கடந்த ஒரு மாதமாக நாங்கள் சனி, ஞாயிறு தினங்களில் மட்டும் சுற்றிக்கொண்டிருப்போம்.  நயக்கரா பயணத்தின்போதுதான் அரவிந்த் 4 நாட்கள் எங்களை அழைத்துச் சென்றான்.  ப்ளோரிடா வந்திறங்கியபோது களைப்பு அசாதாரணமாகவே இருந்தது.  மலைப்பாகவும் இருந்தது.  நடக்கும்போது நான் பின் தங்கி நடப்பேன்.  அரவிந்தனுக்கு அதுவே படபடப்பாக இருக்கும்.  ''அப்பா, இவ்வளவு மெதுவாக நடப்பார் என்று நான் எதிர்பார்க்கவில்லை,'' என்பான் என் மனைவியிடம்.  திருமணமானபோதில் நான் மனைவியை விட வேகமாக நடப்பேன்.  கிண்டல் செய்வேன்.  ஆனால் இப்போதோ வேறு மாதிரி ஆகிவிட்டது.  பெரும்பாலும் இங்கே கார் எடுத்துக்கொண்டுதான் எல்லா இடங்களுக்கும் செல்ல வேண்டும்.  ஒரு பால், ஒரு தயிர் வாஙகக் கூட கார்தான்.  அமெரிக்காவில் சினிமா தியேட்டர்கள் எப்படி இருக்கிறது என்பதை அறிய ஆசை.  2 சினிமாக்களைப் பார்த்தேன். இரவு 10 மணிக்குமேல்தான் சினிமாவே போக முடிந்தது. சினிமார்க் என்ற இடம்.  அந்த ஒரு இடத்திலேயே 24 தியேட்டர்களில் சினிமாக்கள் ஓடிக் கொண்டிருந்தன.  ஒரு டிக்கட்டை வாங்கிக்கொண்டு எந்த சினிமாவையும் பா...