Skip to main content

நீங்களும் படிக்கலாம் - 43



பாதுகாக்க வேண்டிய புத்தகம்


அழகியசிங்கர்



சில புத்தகங்கள் மூலம் நாம் சிலவற்றை அறிந்து கொள்கிறோம்.  சில புத்தகங்கள் மூலம் நாம் புத்தக ஆசிரியருக்கு அறிவுரை வழங்கலாம் என்று நினைக்கிறோம்.  இன்னும் சில புத்தகங்களுக்கு நாம் அறிவுரையும் கூற முடியாது. படிக்காமலும் விட்டுவிடவும் தோன்றும்.
üமறுதுறை மூட்டம்ý என்கிற நாகார்ஜ÷னன் புத்தகத்தை திரும்பத் திரும்ப வாசித்துக் கொண்டிருக்கிறேன்.  சரி அது ஒரு கதைப் புத்தகமா?  இல்லவே இல்லை.  
அது ஒரு நேர்காணல் புத்தகம்.  அதில் கூறப்பட்ட பல்வேறு தகவல்கள்தான் என்னை ரொம்பவும் யோசிக்க வைக்கிறது.  
இப் புத்தகத்தில் நான் பல இடங்களில்  கோடுகள் போட்டுக் குறிப்பெடுத்து வைத்திருக்கிறேன்.  
நான் இப் புத்தகத்தில் கோடு போட்ட பகுதியிலிருந்து எதாவது சொல்ல முடியுமா என்று பார்க்கிறேன்.
ஐந்தாம் பக்கத்தில் அவர் பேட்டியில் அவர் சொல்ற விஷயம்.
'உலகெங்கும் ஜாதி மத இன - தேசிய அடையாளங்களை, பாகுபாடுகளைத் தாண்டி நான் சம்பாதித்த  நண்பர்கள்தான் இருக்காங்க.' 
ஆனா இந்த நண்பர்களுடன் அவருக்கு நேரடித் தொடர்பும் இல்லை. 
பக்கம் 21ல் கூறியுள்ளதை இங்குக் குறிப்பிட விரும்புகிறேன்.
'இசையின் உலக விழைவைத் தாண்டி இந்த ம்யூஸிக் அக்காதெமி நிறுவனமும் சரி, தென் சென்னையில் புற்றீசல் போலப் பெருகிய சபா அமைப்புகüளம் சரி, முற்றிலும் உயர்வர்க்க ஜாதி  அதாவது பிராமண மயமாக இருப்பது எனக்கு எப்போதோ பெரும் அலர்ஜியாகிவிட்டது.'

பக்கம் 40ல்

'தொழில்நுட்பத்தின் போக்கு மாறுவதில் விநோதமுண்டு என்றாலும் அதைக் கணித்துவிடலாம்.  ஆனால் வரலாற்றில் வெகுமக்கள் பங்கெடுக்கும் விநோதத்தைக் கணிக்க இயலாது  என்கிற பிரமாதமான கண்ணோட்டத்தை ஸத்யஜித் ராய் முன் வைப்பதாக இதைப் புரிந்துகொள்ள முடியும்.'

பக்கம் 47ல் ஜெர்மன் தத்துவ அறிஞர் ஷேர்ப்பன்ஹவர் கூறுவதை கூறுகிறார் :
அதாவது வாழ்வின் உச்சத்தை, உட்பொருளின் ஆழத்தை அதன் எதார்த்தத்தை, எதார்த்தத்தின் வலியைப் பிரதிபலிக்கும் அவசியமின்றி அதைத் தொட்டுக் காட்டிச் சென்றுவிடுவது இசை என்பது ஷேர்ப்பன்ஹவ முக்கிய அறிவிப்பு. 
இந்த இடத்தில் உணர்தல் என்பதை ஒருவித அறிவாக மாற்றும் ரஸவாதத்தை நிகழ்த்துகிறார் நிட்ஷே.

பக்கம் 59ல்

ஆனால் கலையில் ஈடுபட்டாலே அறிவு வேண்டாம் என எண்ணி அப்படிச் செய்வோரையும் தடுக்கப் பார்க்கும் ஒரு வித 
ப்ன்ம்ல்ங்ய் மனோநிலையைத் தாண்டுவது எளிதல்ல என்றாகிவிட்டது இன்று.  சரகடித்து ஒரு கவிதை நூல் போட்டு, காப்பியடித்த கட்டுரையைத் தன் பெயரில் போட்டுக்கொண்டு மசாலாப் பத்திரிகையில் பரபரப்பாகப் பணிபுரிந்து அதன் வழி ஸினிமாவுக்குச் செல்ல முடியுமென விழையும் ஒருவர், ஸ்ட்ரக்சரலிஸத்தை முதலில் வரவேற்று, பிறகு கோட்பாட்டு விழைவையே கரித்துக்கொட்டத் தமக்கு உரிமையுண்டு என் நினைக்கும் உலகம்தான், அதற்கான பிதாமகர்களைத் தேடும் உலகம்தான், தற்போதைய தமிழ் இலக்கிய உலகம்.

