அழகியசிங்கர்
திருக்குறளை எடுத்துத் திரும்பவும் படிக்கும்போது அது வேற உலகத்திற்குள் நம்மை கொண்டு சென்று விடும் என்பது உண்மை. இப்போது 23வது குறளைப் பார்க்கலாம்.
இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு.
இங்கே வள்ளுவர் பெருமை பிறங்கிற்று உலகு என்ற வரியைப் பயன்படுத்துகிறார். பிறங்கிற்று என்று படிப்பதற்கே நன்றாக இருக்கிறது.
ஈண்டு அறம் பூண்டவர் யார்? அந்தத் தகுதி நம்மில் யாருக்கெல்லாம் இருக்கிறது. அப்படியெல்லாம் உள்ளவர்கள் இந்த உலகத்தில் இருக்கிறார்களா? காண முடியுமா? என்ற கேள்விகள் எழுகின்றன.
இருமை வகைதெரிந்து என்பதை நாமக்கல் கவிஞர் பிறப்பு இறப்பு என்ற இரண்டு தத்துவங்கள் என்கிறார். ஆனால் நாவலரோ இயற்கையாக உள்ள நன்மை தீமை என்ற இரண்டு பாகுபாடுகள் என்கிறார்.
பிறப்பு இறப்பு என்கிற தத்துவத்தை உணர்ந்து அல்லது நண்மை தீமை என்ற இரண்டு பாகுபாடுகளை உணர்ந்து தர்ம வாழ்க்கை நடத்தும் மகான்காளல்தான் இந்த உலகம் சிறப்படைகிறது.
நம்மில் சிலர்தான் மேலே குறிப்பிடுகிற மகான்களாக இருக்க வாய்ப்பு உண்டு என்று தோன்றுகிறது.
நான் பெரும்பாலும் உதாரணம் கொடுக்கும் நவீன கவிதைகள் ஒரு சமயம் மேலே குறிப்பிடப்பட்டுள்ள திருக்குறளுக்குப் பொருத்தமில்லாமல் போகலாம். ஆனால் கொஞ்சமாவது பொருந்துகிறதா என்று பார்க்க வேண்டும். மேலே குறிப்பிட்ட திருக்குறளுக்கு சரியான நவீன கவிதை தென்படவில்லை.
Comments