Skip to main content

ழ கவிதைகள்






ழ என்ற சிற்றேடு ஆத்மாநாம் மூலம் 1978 ஆம் ஆண்டு உருவானது.  அவருக்கு பக்கபலமாக ஞானக்கூத்தன், ஆர்.ராஜகோபாலன், ஆனந்த், காளி-தாஸ் போன்ற பல நண்பர்கள் செயல்பட்டார்கள். ழ ஒரு சிற்றேடு.  மிகக் குறைவான பேர்களே வாசித்திருப்பார்கள். 

1978 லிருந்து 10 ஆண்டுகள் செயல்பட்ட ழ பத்திரிகை, ஆத்மாநாமின் தற்கொலையால் கிட்டத்தட்ட நின்றுவிட்டது. தமிழ் கவிதைக்கு ஒரு மாற்றத்தை எளிய வழியில் ஏற்படுத்திக் கொடுத்தது. இக் கவிதைகளைப் படிக்கும்போது கவிதை எழுதுவதற்கான ஒருவித ஒழுக்கத்தை பலரும் கற்றுக்கொள்ள முடியும்.

அப் பத்திரிகையில் வெளிவந்த கவிதைகள் முக்கிமானவை.  கவிதை எழுத வேண்டுமென்கிற எண்ணம் உடையவர்கள், ழ வில் வெளிவந்த கவிதைகளை பயிற்சிக்காக எடுத்துக்கொள்ள வேண்டும்.  நவீன விருட்சம் பத்திரிகைக்குக் கூட ழ ஒரு முன்னுதாரணம். ழ வில் வெளிவந்த கவிதைகளை கொஞ்சம் கொஞ்சமாக உங்களுக்கு அறிமுகப் படுத்த நினைக்கிறேன். 


ழ 5வது இதழ்

டிசம்பர் 1978 ஜனவரி 1979

இந்த நிழல்

பசுவய்யா


எங்கிருந்து ஆரம்பிக்கிறது இந்த நிழல்?

பாதத்தின் விளிம்பிலிருந்துதானா?
அல்லது அதன் அடியிலிருந்தா?

பூமியில் காலூன்றி நிற்கும் போது
நிழல்மேல்தான் நிற்கிறோமா?

காலைத் தூக்கிப் பார்க்கலாம்தான்

அந்த யோசனையை நான் ஏற்கவில்லை
பூமியில் நிற்கும்போது
எங்கிருந்து ஆரம்பிக்கிறது இந்த நிழல்
என்பதுதான் எனக்குத் தெரிய வேண்டும்.

Comments

பகிர்வுக்கு நன்றி.

தொடரக் காத்திருக்கிறோம்.
அழகும் ஆழமும் நிறைந்த பழைய கவிதைகளை மீண்டும் வாசிக்க அளித்தமைக்கு நன்றிகள்
Unknown said…
நிதர்சனம்..!
கவிதைகளைப் புலவர்களிடமிருந்து மீட்டு கவிஞர்களிடம் ஒப்படைத்த பெருமை மிகு சிறு பத்திரிகை பாரம்பரியத்தை, அதன் வழியே கண்டடைய நேர்ந்த நவீனங்களின் ஒற்றையடிப் பாதையை மீண்டும் நினைவுப் படுத்துவதோடு அல்லாமல் பரிந்துரையும் செய்கிறீர்கள் ஆசிரியரே..!
கோடி வணக்கங்கள்..
' ழ ' கவிதைகளைத் தொட்டுக் கொள்வதன் மூலம் எங்கள் பேனாவின் ஈரம் இன்னும் மினுமினுப்படையும் என்ற ஆவல் நிறைந்த நம்பிக்கையோடு காத்திருக்கிறோம்..