி.  வங்கியில் பணிபுரியும் போது பொங்கல் திருவிழாவை ஒட்டி பணம் முன்னதாகக் கொடுப்பார்கள்.  பின் ஓராண்டிற்கான மருத்துவ சலுகைக்கான தொகையும் பெற முடியும். இந்தத் தொகையை வைத்துக்கொண்டு ஒவ்வொரு ஆண்டும் எதாவது புத்தகம் கொண்டு வருவதும்,  நடக்கும் புத்தகக்காட்சிக்கு வாடகை தருவதுமாக இருப்பேன். ஓராண்டில் இரண்டு அல்லது மூன்று புத்தகங்கள்தான் கொண்டு வர முடியும்.  பல ஆண்டுகள் நான் இப்படித்தான் புத்தகங்களைத் தயாரித்துக் கொண்டிருந்தேன்.  விருட்சம் இதழையும் நான்கு இதழ்கள் கொண்டு வந்து விடுவேன். சிலசமயம் 3 இதழ்களாகப் போய்விடும்.  நான் முதலில் கொண்டு வந்தது கவிதைப் புத்தகம்.  10 ஆண்டுகள் மேல் ஆயிற்று அதை விற்பதற்குள்.  பெரும்பாலும் இலவசமாகக் கொடுத்தேன்.  என்னுடைய கவிதைத் தொகுதி இல்லை. சில எழுத்தாளர்களுடன் கூட்டுச் சேர்ந்து புத்தகங்களைக் கொண்டு வருவேன்.  என் கவிதைப் புத்தகங்கள் நன்றாக விற்று உள்ளன.  'தொலையாத தூர' மாகட்டும், 'யாருடனும் இல்லை' ஆகட்டும். என் புத்தகங்கள் கவி...

ஸ்ரீதர் - சாமா தொகுத்த காஞ்சி மகா ஸ்வாமிகளின் உபதேசங்கள் குறித்து மீ.விஸ்வநாதனின் அறிமுக உரை

அழகியசிங்கர் 10.01.2020 அன்று புத்தகக் காட்சியில் விருட்சம் அரங்கத்தில் மாலை 6 மணிக்கு நடந்த கூட்டத்தில் ஸ்ரீதர்-சாமா தொகுத்த காஞ்சி மகா ஸ்வாமிகளின் உபúதெங்கள் என்ற தொகுப்பைக் குறித்து கவிஞர் மீ.விஸ்வநாதன் ஆற்றிய உரை.