பக்கம் 134ல்

அறிவியலுக்கும் கலைக்கும் இருக்கும் பாலமாக அமைப்பியலை நான் பார்க்கிறேன்.    அறிவியலுக்கும் கலைக்கும் இடையிலான பாலம்தான் என் வாழ்வும் சிந்தனையும்.  நான் அறிவியல் படித்து தத்துவத்துக்கு வந்தேன்.  இலக்கியத்தைப் படித்தும் தத்துவத்துக்கு வந்தேன்.  அவற்றை இணைக்கும் பாதையாக அமைப்பியல் இருப்பதைப் பார்த்தேன்.

பக்கம் 154ல்

கதைசொல்லி என்றால் பிரதியில் மறைந்திருக்கும் பெயரற்ற கதையாளி என அமைப்பியல் ஆய்வு கூறும் பொருளை விட்டுவிட்டு, அவர் கதையை எழுதும் அல்லது சொல்லும் நபர் என்று தமிழின் படப்பாளிகள் உள்ளிட்ட பலரும் கருதிக்கொண்டு எழுதுவது போலத்தான் இதுவும்.

பக்கம் 155ல்

லெவிஸ்ட்ரௌஸ் போன்ற ஒருவரை கற்கத் தேவையான தன்னடக்கமும் ஆர்வமும் தமிழில் எழுதுவோருக்கு எப்போதுதான் வருமோ என்ற ஆயாசம்தான் எனக்கு வருகிறது..

பக்கம் 169ல் தெர்ரிதாவைப் பற்றி இப்படிக் கூறுகிறார் :

தெர்ரிதாவை வாசிக்க கடுமையா உழைப்பு மிக மிக அவசியம்.  அதாவது ஒருபுறம் தத்துவ - உரைமரபைக் கலை-இலக்கியமாகவும் கலை-இலக்கியத்தை, அதன் வரலாற்றை தத்துவக் கேள்விகளாகவும் மாற்றிப் பிரச்சினைப்படுத்தி பழக்கிக்கொள்ள வேண்டும்.

பக்கம் 187ல்

போத்ரியாரின் நூல்கள் மட்டுமே தத்துவம் என்ற நிலையை எய்தி என் உணர்வையும் அறிவையும் பிரிக்காத நிலையில் பல இரவுகள் என்னை உந்திச் செல்வனவாக அமையும்.  தவிர ஊடக - உலகில் ஏதோ ஓர் நிகழ்வு தாறுமாறான நிலைக்குச் சென்று படிப்படியாக ஒரு; உச்சத்தை அடையும்போது போத்ரியாரின் நூல்கதளில் உள்ள செய்தி அதன் விளக்கமாக உருமாறி என் எதிரே அதிரடியாக வந்து நிற்கும்.

திரும்பவும் பக்கம் 195ல்

நிதானத்தையே பிரபல்யமற்ற ஹய்ர்ய்ஹ்ம்ண்ற்ஹ்யையே என் மனமும் உடலும் நாடுகின்றன. வீட்டின் அருகில் மீளச்சல் ஆறு, முருகன் கோவில், தாழத்தங்காடி மஸøதி, புனிதர் அல்ஃபோன்ஸ் அம்மாவின் பிறந்த இடம். இங்காவது யாரும் வந்து என்னைத் துரத்த வேண்டாம் என்றும் தோன்றுகிறது.


நாகார்ஜ÷னனின் இந்தப் புத்தகத்தை ஒருவர் திரும்பத் திரும்ப வாசிக்க வேண்டும்.   புத்தத்தில் குறிப்பிட்ட பல எழுத்தாளர்களைப் பற்றியும் அறிந்துகொள்ள முயற்சி செய்ய வேண்டும்.


மறுதுறை மூட்டம் - நாகார்ஜ÷னன் நேர்காணல் - கலைஞன் பதிப்பகம் - மொத்தப் பக்கங்கள் : 240 - விலை : ரூ. 180.

Comments