Skip to main content

திருக்குறள் சிந்தனை 18

திருக்குறள் சிந்தனை 18


அழகியசிங்கர்





காலையில் எழுந்தவுடன் மடிப்பாக்கம் சென்று விட்டேன்.  பெண் வீட்டிற்கு.  திருக்குறள் இன்று காலையில் படிக்கவில்லை.  இதோ இப்போதுதான் திருக்குறளை வைத்துக்கொண்டு படிக்கிறேன்.  மணி  மாலை 7.30 ஆகிவிட்டது.  -ஒரு கேள்வி என்னுள் எழுந்தது.  திருக்குறள் என்னைப் படிக்கிறதா? நான் திருக்குறளைப் படிக்கிறேனா என்று. 18வது குறள் இப்படிப் போகிறது.

சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு

வானம் வறண்டு மழை பெய்யாவிட்டால் சிறப்பாக வானோர்க்குச் செய்யும் பூசைகளும் நின்றுவிடும் என்கிறார் வள்ளுவர். 
நானும் மழையைப் பற்றி அதிகமாகக் கவிதைகள் எழுதியிருக்கிறேன். மழை 1, மழை 2, மழை 3 என்றெல்லாம் எழுதியிருக்கிறேன்.  இதில் மழை 1 என்ற கவிதையை மட்டும் இங்கு கொடுக்க விரும்புகிறேன்.

மழை பெய்தது
தெரு நனைந்து மிதக்க
இரண்டு பூனைக்குட்டிகள்
இடுக்கில்
குளிருக்குப் பயந்து
தாய் மடியில் பதுங்க
தாய்ப்பூனை
குட்டிகளைப் பற்றி யோசனையில்
கீழே 
அப்பா
பாட்டி
தம்பி மூவரும் டிவியில்
துருப்பிடித்த சைக்கிளை
எடுத்தேன்
மழை விட்டிருந்தது
என் குழந்தைகளைப் பார்க்க....
(அழகியசிங்கர் கவிதைகள்)





Comments